Home
How to

கேலக்ஸி எஸ்-3யில் ஆன்ட்ராய்டு 4.1 அப்டேஷனை பெற சில வழிகள்!

கேலக்ஸி எஸ்-3யில் ஆன்ட்ராய்டு 4.1 அப்டேஷனை பெற சில வழிகள்!
கேலக்ஸி எஸ்-3 வாடிக்கையாளர்களுக்கு குஷிகரமான ஒரு தகவல் காத்திருக்கிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனிற்கு ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் அப்டேஷன் வசதி வழங்கப்பட இருக்கிறது.

நமது நாட்டில் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுமா? என்ற கேள்வி எல்லோர் மனதிலும் இருந்தது. ஆனால் அதை தொடர்ந்து இந்த ஸ்மார்ட்பபோன் அறிமுகம் செய்யப்பட்ட சமயத்திலும், வெளியீடு செய்யப்பட்ட தருணத்திலும் வாடிக்கையாளர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை தான்.

இப்போது அடுத்த அடுத்து இந்த ஸ்மார்ட்போன் புதிய வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க காத்திருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில் மற்றொரு வசதியினை வழங்க தயாராகிறது கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தின் லேட்டஸ்டு வெர்ஷனான ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்டேஷனை வழங்கும்.

இந்த ஜெல்லி பீன் வெர்ஷனில் முக்கியமாக கூறப்பட வேண்டிய விஷயம் இருக்கிறது. இதில் மேம்படுத்தப்பட்ட பிராவுசர் மற்றும் ஃபாஸ்டர் இன்டர்ஃபேஸ் வசதியினை பெறலாம்.

தொழில் நுட்ப வசதியில் சிறப்பாக மேம்பாடுத்தப்பட்ட வசதிகளையும், வேகத்தினையும் பெற இதில் ப்ராஜெக்ட் பட்டர் வசதியினை பெறலாம். செட்டிங்ஸ் மெனு, 2 ஹோம்ஸ்கிரீன் மோட்ஸ், நியூ நோட்டிஃபிக்கேஷன் பார், பாப் அப் ப்ளே ஸ்கிரீன் ஆகிய வசிதகளை இதில் பயன்படுத்தலாம்.

சாம்சங் கீஸ்சை பயன்படு்த்தி இந்த ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை எப்படி டவுன்லோட் செய்வதென்று பார்க்கலாம். சாம்சங் கீஸ்சை முதலில் டவுன்லோட் செய்து ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். அதன் பின் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனை, பிசி கம்ப்யூட்டருடன் இணைக்க வேண்டும்.

இப்படி இணைத்த பின் ஜெல்லி பீன் அப்கிரேட் வசதி கொடுக்கப்பட்டிருக்கிறதா என்பதை பார்த்து கொள்ள வேண்டும். அதன் பின் ஃபர்ம்வேர் அப்கிரேட் பட்டனை அழுத்த வேண்டும். நிச்சயம் இது போன்ற அப்கிரேட் வசதியினை செய்யும் போது, தகவல்களை பேக்கப் செய்து கொள்ள மறந்துவிடக்கூடாது. இந்த அப்கிரேடு வேலை முடிந்த உடன், இதை ரீஸ்டாட் செய்ய வேண்டும்.

இதன் பின் மீண்டும் ஸ்மார்ட்போனை கம்ப்யூட்டரில் இருந்து அகற்றிவிட்டு, திரும்பவும் இணைக்க வேண்டும். இது எதற்காக என்றால் தகவல்களை மீண்டும் ரீஸ்டோர் செய்வதற்காக.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X