ஆன்ட்ராய்டு போனில் இமெயில் அப்ளிக்கேஷன்!

By Super
|

ஆன்ட்ராய்டு போனில் இமெயில் அப்ளிக்கேஷன்!
ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் இமெயில் வசதியினை எப்படி செட் செய்வது என்று பார்க்கலாம். ஒவ்வொரு முறையும் இமெயில் யூசர்நேம் பாஸ்வேர்டு என்று கொடுத்த திறந்து பார்ப்பதை விட, இமெயில் வசதியினை ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் செட் செய்து கொள்வது தான் நல்லது. இதனால் புதிய இமெயில் வருவது பற்றிய தகவல்களை நமது ஸ்மார்ட்போனில் பார்க்க முடியும்.

ஸ்மார்ட்போனில் மெனு பட்டனை க்ளிக் செய்து அதில் இமெயில் அப்ளிக்கேஷனை க்ளிக் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு திறக்கப்படும் விண்டோவில் இமெயில் முகவரி மற்றும் பாஸ்வேர்டை கொடுத்து விட வேண்டும்.

இதன் பிறகு நெக்ஸ்டு பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். பின்னர் பிஓபி3 அக்கவுன்டு, ஐஎம்ஏபி அக்கவுன்ட், எக்சேன்ஜ் அக்கவுன்ட் என்று கொடுக்கப்பட்டிருக்கும். இதில் பயன்பாட்டிற்கு தகுந்த வகையில் ஆப்ஷனை க்ளிக் செய்து கொள்ள வேண்டும்.

எந்த அக்கவுன்ட் என்பதை க்ளிக் செய்த பின்னர் மீண்டும் நெக்ஸ்ட் கொடுக்க வேண்டும். பிறகு புதிய இமெயில் வந்தால் எத்தனை நிமிடத்திற்கு ஒரு முறை நோட்டிஃபிக்கேஷன் காட்டப்பட வேண்டும் என்பதையும் க்ளிக் செய்துவிட வேண்டும். இனி புதிதாக வரும் இமெயிலை எளிதாக பார்க்கவும் முடியும், புதிய இமெயில்களை எளிதாக அனுப்பவும் முடியும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X