மோட்டோ ஜி ஜென் 3 கருவியில் மார்ஷ்மல்லோ அப்டேட் பெறுவது எப்படி??
மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி ஜென் 3 பயனர்களுக்கு புத்தாண்டு பரிசாக ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ அப்டேட் வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த தகவலினை மோட்டோரோலா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மோட்டோ ஜி ஜென் 3 கருவியானது ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1.1 இல் இருந்து ஆண்ட்ராய்டு 6.0 விற்கு அப்டேட் செய்யப்படும். இந்த 2 ஜிபி அப்டேட் மூலம் பேட்டரி பேக்கப் நீட்டிக்கும் "டோஸ் மோடு" அம்சம், திரையை தட்டினால் கூகுள் நௌ திறப்பது, எளிமையாக வால்யூம் கண்ட்ரோல் செய்யும் வசதி மற்றும் மைக்ரேட் மற்றும் அசிஸ்ட் போன்ற செயலிகளை எடுக்கப்பட்டு விடும்.

மோட்டோ ஜி ஜென் 3 கருவியில் புதிய அப்டேட் பெறுவது எப்படி??
பொதுவாக அனைத்து கருவியிலும் புதிய அப்டேட் குறித்த நோட்டிபிகேஷன் வழங்கப்படும். ஒருவேளை நோட்டிபிகேஷனை பெறாதவர்கள் போனின் செட்டிங்ஸ் -- அபவுட் போன் -- சிஸ்டம் அப்டேட் க்ளிக் செய்தால் கருவியில் தானாக மார்ஷ்மல்லோ அப்டேட் செய்யப்பட்டு விடும்.
மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.


Click it and Unblock the Notifications








