சாம்சங் கேலக்ஸி நோட் 2வில் ஆன்ட்ராய்டின் ஜெல்லிபீனை அப்டேட் செய்வது எப்படி?

Posted By: Staff

சாம்சங் கேலக்ஸி நோட் 2வில் ஆன்ட்ராய்டின் ஜெல்லிபீனை அப்டேட் செய்வது எப்படி?

சிலதினங்களுக்கு முன் சாம்சங், கேலக்ஸி நோட் 2 பயனாளர்களுக்கு ஆன்ட்ராய்டின் ஜெல்லிபீன் 4.1.2வுக்கான அப்டேட்டை வெளியிட்டது. இதிலுள்ள நல்ல செய்தி என்னவெனில் இந்த அப்டேட்டை இந்தியா, வங்காளதேசம் மற்றும் இலங்கை பயனாளர்கள் மட்டுமே பெறமுடியும்.

ஜெல்லிபீன் அப்டேட் செய்வதால் தரம் உயர்த்தப்பட்ட உலவி மற்றும் பல பலன்களைப் பெறமுடியும்.

இந்த சாம்சங் கேலக்ஸி நோட் 2வில் ஆன்ட்ராய்டின் ஜெல்லிபீனை அப்டேட் செய்வது எப்படியென பார்க்கலாமா?

 

இந்த 262 MBக்கான அப்டேட்டை இரு முறைகளில் பெறமுடியும். ஒன்று OTA என்ற முறை மூலமோ அல்லது நாமே கூடச் செய்யலாம்.

 

படி 1: இதற்கான பிர்ம்வேரை டவுன்லோட் செய்துகொள்ளவும்.

 

படி 2: ஓடின் என்ற ஜிப் பைல் ஒன்றிருக்கும். அதை சாதாரண கோப்பாக மாற்றவேண்டும்.

 

படி 3: உங்கள் போனை அணைத்து வையுங்கள்.

 

படி 4: சிறிது நேரத்திலேயே கேலக்ஸி நோட் 2வுக்கான அப்டேட்கள் தொடங்கும். அப்பொழுது சப்தத்தை அதிகப்படுத்தும் கருவியின் பொத்தானை அழுத்தியவாறு பிடிக்கவேண்டும். இப்பொழுது ஒரு எச்சரிக்கை திரை திறக்கப்படும். அதிலிருந்து தரவிறக்கம் பகுதிக்குச் சென்றுவிடலாம்.

 

படி 5: பின்னர் Odin v3.07.exe என்ற கோப்பினை அழுத்தி மற்ற வேலைகளை தொடரவும்.

 

படி 6: இப்பொழுது உங்கள் கேலக்ஸி நோட் 2வை கணினியுடன் இணைக்கவும். இணைக்கப்பட்டது என்ற ஒரு செய்தி ஓடின்னில் கிடைக்கப்பெறும். இதன் மூலம் நீங்கள் சரியாகப்பொருத்தப்பட்டது உறுதியாகும்.

 

படி 7: N7100XXDLL4 என்ற கோப்பினை தேடியெடுக்கவும். பின்னர் PDA என்ற பொத்தானை அழுத்தவும். அதிலிருந்து வரும் மெனுவிலிருந்து கோட் என்றதை தெரிவு செய்யவும். பின்னர் போன், CSC, PIT ஆகிய பொத்தான்களை அழுத்தி தேவையான கோப்புகளைத் தெரிவுசெய்யவும்.

 

படி 8: ஓடின் திரையிலுள்ள ரீஸ்டார்ட் என்ற பொத்தானை அழுத்தினால் உங்கள் கேலக்ஸி நோட் 2வானது அப்டேட் செய்யப்படும்.

 

படி 9: பின்னர் செட்டிங்ஸ் பகுதிக்குச்சென்று போனின் தகவல்கள் இருக்கின்ற பகுதி இருக்குமல்லவா அதில் அப்டேட் செய்யப்பட்டதை உறுதி செய்துகொள்ளவும்.

ஜெல்லிபீன் அப்டேட் ரெடி!

 

Read This Article in English

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்