நானோ வாட்டர் பில்ட்டர்! 1லி தண்ணிர் 5 பைசா மட்டுமே!
தற்போது உலகில் அதிகமாக பரவி வரும் ஒரு தொழில்நுட்பம் நானோ டெக்னாலஜி.
தற்போது நானோ' தொழில்நுட்ப முறையில்(Nano filter), 500 ரூபாய்க்கே குடிநீரை சுத்திகரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார் பிரதீப்.
இவர் மெட்ராஸ் ஐ.ஐ.டி.,யில், வேதியியல் துறை பேராசிரியராக பணியாற்றுகிறார்.
மேலும் ஒருவர் சுத்தமான நீரைக் குடிக்க, ஒவ்வொரு மாதமும்,1,000 ரூபாய்க்கும் மேல் செலவாகும் சூழ்நிலை உள்ளது. மனிதனின் அடிப்படைத் தேவையான குடிநீர், குறைந்த விலையில் கிடைக்க, இலர் ஐந்து ஆண்டுகளாக மேற்கொண்ட முயற்சியில், நானோ தொழில்நுட்ப முறையில், ஒரு இயந்திரம் கண்டுபிடித்தார்.
முதலில் வைரஸ், பாக்டீரியா போன்றநுண்கிருமிகளை அழித்த பின், இரண்டாம் கட்டமாக ஆர்சானிக், ஈயம், இரும்பு போன்ற, தேவையற்ற உலோகங்களை நீக்கி பின்னர் சில்வர் நானோ துகள்களிலிருந்து கிடைக்கும், "வெள்ளி அயனிகள்' நீரில் உள்ள நுண்கிருமிகளை அழித்து, நீரைச் சுத்தப்படுத்தும.
வெள்ளி அயனிகளை நேரடியாக நீரில் சேர்ப்பதால், நுண்கிருமிகள், கனிமங்கள், தாதுக்கள் போன்றவை, அதன் சுத்தப்படுத்தும் செயல்திறனை குறைத்துவிடும் என்பதால், அதற்கான மாற்றுமுறையைக் கண்டுபிடித்துள்ளார்.
அலுமினியம் ஆக்சிஹைட்ராக்சைடு என்ற, களிமண் போன்ற பொருளால், 50 நானோ மீட்டர் நீளமும், 30 நானோ மீ., அகலமுள்ள கூண்டு செய்து, அதனுள் வெள்ளி அயனியை வைத்து,"உயிரி பாலிமர்' பொருளால் மூட வேண்டும்.
இதனால், வெள்ளி அயனியை, நீரில் உள்ள நச்சு பொருட்கள் நேரடியாக தாக்க முடியாததால், வெள்ளி அயனி விரைந்து செயல்பட்டு, நீரின் நுண்கிருமிகளை அழிக்கிறது. இதே முறையில், மற்ற அயனிகளை பயன்படுத்தி, தேவையற்ற உலோகங்களை நீக்கலாம்.
இச்சுத்திகரிப்பு இயந்திரத்தை, வீட்டில் பயன்படுத்தி, நீரைச் சுத்திகரித்துக் குடிக்கலாம். ஆண்டிற்கு ஒரு முறை கூண்டை மாற்றினால் போதும்.
தொடர்ந்து பயன்படுத்தலாம்.
இதன் விலை, 120 ரூபாய். கிராமப்புப் பெண்களுக்கு இத் தொழில்நுட்பப் பயிற்சி கொடுத்தால், வேலைவாய்ப்பு அதிகரிப்பதுடன், சுத்தமான குடிநீரை, லிட்டருக்கு, 5 பைசாவிற்கே தரமுடியும்.
இதோ அந்த பில்ட்டரின் படங்கள்....
Click Here For New Concept Smartphones Gallery

நானோ வாட்டர் பில்ட்டர்
நானோ வாட்டர் பில்ட்டரின் படங்கள்

நானோ வாட்டர் பில்ட்டர்
நானோ வாட்டர் பில்ட்டரின் படங்கள்

நானோ வாட்டர் பில்ட்டர்
நானோ வாட்டர் பில்ட்டரின் படங்கள்

நானோ வாட்டர் பில்ட்டர்
நானோ வாட்டர் பில்ட்டரின் படங்கள்

நானோ வாட்டர் பில்ட்டர்
நானோ வாட்டர் பில்ட்டரின் படங்கள்


Click it and Unblock the Notifications