விண்டோஸ் போன் பிரச்சனைகளை எளிதாக சரி செய்வது எப்படி

Posted By:

இந்தியாவில் ஸ்மார்ட்போன்களின் விற்பனையை பொருத்த வரை 2014 ஆம் ஆண்டு சிறப்பாகவே அமைந்தது. இன்று உலகளவில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது, இந்த நிலையில் இந்தியாவில் பல நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

விண்டோஸ் போன் பிரச்சனைகளை எளிதாக சரி செய்வது எப்படி

ஸ்மார்ட்போன் சந்தையில் பல நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தினாலும் அதன் வெற்றி தோல்விகளை நிர்ணயம் செய்து வாடிக்கையாளர்கள் தான். அந்த வகையில் இந்தியாவில் ஆன்டிராய்டு ஸ்மார்ட்போன்களின் விற்பனை அதிகம் நடைபெறுவதாக சமீபத்தில் வெளியான சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கும் நிலையில் கூகுளின் ஆன்டிராய்டு இயங்கு தளத்திற்கு பின் மக்கள் விண்டோஸ் போன்களை அதிகம் பயன்படுத்துவதாகவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

அந்த வகையில் விண்டோஸ் போன்களில் அதிகம் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் அவைகளை எப்படி சரி செய்வது என்பதையும் தான் இங்கு நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள்..

கருப்பு திரை

விண்டோஸ் போன்களில் அழைப்புகளை மேற்கொள்ளும் போது திரை கருப்பு நிறத்தில் மாறுகின்றதா, இந்த பிரச்சனையை சரி செய்வது எப்படி என்று பாருங்கள்.

தீர்வு

இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம் ப்ராக்ஸிமிட்டி சென்சார் தான். இந்த சென்சார் முன்பக்க கேமராவிற்கு அருகில் இடம் பெற்றிருக்கும். இந்த சென்சாரை உங்களது திரை பாதுகாப்பு படிவம் (ஸ்கிரீன் கார்டு) மறைத்துள்ளதா என்பதை சரி பாருங்கள். இந்த பகுதியில் தூசி இருந்தாலும் இந்த பிரச்சனை ஏற்படலாம், அதனால் ப்ராக்ஸிமிட்டி சென்சார் பகுதியை சுத்தமாக வைத்திருந்தல் அவசியம், இந்த பிரச்சனை சரியாகி முடியும்.

கேமரா வேலை செய்யவில்லை

சில சமயங்களில் கேமரா பட்டன் அல்லது கேமரா செயளி பட்டன் வேலை செய்யாமல் போகலாம், இந்த சமயத்தில் கேமரா வேலை செய்யவில்லை என்பதை விளக்கும் தகவல் ஸ்கிரீனில் தெரியும்.

இதற்கு உங்களது விண்டோஸ் போனை ரீஸ்டார்ட் செய்வது நல்லது. ரீஸ்டார்ட் ஆகும் போது கேமரா வேலை செய்யும், ஆனால் திரும்பவும் இந்த பிரச்சனை நிகழ அதிக வாய்ப்புகள் இருக்கின்றது.

தீர்வு

இந்த பிரச்சனையை முழுமையாக சரி செய்ய உங்களது விண்டோஸ் போனின் மென்பொருள் அப்டேட் செய்யப்பட்டுள்ளதா என்பதை சரி பாருங்கள், போனில் இருக்கும் முக்கிய ஃபைல்களை பேக்கப் செய்து ரீசெட் செய்து பாருங்கள். ரீசெட் செய்ய போனின் செட்டிங்ஸ் - அபவுட் - ரீசெட் போன் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள். இம்முறை இந்த பிரச்சனை நிச்சயம் சரி செய்யப்பட்டு விடும். திரும்பவும் இந்த பிரச்சனை ஏற்பட்டால் போனை சம்மந்தப்பட்ட உற்பத்தியாளரிடம் கொண்டு செல்லுங்கள்.

ஸ்கிரீன் வேலை செய்யவில்லை

திடீரென விண்டோஸ் ஸ்கிரீன் வேலை செய்யவில்லையா, இதற்கு பல காரணங்கள் இருக்கலாம் ஆனால் தீர்வு ஒன்று தான்.

தீர்வு

முதலில் வால்யூம் டவுன் மற்றும் பவர் பட்டன்களை ஒரே சமயத்தில் சுமார் 10 விணாடிகளுக்கு தொடர்ந்து அழுத்துங்கள், மொபைல் ரீஸ்டார்ட் ஆன பின்பு சரியாக வேலை செய்யும்.

அடுத்து போனில் புதிய அப்டேட் உள்ளதா என்பதை பாருங்கள், இதை மேற்கொள்ள ஆப் லிஸ்ட் - செட்டிங்ஸ் - போன் அப்டேட் - சென்று அப்டேட்களை சரி பாருங்கள்

பேட்டரி

சிலர் தங்களது விண்டோஸ் போன்களின் பேட்டரி சீக்கிரம் தீர்ந்துவிடுவதாக புகார் கூறுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் செயளிகள் தான், பொதுவாக பேட்டரி அதிக நேரம் பயன்படுத்த போனின் என்எப்சி, வைபை, மொபைல் டேட்டா ஆகியவற்றை ஆஃப் செய்து வைக்கலாம்.

தீர்வு

ஸ்கைப், மற்றும் பேஸ்புக் செயளிகளை அன்-இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்யதால் நல்ல தீர்வு கிடைக்கும்.

இந்த பிரச்சனைக்கு நோக்கியா தரப்பில் கூறப்பட்டது, வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் செயளிகளை பேக் பட்டன் கொண்டு வெளியேறினால் செயளிகள் பின்புறம் இயங்காது. இதை மேற்கொள்ள செட்டிங்ஸ் - அப்ளிகேஷன் - பின்புறம் இயங்கும் செயளிகளை தடுக்க கோரும் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

தானாக ரீபூட் ஆகின்றது

கடந்த ஆண்டின் இறுதியில் பலரும் இந்த பிரச்சனையை சந்தித்தனர், நல்ல வேலையாக இது போனுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை, எந்த வித எச்சரிக்கையும் இல்லாமல் போன் தானாக ரீஸ்டார்ட் ஆகிவிடும்.

தீர்வு

இந்த பிரச்சனையை சரி செய்ய மைக்ரோசாப்ட் கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்காவில் மட்டும் OTA அப்டேட் வழங்கியது, இது பிரச்சனையை சரி செய்ததாக கூறப்பட்டாலும் சிலர் இந்த அப்டேட் செய்யப்பட்ட பின்பும் ரீபூட் பிரச்சனை ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

இந்த பிரச்சனையை முழுமையாக சரி செய்ய பேக்ட்ரி ரீசெட் ஒன்று தான் கடைசி தீர்வு, இதை மேற்கொள்ள ஆப் லிஸ்ட் - செட்டிங்ஸ் - பேக்கப் மற்றும் ஆப் லிஸ்ட் தேர்வு செய்து பேக்கப் செய்யுங்கள், அதன் பின் அபவுட் - ரீசெட் போன் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்.

இது போன்ற தொழில்நுட்ப குறிப்புகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

உங்களது சந்தேகங்களை எங்களது முகநூல் பக்கத்தில் தெரிவிக்கலாம்.

English summary
problems with Windows Phone 8, and how to fix them. Here you will come to know about most common problems with windows phones and some easy steps to fix them.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot