கணினியில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் பயன்படுத்தலாம்.!!

Written By: Aruna Saravanan
  X

  ரீமிக்ஸ் ஓஎஸ் மென்பொருள் ( Remix OS ) ஆண்ட்ராய்டு அனுபவத்தை கணினிக்கு கொண்டு வருகின்றது. இதனால் விண்டோஸ் போன்றே ஆண்ட்ராய்டு இயங்குதள அனுபவத்தை கணினியில் பெற முடியும்.

  இந்த Jide Remix Os 700MB file ஆனது டவுன்லோட் செய்வதற்கு உதவுகின்றது. புதிய மென்பொருள் பயன்பாட்டாளர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும். Android-x86 project இது அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப் பட்டுள்ளது. இதற்கு 64-bit CPU தேவைப்படும். இதற்கான flash-drive20mb/sec USB 3.0 வேகம் கொண்டது. அதுவும் பூட் ஆப்ஷனுடன் தேவைப்படுகின்றது இது ஆரம்பகாலத்தில் இருப்பவர்களுக்கு என்று தனி தன்மையுடன் வடிவமைக்க பட்டுள்ளது. இது முற்றிலும் நுண்ணிய தொழில்நுட்பம் சார்ந்தது. நீங்கள் இதை நிறுவும் பொழுது உங்கள் டிவைஸ் பழுதானால் நாங்கள் பொருப்பல்ல.

  இங்கே Remix OS USB stickஐ எப்படி டெஸ்க்டாபில் பயன்படுத்துவது என்பது பற்றி காண்போம்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  கணினி

  Jide இணையதளத்தில் இருந்து ரீமிக்ஸ் ஓஎஸ் நிறுவ வேண்டிய தரவுகளை டவுன்லோட் செய்யவும்.

  யுஎஸ்பி

  சிறந்த தொடர்பிற்காக 20MB/s கொண்ட யுஎஸ்பி வகையை Jide பரிந்துரைக்கின்றது. சேமிக்கும் இடத்திற்காக 8GBக்கு மேல் உள்ள Pendriveஐ பயன்படுத்தவும்.
  குறிப்பு: Remix OS driveஐ உருவாக்குவதால் USB stickஇல் உள்ள எல்லா தரவுகளும் நீங்கி விடும்.

  ரீமிக்ஸ் ஓஎஸ்

  ரீமிக்ஸ் ஓஎஸ் யுஎஸ்பி உருவாக்க கீழே உள்ள வழிகளை பின்பற்றவும்.
  1. காலியான யுஎஸ்பியை ப்ளக் இன் செய்யவும்
  2. கணினிக்காக ரீமிக்ஸ் ஓஎஸ் இல் கோப்புகளை எடுக்கவும்.
  3. RemixOS USB Tool executable fileஐ லான்ச் செய்யவும்
  4. "ISO"விற்கு அடுத்துள்ள Browse button கிலிக் செய்து Remix ISO fileஐ தேர்ந்தெடுக்கவும்.
  5. யுஎஸ்பி டிஸ்க்கிற்கு அடுத்து நீங்கள் ப்ளக் இன் செய்த யுஎஸ்பியுடன் சார்ந்த டிரைவ் லெட்டரை தேர்ந்தெடுக்கவும். பிறகு OK கொடுக்கவும்.

  Boot Live Session

  யுஎஸ்பியில் இருந்து பூட் ஆகும் தன்மை தற்பொழுது பல கணினிகளில் உள்ளது. ஆனால் அதை சரி பார்த்து கொள்வது அவசியம். லைவ் செஷனில் இருந்து ரீமிக்ஸ் ஓஎஸ்'ஐ பயன்படுத்த இரண்டு மோட்கள் உள்ளன.
  கெஸ்ட் மோட்: இது ரீமிக்ஸ் ஓஎஸ் எப்படி செயல் புரிகின்றது என்பதன் பிரிவியூவை கொடுக்கும்.
  ரெசிடென்ட் மோட்: இது உங்கள் யுஎஸ்பியின் போர்டபிள் கணினியாக நடத்தும். நீங்கள் எந்த கணினியில் பொருத்தி இருந்தாலும் நிறுவிய ஆப் மற்றும் செட்டிங்கை நினைவில் வைத்திருக்கும்.

  நிறுவுதல்

  கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது அதை சார்ந்த கூகுள் ஆப்ஸ்களுடன் ரீமிக்ஸ் ஓஎஸ் பொருத்தப்பட்டு வருவதில்லை. எப்படி இருந்தாலும் ஏபிகே மிரரில் ( APK Mirror ) இருந்து நீங்கள் டவுன்லோட் செய்து பொருத்தி கொள்ள வேண்டும். அதற்கு கீழே உள்ள வழிகளை பின்பற்றுங்கள்.
  1.ஏபிகே மிரரில் செயலியை தேடவும்
  2. ரீமிக்ஸ் ஓஎஸ் ஆண்ட்ராய்ட் 5.1.1ஐ ரன் செய்யும். ஆகையால் ஆண்ட்ராய்டுக்கு பொருந்தக்கூடிய சரியான செயலியின் வெர்ஷனை தேர்ந்தெடுப்பது அவசியம்
  3. செட்டிங் செயலியை திறந்து செக்யூரிட்டியை சரிபார்த்து "Unknown sources" இடமிருந்து installation செயல் படுத்தவும்.
  4. இப்பொழுது APKMIrror இடமிருந்து பெற்ற APk fileஐ நிறுவவும்
  5. இனி டெஸ்க்டாப் கணினிலும் ஆண்டராய்டு அனுபவிக்க முடியும்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  Read more about:
  English summary
  Read Here in Tamil How To Use Android On Your Desktop.

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more