ஐபோன் குறிப்பு: தொலைந்த தொலைபேசி எண்களை திரும்பப்பெறுவது எப்படி?

Posted By: Staff

ஐபோன் குறிப்பு: தொலைந்த தொலைபேசி எண்களை திரும்பப்பெறுவது எப்படி?

தவறுசெய்வது மனித இயல்பு. தவறாக உங்கள் ஐபோனிலிருந்து நண்பர் அல்லது உறவினரின் தொலைபேசி எண்ணை அழித்துவிட்டால் என்னசெய்வது? வருந்தவேண்டாம் உங்களுக்கு உதவுகிறது Gizbot தளம்.

 

இரண்டு வழிகளில் ரெக்கவர் செய்யலாம். ஒன்று ஐடியூன்ஸ் மூலம் மற்றொன்று பேக்கப்பிலிருந்து. எப்படி செய்வதென்று பார்க்கலாமா?

 

ஐடியூன்ஸிலிருந்து திரும்ப எடுக்க:

படி 1: ஐடியூன்சை உங்கள் கணினியில் திறக்கவும்.

படி 2: ஐபோனை கணினியுடன் இணைக்கவும்.

படி 3: பின்னர் வரும் திரையில் "Devices" என்ற பொத்தானை இடது கிளிக் செய்யவும். அதில் வரும் மெனுவிலிருந்து "ரீஸ்டோர் ப்ரம் பேக்கப்" என்பதைத் தெரிவுசெய்யவும்.

படி 4: ஐபோனை கணினியிலிருந்து எடுத்துவிடுங்கள். உங்கள் தொலைப்பேசி எண்கள் இப்பொழுது திரும்பக்கிடைத்திருக்கும்.

 

பேக்கப்பிலிருந்து திரும்ப எடுக்க:

படி 1: பேக்கப்பைத் திறக்கவும்.

படி 2: தொலைப்பேசிப் புத்தகம் வரும். அதிலிருந்து "இம்போர்ட்" என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

படி 3: தொலைப்பேசி எண்கள் இப்பொழுது திரும்பக்கிடைத்திருக்கும்.

 

உபயோகமாக இருந்ததா?

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot