யூபர் டாக்ஸி ஆப் பயன்படுத்துவது எப்படினு இங்க பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்
யூபர் பற்றி உங்களுக்கு தெரியுமா, இது ஆன்டிராய்டு மற்றும் ஐபோன்களில் பயன்படுத்தப்படும் ஆப். இந்த ஆப் மூலம் நீங்க பயனம் செய்ய எளிமையான முறையில் கார் முன்பதிவு செய்யலாம். இதோடு பயனம் செய்த தொகையை க்ரெடிட் கார்டு மூலம் செலுத்தும் வசதியும் உள்ளது.
யூபர் பயன்படுத்துவது எப்படினு தெரியுமா, இல்லையென்றால் அடுத்து வரும் ஸ்லைடரில் யூபர் பயன்படுத்தும் வழிமுறைகளை பாருங்கள்.

#1
முதலில் யூபர் இணையதளம் செல்லுங்கள்

#2
இப்போ புதிதாக அக்கவுன்ட் ஓபன் செய்யுங்கள், இங்கு உங்க பெயர், மொபைல் நம்பர், மின்னஞ்சல் முகவரி, மொழி மற்றும் பணம் செலுத்தும் தகவல்களை குறிப்பிட வேண்டும், மேலும் யூபர் பயன்படுத்த உங்களிடம் தகுந்த க்ரெடிட் கார்டு இருக்க வேண்டும்

#3
யூபரின் நிபந்தனைகளை நன்கு தெரிந்து கொண்டு அதன் பின் தொடரவும்

#4
இப்போ உங்க அக்கவுன்ட் துவங்கப்பட்டு அதற்கான மின்னஞ்சல் உங்களுக்கு அனுப்பப்படும். இப்போ உங்களால் யூபர் சேவையை பயன்படுத்த முடியும்.

#5
இந்த யூபர் ஆப் கூகுள் ப்ளே ஸ்டோர், ஆப்பிள் ஆப் ஸ்டோர் மற்றும் ப்ளாக்பெரி ஆப் வேர்ல்டுகளில் இலவசமாக கிடைக்கின்றது. முதலில் இந்த அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்து அதன் பின் ஓபன் செய்யவும்

#6
அப்ளிகேஷநை பதிவிறக்கம் செய்தவுடன் முதல் முறை பயன்படுத்த சைன் செய்ய வேண்டும்

#7
யூபர் சேவைகளில் ஐந்து விதமான வாகன சேவைகள் இருக்கின்றன.
ப்ளாக் கார் - இது யூபரின் சேவை, ப்ளாக் கார் சேவையை தேர்வு செய்தால், 4 பேர் பயனம் செய்ய கூடிய செடான் கார் உங்களுக்கு அனுப்பப்படும்
டாக்ஸி - இது யூபருடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட சாதாரண டாக்ஸி ஒன்று அனுப்பப்படும்
யூபர் எக்ஸ் - இது உங்க இருப்பிடத்திற்கு தினமும் ஒரு கார் அனுப்பும், இது யூபரின் பட்ஜெட் சேவை
SUV - இந்த சேவையில் 6 பேர் அமர கூடிய SUV அனுப்பப்டும், இது சற்று விலை அதிகமாகும்
LUX - இந்த சேவையில் உங்களுக்கு விலை உயர்ந்த ஆடம்பர கார் அனுப்பப்படும். இது தான் யூபரின் விலை அதிகமான சேவை

#8
உங்களுக்கு தேவையான வாகனத்தை தேர்வு செய்த பின் நீங்கள் போக வேண்டிய இடத்தை பதிவு செய்ய வேண்டும்

#9
இப்போது உங்களுக்கு கார் கிடைக்கும் நேரம் தெரியும், அதுவரை காத்திருக்க வேண்டும், குறிப்பிட்ட நேரம் ஆன பின்பும் கார் வரவில்லை என்றால் சிறிது நேரம் காத்திருக்க வேண்டும்.

#10
நீங்க பயனிக்கும் நேரம் மற்றும் தூரத்தை கருத்தில் கொண்டு விலை பட்டியல் மாறும். சரியான விலை பட்டியலை தெரிந்து கொள்ள யூபர் தளத்தை அனுகவும்

#11
பண செலுத்தும் முறை எப்பவும் க்ரெடிட் கார்டுகளில் தான் மேற்கொள்ளப்படுகின்றது, கூடுதலாக 20 சதவீதம் ஓட்டனருக்கு டிப்ஸ் தானாக உங்களது பில் தொகையில் சேர்ந்து விடும்

#12
உங்களிடம் யூபர் ஆப் இல்லை என்றால் யூபர் மொபைல் சைட் சென்றோ அல்லது மொபைல் மூலம் உங்க இருப்பிடத்தின் முகவரியை UBR222 என்ற எண்னுக்கு அனுப்பினால் வேலை முடிந்தது.


Click it and Unblock the Notifications