ஃபேஸ்புக்கில் விரும்பிய மொழிகளில் டைப் செய்ய சில வழிகள்!

By Super
|

ஃபேஸ்புக்கில் விரும்பிய மொழிகளில் டைப் செய்ய சில வழிகள்!
சமூக வலைத்தளம், இமெயில் என்று எதுவனாலும் சிறந்த முறையில் தமிழ், ஹிந்தி, கன்னடா என்று எந்த மொழியிலும் எளிதாக டைப் செய்ய வேண்டுமா? அதற்கு இங்கே ஒரு எளிதான வசதியும் உள்ளது.

பல வசதிகளை வழங்கி வரும் கூகுள் இப்படி வேறு மொழிகளில் எளிதாக டைப் செய்யவும் சில வசதிகளை உருவாக்கி உள்ளது. இதற்கு கூகுளின் ட்ரான்ஸிலேஷன் ஐஎம்இ சாஃப்ட்வேரை இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். இப்படி இந்த சாஃப்ட்வேரை இன்ஸ்டால் செய்வதன் மூலம் எளிதாக எந்த மொழியில் டைப் செய்ய விரும்புகிறோமோ அதில் டைப் செய்யலாம்.

இதற்கு இன்னும் ஒரு சிறந்த வழியும் இருக்கிறது. கூகுளின் ஐஎம்இ என்ற ட்ரானிஸிலேஷன் வலைத்தளத்திற்குள் நுழைய வேண்டும். இப்படி நுழைந்தால் தனியாக ஒரு விண்டோ திறக்கப்படும். இதில் வலது பக்கம் நிறைய மொழிகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் எந்த மொழி தேவையோ அதை க்ளிக் செய்து வைத்து கொள்ள வேண்டும். அதன் கீழ் டவுன்லோட் என்ற பட்டனும் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த டவுன்லோட் பட்டனை க்ளிக் செய்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

அதன் பிறகு ஸ்டார்ட் பட்டன்---> செட்டிங்ஸ்---> கன்ட்ரோல் பேனல் க்ளிக் செய்ய வேண்டும். பிறகு கன்ட்ரோல் பேனலின் விண்டோ திறக்கப்படும். ரீஜினல் அண்டு லேன்குவேஜ் என்ற ஐகான் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த ஐகானை க்ளிக் செய்ய வேண்டும். இதன் பின் திறக்கப்படும் விண்டோவில் ரீஜினல் ஆப்ஷன்ஸ், லேன்குவேஜ் மற்றும் அட்வான்ஸ் என்று மூன்று பட்டன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த மூன்று பட்டன்களில் உள்ள வசதிகளிலும் சில மாற்றங்களை செய்ய வேண்டும்.

இதில் லேன்குவேஜ் ---> டெக்ஸ்ட் சர்வீசஸ் அண்டு இன்புட் லேன்குவேஜஸ் ஆப்ஷனில் (டீடெய்ல்ஸ்) என்ற பட்டன் இருக்கும். இதை க்ளிக் செய்தால் காம்பேட்டிமிலிட்டி கான்ஃபிகரேஷன் என்பதற்கும் கீழ் இருக்கும் பாக்ஸில் டிக் செய்ய வேண்டும். அதோடு சிஸ்டம் கான்ஃபிகரேஷன் என்பதை டர்ன் ஆஃப் செய்ய வேண்டும்.

மீண்டும் கன்ட்ரோல் பேனல் --->ரீஜினல் லேன்குவேஜ்ஸ் அண்டு ஆப்ஷன்ஸ் --->டெக்ஸ்ட் சர்வீசஸ் அண்டு இன்புட் லேன்குவேஜஸ் (டீடெயில்ஸ்) --->செட்டிங்ஸ் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இதில் லேன்குவேஜ் பார் என்ற ஆப்ஷனை க்ளக் செய்யவும். ஷோ தி லேன்குவேஜ் பார் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்துவிட்டு, ஓகே கொடுத்துவிட வேண்டும்.

பிறகு மீண்டும் கன்ட்ரோல் பேனல்--->ரீஜனல் அண்டு லேன்குவேஜ் ஆப்ஷன்ஸ்--->லேன்குவேஜ் டேப் க்ளிக் செய்யவும். இதில் இன்ஸ்டால் ஃபைல்ஸ் ஃபார் ஈஸ்டு ஏஷியன் லேன்குவேஜ் என்று கொடுக்கப்பட்டிருக்கும் பாக்ஸை க்ளிக் செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஓகே கொடுத்துவிட வேண்டும். இதன் பிறகு சாஃப்ட்வேர் எளிதாக டவுன்லோட் செய்யப்பட்டுவிடும். இதன் பின் நாம் என்ன மொழிகளை அதில் செலக்ட் செய்தோமோ அந்த மொழியை எளிதாக ஃபேஸ்புக் போன்று எதில் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X