ஸ்மார்ட்போன் பாதிப்பில் இருந்து தப்பிக்க வழி முறைகள்.!!

Written By: Aruna Saravanan

டிஜிட்டல் திரையியை மிக அருகில் இருந்து பார்த்து கொண்டிருந்தால் கண்ணுக்கு தீமை என்று நமக்கு நன்றாக தெரியும். ஆகையால்தான் பெற்றோர்கள் பிள்ளைகளிடம் டிவியை மிக அருகில் இருந்து பார்க்க கூடாது என்று கண்டிப்பாக கூறுகின்றனர். தொழில்நுட்பம் வளர வளர டிஜிட்டல் திரையும் பல வழிகளில் வளர்ந்து வருகின்றது.

சில வருடங்களுக்கு முன் டிவியில் மட்டுமே பார்க்க முடிந்த டிஜிட்டல் திரையை இப்பொழுது ஸ்மார்ட்போன், ஐபாட், டேப்ளெட், கைகளால் விளையாடும் கேம்ஸ் போன்ற பலவற்றில் காண முடிகின்றது. அதிலும் கணினி போன்றவற்றில் அதிக நேரம் செலவிட வேண்டி உள்ளது. இத்தகைய சூழலை தடுக்க முடியாது. ஆனால் அவைகளால் கண்களுக்கு எந்த பாதிப்பும் வராமல் பார்த்து கொள்ள முடியும் அள்ளவா. அதை பற்றி இங்கு காண்போம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
காட்சியின் பிரகாசத்தை சரி செய்யவும்

display

உங்கள் டிவைஸை பயன்படுத்தும் போது டிஸ்ப்ளேவின் பிரகாசத்தை சூழ்நிலைக்கு ஏற்ப சரி செய்யவும். இதை ஸ்மார்ட்போன் அல்லது டேப்ளெட்களில் ஆட்டோமேட்டிக்காவோ அல்லது கைகளாலோ சரி செய்ய முடியும். இதற்கென்று வரும் ஆப்ஸ்களை கொண்டும் சூழலுக்கு ஏற்ற வெளிச்சத்தையும் வேண்டிய பிரகாசத்தையும் சரி செய்து கொள்ள முடியும்.

ஸ்மார்ட்போனை தள்ளி பிடியுங்கள்

தள்ளி பிடி

ஸ்மார்ட்போனை கண்ணுக்கு மிக அருகில் வைத்து பயன்படுத்தாமல் சற்றி தள்ளி வைத்து பயன்படுத்துவது நல்லது. பலர் முகத்திலிருந்து 8 இன்ச் தொலைவில் போனை வைத்து பயன்படுத்துகின்றனர். ஆனால் 15 இன்ச்கள் தொலைவாவது இருத்தல் மிக மிக அவசியம் ஆகின்றது.

20-20-20 விதி

விதி

திரையை பார்க்கும் பொழுது ஒவ்வொரு 20 நிமிடத்திற்கு ஒருமுறை 20 நொடிகளுக்கு இடைவேளை எடுத்து ஏதாவது கண்ணுக்கு குளுமையானவற்றை பார்த்தல் அவசியம். அதுவும் 20 அடி தள்ளி இருப்பவற்றை பார்ப்பது மிக மிக அவசியம்.

கண்ணை அடிக்கடி சிமிட்டவும்

கண்

கண்களை அடிக்கடி சிமிட்டுவதால் கண்களுக்கு தேவையான ஈரப்பதத்தை கொடுப்பதுடன் கண்கள் உலர்ந்து போவதை தடுக்கவும் முடியும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

மூக்கு கண்ணாடி அணியவும்

மூக்கு கண்ணாடி

நீங்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் போது கண்ணாடி அணிந்து படிக்க பழகி கொள்ளுங்கள். அல்லது உங்கள் மொபைலில் ஆண்டி-க்லேர் அதாவது கண்ணுக்கு பாதிப்பு வராமல் காக்கும் கோட்டிங் இருக்கின்றதா என்று கவனியுங்கள். இல்லையென்றால் அதை வாங்கி பயன்படுத்தி கண்ணை பாதுகாத்து கொள்ளுங்கள்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Read here in Tamil some Important Tips To Protect Your Eyes While Using Smartphones.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot