ஸ்மார்ட்போனில் ஆட்டோமேடிக் அப்டேட் : தடுப்பது எப்படி.??

By Meganathan
|

பெரும்பாலான ஸ்மார்ட்போன் பயனர்கள் அதிகப்படியான செயலிகளை பதிவிறக்கம் செய்து அவைகளை அவர்களே அப்டேட் செய்து கொள்கின்றனர். ஆனால் பல்வேறு செயலி தளங்களில் ஆட்டோமேடிக் ஆப் அப்டேட்கள் தான் வழங்கப்படுகின்றன, இவை எப்பவும் 'ஆன்' மோடில் வைக்கப்படுகின்றது. இதனால் செயலிகள் உடனுக்குடன் அப்டேட் செய்யப்பட்டு விடுகின்றன.

இன்று செயலிகளில் வேக வேகமாக அப்டேட்கள் வழங்கப்படுகின்றது. இதனால் ஆட்டோமேடிக் அப்டேட் அம்சம் பயன்படுத்தும் போது சில சிக்கல்களும் இருக்கின்றது. ஆட்டோமேடிக் அப்டேட்கள் வை-பை மோடில் மட்டும் செட் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யாவிட்டால் மொபைல் டேட்டாவில் இருந்து டேட்டா தீர்ந்து போகும், இதனால் அதிகப்படியான பணம் செலவாகும்.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளம் கொண்ட போன்களை பயன்படுத்துபவர்கள் ஆட்டோமேடிக் அப்டேட்களை நிறுத்த அல்லது துவங்க என்ன செய்ய வேண்டும் என்பதை பாருங்கள்.

கூகுள் ப்ளே

கூகுள் ப்ளே

ஸ்மார்ட்போனில் கூகுள் ப்ளே ஸ்டோர் செல்ல வேண்டும்.

ஐகான்

ஐகான்

அடுத்து கூகுள் ப்ளே ஸ்டோரின் இடது புறம் இருக்கும் ஐகானை க்ளிக் செய்ய வேண்டும். ( குறிப்பு : இந்த ஐகான் மூன்று லைன்களை கொண்டிருக்கும். )

செட்டிங்ஸ்

செட்டிங்ஸ்

அடுத்து செட்டிங்ஸ் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

ஆப்ஷன்

ஆப்ஷன்

செட்டிங்ஸ் ஆப்ஷனில் ஆட்டோ-அப்டேட் ஆப்ஸ் என்ற ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்.

டிசேபிள்

டிசேபிள்

ஆட்டோமேடிக் அப்டேட்களை நிறுத்த டூ நாட் ஆட்டோ-அப்டேட் ஆப்ஸ் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

வை-பை

வை-பை

ஒரு வேளை வை-பை கனெக்ஷனில் மட்டும் ஆட்டோ அப்டேட் செய்ய வேண்டுமெனில் ஆட்டோ-அப்டேட் ஆப்ஸ் ஓவர் வை-பை என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

செயலி

செயலி

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் குறிப்பிட்ட செயலிகளை மட்டும் ஆட்டோ அப்டேட் செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதை செயல்படுத்த கூகுள் ப்ளே செயலியில் குறிப்பிட்ட செயலியை தேர்வு செய்ய வேண்டும்.

ஐகான்

ஐகான்

அடுத்து வலது புறம் இருக்கும் ஐகானை க்ளிக் செய்ய வேண்டும். ( குறிப்பு : இந்த ஐகான் மூன்று லைன்களை கொண்டிருக்கும். ) பின் ஆட்டோ-அப்டேட் ஆப்ஷனை க்ளிக் செய்தால் வேலை முடிந்தது.

ஐபோன்

ஐபோன்

ஐஓஎஸ் இயங்குதளத்தில் இந்த ஆப்ஷனை செயல்படுத்த செட்டிங்ஸ் சென்று ஐட்யூன்ஸ் மற்றும் ஆப் ஸ்டோர் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

அப்டேட்

அப்டேட்

ஆட்டோமேடிக் அப்டேட்களை நிறுத்த அப்டேட் ஆப்ஷனில் இருக்கும் பச்சை நிற பட்டனை ஆஃப் செய்ய வேண்டும்.

வை-பை

வை-பை

ஒரு வேளை வை-பை கனெக்ஷனில் மட்டும் அப்டேட் செய்ய அப்டேட் ஆப்ஷனை தவிர்த்து யூஸ் மொபைல் டேட்டா ஆப்ஷனை நிறுத்த வேண்டும்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
How to Turn Off Automatic App Updates in Android and iOS Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X