கேலக்ஸி டேப்லெட்டில் ஆன்ட்ராய்டை அப்டேட் செய்வது எப்படி?

Posted By: Staff

கேலக்ஸி டேப்லெட்டில் ஆன்ட்ராய்டை அப்டேட் செய்வது எப்படி?

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி டேப்லெட் பயன்படுத்தும் இந்தியப் பயனாளர்களுக்காக ஆன்ட்ராய்ட் ஜெல்லிபீன் அப்கிரேடை வழங்குகிறது. இதன் மூலம் "வாய்ஸ் காலிங்" என்ற வசதியைப்பெருவதுடன் பல மாற்றியமைக்கப்பட்ட வசதிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

 

இந்தியாவில் தற்பொழுது அதிகம் விற்பனை செய்யக்கூடிய டேப்லெட்களில் கேலக்ஸிதான் முதலிடம் பெறுகிறது.

 

ஜெல்லிபீன் அப்டேட் செய்வதால் தரம் உயர்த்தப்பட்ட உலவி மற்றும் பல பலன்களைப் பெறமுடியும்.

 

இதை அப்டேட் செய்வது எப்படி?

இந்த 350 MBக்கான அப்டேட்டை இரு முறைகளில் பெறமுடியும். ஒன்று OTA என்ற முறை மூலமோ அல்லது நாமே கூடச் செய்யலாம்.

செட்டிங்ஸ் மேனுவுக்குச் சென்று பின்வருமாறு தெரிவு செய்யவேண்டும்.

Settings → About → Software update.

படி 1: சாம்சங் கீஸ் என்ற அமைப்பை உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள்.

படி 2: உங்கள் சாம்சங் கேலக்ஸியை கணினியுடன் USB கேபிள் மூலமாக இணைக்கவும்.

படி 3: இணைத்தபின், ஜெல்லிபீன் அப்கிரேட் உள்ளதா எனச் சரிபார்க்கவும். இருந்தால் "Firmware Upgrade" என்ற பொத்தானை அழுத்தவும்.

படி 4: உங்கள் டேப்லெட்டில் உள்ள அனைத்து தரவுகளையும் நகலெடுத்து விட்டீர்களா என சரிபார்த்துக்கொள்ளவும்.

படி 5: அப்கிரேட் முடிந்தவுடன் உங்கள் டேப்லெட் ரீஸ்டார்ட் ஆகுமென்பதை நினைவில்கொள்க.

படி 6: அவ்வளவுதான்! கணினியுடனான தொடர்பைத் துண்டித்துவிட்டு கேபிளை அகற்றவும். ஜெல்லிபீன் அப்டேட் ரெடி!

சாம்சங் கேலக்ஸி டேப் 2வின் விலை ரூ.19,300 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot