மோட்டோ ஜி ஸ்மார்ட்போனில் அதிகம் ஏற்பட்ட பிரச்சனைகள் அவற்றை சரி செய்ய எளிய வழிமுறைகள்

Posted By:

தற்சமயம் ஸ்மார்ட்போன்கள் அதிகளவில் விற்பனையானாலும் அவற்றில் நிறைய பிரச்சனைகள் ஏற்படத்தான் செய்கின்றன, இதற்கு மோட்டோ மட்டும் விதிவலக்கா என்ன. உலகம் முழுவதிலும மோட்டோ ஜி விற்பனை அமோகமக நடைபெற்று வருகின்றது.

[மிகவும் உபயோகமான கணினி தொழில்நுட்ப போக்குகள்]

அந்த வகையில் அவற்றில் சில தொழில்நுட்ப கோளாறுகளும் ஏற்படத்தான் செய்கின்றன. அந்த வகையில் இன்று மோட்டோ ஜி பயனாளிகள் சந்திக்கும் தொழில்நுட்ப கோளாறுகளுக்கு பதில் அளிக்கும் விதமாக மோட்டோ ஜி ஸ்மார்ட்போனில் ஏற்படும் பிரச்சனைகளை சுலபமாக சரி செய்வது எப்படி என்று பார்ப்போமா...

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
பேட்டரி

1

திடீரென பேட்டரியில் சார்ஜ் இறங்கி விடுகின்றதா, இதை சரி செய்ய பேட்டரியை முழுவதும் காலியாக விட்டு பின் 100 சதவீதம் பேட்டரியை நிரப்புங்கள், சில முறை இவ்வாறு செய்தால் விரைவில் பேட்டரி பிரச்சனை சரியாக விடும்

சிம் கார்டு

2

மோட்டோ ஜி கிட்காட் அப்டேட் செய்தவுடன் சிம் கார்டு வேலை செய்யாவிட்டால் வேறு சிம் கார்டை பயன்படுத்துங்கள் அப்படியும் வேலை செய்யாவிட்டால் அடாப்டர் இல்லாத நானோ சிம் கார்டு பயன்படுத்துங்கள்

கேமரா

3

கேமரா அப்ளிகேஷன்களை பயன்படுத்தும் போது கேமரா சரியாக வேலை செய்யாவிட்டால், செட்டிங்ஸ் - ஆப்ஸ் - கேமரா சென்று போர்ஸ் ஸ்டாப் க்ளிக் செய்து க்லியர் கேச்சி மற்றும் க்ளியர் டேட்டா கொடுங்கள்

ரீபூட்

4

நிறைய மோட்டோ ஜி போன்கள் அடிக்கடி போன் ரீபூட் ஆவது குற்றம்சாட்டப்படுகின்றது, இதற்கு போனை பேக்கப் அன்டு ரீசெட் செய்து பார்க்கலாம்

எல்ஈடி நோட்டிபிகேஷன்

5

பலரும் தங்களது மோட்டோ ஜியில் எல்ஈடி நோட்டிபிகேஷந் வேலை செய்வதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர், இதை எதிர்கொள்ள மோட்டோரோலாவின் நோட்டிபிகேஷன் லைட் விட்ஜெட் இன்ஸ்டால் செய்து பார்க்கலாம்

பேட்டரி சார்ஜ்

6

மோட்டோ ஜி பேட்டரி சார்ஜ் ஆக நிறைய நேரம் எடுத்து கொள்கின்றதா, இது ஹார்டுவேர் பிரச்சனை தான் சரி செய்ய யுஎஸ்பி கேபிளை மாற்றினால் போதுமானது

சைடு லோடிங் ஆப்ஸ்

7

மோட்டோ ஜியின் தனித்துவம் வாய்ந்த அம்சமாக கருதப்படும் சைடு லோடிங் ஆப்ஸ் சரியாக வேலை செய்யாத சமயத்தில் மோட்டோ ஜி செட்டிங்ஸ் - செக்யூரிட்டி - தனியார் ஆப்ஸ்களை அனுமதியுங்கள்

வைபை கனெக்ஷன்

8

கிட்காட் அப்டேட் செய்த பின் வைபை கனெக்ஷன் சரியாக வேலை செய்வில்லை என்றால் சரியான பர்ம் வேர் இந்ஸ்டா் செய்து பாருங்கள்

ஸ்பீரக்கர்

9

ஸ்பீக்கர் பின்பக்கம் பொருத்தப்பட்டிருப்பதால் உங்களுக்கு சரியாக சத்தம் கேட்காமல் இருக்கலாம், இதற்கு செட்டிங்ஸ் - சவுன்டு - ஆடியோ எபெக்ட் சென்று உங்களுக்கு ஏற்ற வடிவமைப்பை பயன்படுத்தலாம்

சத்தம்

10

சிலருக்கு இந்த பிரச்சனை ஏற்படலாம், மோட்டோ ஜி வித்தியாசமாக சத்தம் கொடுக்கின்றது அதிலும் வைப்ரேடச் ஆகும் போது அதிக சத்தம் ஏற்பட்டால் மோட்டோ கேர் செல்வது சிறந்தது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Most Common Moto G Problems and its Solutions. Here you will find some common Moto G Problems and its solutions.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot