TRENDING ON ONEINDIA
-
டெல்லி உட்பட வட மாநிலங்களை குலுக்கிய நில அதிர்வு.. மக்கள் பீதி
-
டோல்கேட் விஷயத்தில் மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்... லோக்சபா தேர்தல் நெருங்குவதால் மெகா திட்டம்...
-
Yogi Babu:அடம்பிடிக்கும் வடிவேலு: இம்சை அரசன் ஆகும் யோகி பாபு?
-
லெஸ்பியன், கே போன்றோருக்கு எப்படிப்பட்ட பாலியல் ரீதியான பிரச்சினைகள் உண்டாகும்?
-
சென்னை பெரியமேடு லாட்ஜ் படுக்கை அறையில் இரகசிய கேமராகள்.! உஷார் மக்களே
-
முக்கிய வீரர் யார்? கோலியா? தோனியா? முகமது கைஃப் யாரை சொன்னார் தெரியுமா?
-
பாக் பொருளாதாரத்துக்கு நரம்படி கொடுத்த இந்தியா..? Most Favored Nation ஸ்டேட்டஸால் என்ன ஆகும்..?
-
புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா? அடக் கடவுளே!
ஸ்மார்ட்போன் பிரச்சனைகளை எளிமையாக சரி செய்வது எப்படி..??
எந்த ஒரு பொருளும் புதிதாக வாங்கும் போது கொஞ்சம் தயக்கம் மற்றும் குழப்பம் இருக்க தான் செய்யும், ஆனால் குறிப்பிட்ட பொருள் பயன்படுத்த துவங்கி அது பழகி போனால் நிலைமை முற்றிலும் மாறி விடும்.
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் முன் கவனிக்க வேண்டிய அம்சங்கள்..!!
அப்படி இருக்க ஸ்மார்ட்போன் மட்டும் விதி விலக்கா என்ன, தினசரி வாழ்வில் இன்றியமையாத கருவியாக இடம் பிடித்திருக்கும் ஸ்மார்ட்போன் உடைந்தாலோ அல்லது வேறு ஏதும் பிரச்சனை ஏற்பட்டாலோ உடனடியாக சரி செய்வது எப்படி என்பதை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..
ஸ்கிரீன்
திரையில் க்ராக் ஏற்பட்டு விட்டதா, வெள்ளை நிற பற்பசை (பேஸ்ட்) பயன்படுத்தி அதனை சரி செய்யலாம். மீதம் இருக்கும் பற்பசையை சுத்தமான துணியை கொண்டு நீக்கி விடலாம்.
அப்பச்சோடா
இரு மடங்கு சோடாவில் ஒரு பங்கு நீர் சேர்த்து பசை பதத்திற்கு வரும் வரை பிசைந்து, இக்கலவையை மைக்ரோஃபைபர் துணியில் சிறிதளவு வைத்து திரையில் ஏற்பட்டிருக்கும் ஸ்க்ராட்ச் பகுதியில் வட்ட வடிவில் துடைக்க வேண்டும்.
உப்பு காகிதம்
போனில் ஸ்க்ராட்ச் ஆன இடங்களில் உப்பு காகிதத்தை கொண்டு மென்மையாக துடைத்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
ஃபெவி க்விக்
போனின் ப்ளாஸ்டிக் பகுதிகளில் ஏதும் ஸ்க்ராட்ச் அல்லது பிளவு ஏற்பட்டால் ஃபெவி க்விக் பயன்படுத்தி அவைகளை ஒட்டி கொள்ளலாம்.
வெயில்
போன் நீரில் விழுந்து விட்டாலோ அல்லது மழையில் நனைந்தாலோ அதனினை கழற்றி வெயிலில் காய வைக்க வேண்டும்.
சார்ஜர்
போன் ஈரமாக இருக்கும் போது அதனினை சார்ஜரில் போடவே கூடாது.
அரிசி
காய வைத்த பின் அதனினை வேகாத அரிசியில் புதைத்து வைத்தால் அதனுள் இருக்கும் நீர் துளிகளை அரிசி ஈர்த்து கொள்ளும்.
டிரையர்
எக்காரணத்தை கொண்டும் நீரில் விழுந்த போனினை டிரையர் அல்லது ப்ளோயர் கொண்டு காற்றின் மூலம் நீரை அகற்ற கூடாது. இவ்வாறு செய்யும் போது போனின் உள்பாகங்களில் நீர் புகும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றது.
ஜாக்
போனின் ஹெட்போன் ஜேக் சுத்தம் செய்ய காட்டன் பட்ஸ்களை பயன்படுத்தலாம்.
முகநூல்
மேலும் பல தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.