சாதா டிவி'யை ஸ்மார்ட் டிவியாக மாற்றுவது எப்படி??

By Meganathan
|

அதிக விலை கொடுத்து ஸ்மார்ட் டிவி ஒன்றை வாங்குவதற்கு பதில் உங்களிடம் இருக்கும் தொலைகாட்சி பெட்டியை ஸ்மார்ட்'ஆக ஸ்மார்ட் டிவியாக மாற்ற முடியும். இணையம் சார்ந்த பொழுதுபோக்கு அம்சங்களை பார்த்து ரசிக்க குறைந்த செலவிலேயே ஸ்மார்ட் டிவி ஒன்றை உருவாக்குவது எப்படி என்பதை ஸ்லைடர்களில் தெரிந்து கொள்ளுங்கள்.

போர்டபிள் மீடியா ப்ளேயர்

போர்டபிள் மீடியா ப்ளேயர்

மிக குறைந்த செலவில் வேண்டுமானால் அல்ட்ரா-போர்டபிள் மீடியா ப்ளேயர் கருவிகளை வாங்கலாம். இவை பார்க்க் யுஎஸ்பி போர்ட் போன்றே இருக்கும், ஆனால் இவைகளை கொண்டு ஆன்லைனில் இருந்து புகைப்படம், பாடல், வீடியோ போன்றவற்றை பார்க்க முடியும். ஆனால் இந்த கருவியை பயன்படுத்த வை-பை வசதி இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருவி

கருவி

இந்தியாவில் இது போன்ற கருவிகளை சில நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன. ஆனால் அவைகளில் சிலவற்றை மட்டுமே மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். அந்த பட்டியலில் கூகுள் க்ரோம்காஸ்ட் முதலிடம் பிடித்திருக்கின்றது எனலாம். சந்தையில் இந்த கருவி ரூ.3,999க்கு கிடைக்கின்றது. இதனை உங்களது தொலைகாட்சியின் எச்டிஎம்ஐ போர்ட்'இல் பொருத்தினால் போதும்.

யுஎஸ்பி

யுஎஸ்பி

இந்த க்ரோம்காஸ்ட் கருவியில் இருக்கும் யுஎஸ்பி போர்ட் தொலைகாட்சியுடன் இணைக்கப்பட வேண்டும். இதன்பின் செட்அப் பணிகள் தானாக நடைபெறும். இவை முழுமையாக முடிந்த பின் ஆன்லைனில் இருந்து வீடியோக்களை பார்த்து ரசிக்க முடியும்.

ஆப்பிள் டிவி

ஆப்பிள் டிவி

கூகுள் போன்றே ஆப்பிள் நிறுவனமும் தன் பங்கிற்கு வெளியிட்ட கருவி தான் ஆப்பிள் டிவி. இந்தியாவில் ரூ.8,295க்கு கிடைக்கும் இந்த கருவியை கொண்டு புகைப்படம், வீடியோ மற்றும் பாடல்களை ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு கருவியின் மூலம் இணையத்தில் இருந்து ரசிக்க முடியும். க்ரோம்காஸ்ட் போன்று ஆப்பிள் டிவியில் யுஎஸ்பி போர்ட் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாக்ஸ் மீடியா ப்ளேயர்

பாக்ஸ் மீடியா ப்ளேயர்

வை-பை கனெக்ஷனில் இண்டர்நெட் மூலம் பொழுதுபோக்க க்ரோம்காஸ்ட் தான் தலைசிறந்த கருவி என்றாலும் இதில் இன்டர்னல் மற்றும் நீட்டிப்பு செய்ய என மெமரி வசதி ஏதும் வழங்கப்படவில்லை. முழுமையான கருவியை வேண்டுவோர் செட்-டாப் பாக்ஸ் வாங்கலாம். இதற்கு உங்களது தொலைகாட்சியில் எச்டிஎம்ஐ போர்ட் மற்றும் தடையில்லா இண்டர்நெட் வசதி இருத்தல் அவசியம் ஆகும்.

மெமரி

மெமரி

சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான செட்-டாப் பாக்ஸ் கருவிகளில் மெமரி வசதி வழங்கப்பட்டுள்ளதோடு விலைக்கு ஏற்ப அவைகளில் பல அம்சங்கள் கூடுதலாக வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

Read more about:
English summary
Read here in Tamil How to turn your TV into a smart TV.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X