ஐபோன் கான்டாக்ட்களை ஆன்டிராய்டுடன் சின்க் செய்வது எப்படி
ஐபோனில் இருந்து ஆன்டிராய்டிற்கு மாறும் போது பிரான்ட் மற்றும் மாறாமல் முழு இயங்குதளமும் மாறுகின்றது. இயங்குதளங்களை மாற்றும் போது கவனமாக இருத்தல் மிகவும் அவசியமானது.
இவ்வாறு இயங்குதளங்களை மாற்றும் போது பழைய இயங்குதளத்தில் இருக்கும் கான்டாக்ட்கள், மின்னஞ்சல் மற்றும் குருந்தகவல்களை புதிய இயங்கு தளத்திற்கு மாற்றுவது சவாலான காரியம்.
கான்டாக்ட்களை சின்க் செய்ய இரு வழிகள் இருக்கின்றது, முதலில் கூகுள் கான்டாக்ட்களில் சின்க் செய்தல் மற்றொன்று அல்லது ஐக்ளவுட் மூலம் செய்யலாம், முதலில் ஐட்யூன்ஸ் மூலம் எப்படி செய்ய வேண்டும் என்று பாருங்கள்

ஐட்யூன்ஸ்
கூகுள் அக்கவுன்ட் இருந்தால் ஐபோனை கணினி மூலம் பேக்கப் செய்யுங்கள்.

கணினி
முதலில் ஐட்யூன்ஸ் ஓபன் செய்து ஐபோனை யுஎஸ்பி கேபிள் மூலம் கணினியுடன் இணைக்க வேண்டும், அதன் பின் ஐபோன் ஐட்யூன்ஸ் சென்று ‘Info' டேபை க்ளிக் செய்து Sync Contacts with Google Contacts என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்

ஜிமெயில்
அடுத்து உங்களது ஜிமெயில் யூஸர் நேம் மற்றும் பாஸ்வேர்டை என்டர் செய்யுங்கள், அது முடிந்த பின் Gmail > Contacts செல்லுங்கள்

கான்டாக்ட்
அங்கு உங்களது கான்டாக்ட்களை கூகுள் கான்டாக்ட்களில் பார்க்க முடியும்

ஐக்ளவுட்
கான்டாக்ட்களை ஐக்ளவுட் மூலம் பேக்கப் செய்ய முதலில் ஐக்ளவுட் சென்று லாக் இன் செய்ய வேண்டும்

ஐபோன்
அடுத்து கான்டாக்ட்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்தால் ஐக்ளவுடில் பேக்கப் செய்யப்பட்டிருக்கும் ஐபோன் கான்டாக்ட்களை பார்க்க முடியும்

எக்ஸ்போர்ட்
இப்பொழுது அனைத்து கான்டாக்ட்களை செலக்ட் செய்து செட்டிங்ஸ் பட்டனை க்ளிக் செய்து Export vCard என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள்

ஜிமெயில்
அடுத்து ஜிமெயில் சென்று கான்டாக்ட்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள்

இம்போர்ட்
அடுத்து Import Contacts ஆப்ஷனை க்ளிக் செய்து Import என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள்

மெர்ஜ்
இங்கு கான்டாக்ட்கள் மீண்டும் மீண்டும் காணப்படும் அவைகளை மெர்ஜ் செய்யலாம் அல்லது இங்கு உங்கள் கான்டாக்ட்கள் தொலைய வாய்ப்பே இல்லை


Click it and Unblock the Notifications