ஃபேஸ்புக்கை பாதுகாக்க சில டிப்ஸ்!

Posted By: Staff
ஃபேஸ்புக்கை பாதுகாக்க சில டிப்ஸ்!
சமீபத்தில் நிறைய சமூக வலைத்தளங்களின் ரகசிய குறியீடுகள் (பாஸ்வேர்டுகள்) களவாடப்பட்டதன் தகவல்களை கேட்டிருப்போம். ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் மக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அது மட்டும் அல்லாமல் இதில் நிறைய தகவல்களையும் பகிர்ந்து கொள்கின்றனர். இதனால் இந்த சமூக வலைத்தளங்களின் பாஸ்வேர்டுகளை பாதுகாப்பான முறையில் வைத்து கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது. இதற்கு சிறந்த மற்றும் எளிதான சில வழிகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

  • முதலில் தேர்வு செய்யும் பாஸ்வேர்டு, எளிதாக அனைவராலும் யூகிக்க முடியாத ஒன்றாக இருக்க வேண்டும். இது முதல் வழி என்று கூறலாம். இப்படி யாராலும் அவ்வளவு சுலபத்தில் கண்டுபிடித்துவிட முடியாத பாஸ்வேர்டை தேர்வு செய்வது ஃபேஸ்புக் வலைத்தளத்திற்கு மட்டும் அல்லாமல், பாஸ்வேர்டு வைத்து திறக்கும் வழி கொண்ட எல்லா வலைத்தளத்திற்கும் பொருந்தும்.

  • பிறகு நண்பர்களின் எண்ணிக்கை அதிகமாக வேண்டும் என்பதற்காக எல்லாரையும் ஃபேஸ்புக்கில் நண்பர்களாக தேர்வு செய்து கொள்வதை தவிர்த்து கொள்ளவது நல்லது.

  • அடிக்கடி பாஸ்வேர்டை மாற்றி கொள்வது நல்லது. அப்படி மாற்றம் பாஸ்வேர்டு ஞாபகத்தில் இருக்கும் வகையில் தேர்வு செய்ய வேண்டும்.

  • பிரவுசிங் மூலம் லாகின் செய்யும் போது ரிமெம்பர் மீ போன்ற ஆப்ஷன்களை பயன்படுத்தாது இருப்பதும் சிறந்தது. இதெல்லாம் சின்ன யோசனைகள் தான். ஆனாலும் சில பேர் மறந்து ரிமெம்பர் மீ என்ற ஆப்ஷனை பயன்படுத்துவதை பார்க்கலாம்.

  • நம்பகத்தன்மை இல்லாத எந்த ஒரு லிக்ங்கையும், இமெயிலையும் திறந்து பார்ப்பது சில சமயங்களில் ஆபத்தை விளைவிக்கும். இதனால் ஃப்ரீ டவுன்லோடு, பரிசு என்று குறிப்பிட்டால் உடனை அதை டவுன்லோட் செய்ய முயற்சிப்பதையும், திறக்க முற்படுவதையும் தவிர்ப்பது நல்லது.

இங்கே பகிர்ந்து கொள்ளப்பட்டவைகள் எளிய வழிமுறைகள் தான். இந்த குட்டி டிப்ஸ்கள் பாஸ்வேர்டு ஹோக்கர்களிடமிருந்து, ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை காப்பாற்ற உதவும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot