கேலக்ஸி S3யை ரீசெட் செய்வது எப்படி?

இரண்டு வகைகளில் இந்த ரீசெட் முறையைச் செய்யலாம். ஒன்று சாப்ட் ரீசெட் எனவும் இரண்டாவது ஹார்ட் ரீசெட் எனவும் அழைக்கப்படுகிறது.
இந்த இரண்டு வகை ரீசெட் முறைகளில் எதைப்பயன்படுத்த வேண்டுமென்பது உங்கள் போனிலுள்ள பிரச்சனையைச் சார்ந்தது. சிறிய பிரச்சனைகளுக்கு சாப்ட் ரீசெட்டும் சற்றே பெரிய பிரச்சனைகளுக்கு ஹார்ட் ரீசெட்டும் செய்யவேண்டியது மிகவும் அவசியமானதாகும்.
சாப்ட் ரீசெட் செய்தல்:
இதுவொரு எளிமையான முறையாகும். மொபைலில் உள்ள பவர் பட்டனை 10 முதல் 20 வினாடிகள் அழுத்தியநிலையில் பிடித்தாலே போதுமானது. திரை அணைந்துவிடும். பின்னர் போனை ஆன் செய்து எப்பொழுதும்போல பயன்படுத்தலாம்.
ஹார்ட் ரீசெட் செய்ய:
ஹார்ட் ரீசெட் செய்யும்முன் உங்களுடைய முக்கியமான தகவல்களைப் பாதுகாப்பாக வைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் போனுக்கான மெம்மரிக் கார்டை எடுத்து விடுவதும் நல்லது.
முதலில் ஆன்ட்ராய்ட் இயங்குதளத்திற்கான செட்டிங்கள் பகுதிக்குச்சென்று பேக்கப் மற்றும் ரீசெட் என்ற விருப்பத்தைத் தெரிவு செய்யவும்.
இது உங்களை ஃபேக்ட்ரி டேட்டா என்ற பக்கத்துக்கு அழைத்துச்செல்லும். அதில் கேட்கும் விவரங்களைப் பூர்த்திசெயதபின் ரீசெட் டிவைஸ் என்பதை அழுத்தவும்.
அல்லது 2 வால்யும் பட்டன்களையும் அழுத்திப் பிடித்துக்கொண்டே பவர் பட்டனையும் அழுத்திப்பிடிக்கவும். போன் ஆனாகும்வரை அப்படியே பிடிக்கவேண்டும்.
அவ்வளவே! உங்கள் போன் ரீசெட் செய்யப்பட்டுவிட்டது.


Click it and Unblock the Notifications