பிராடுபேண்டு வேகத்தினை அதிகப்படுத்த சில டிப்ஸ்!

By Super
|

பிராடுபேண்டு வேகத்தினை அதிகப்படுத்த சில டிப்ஸ்!
பிராடுபேண்டு சேவையின் வேகத்தை அதிகரிக்க சில வழிகள். பிஎஸ்என்எல் பிராடுபேண்டு சேவையின் வேகத்தினை அதிகரிக்க சில டிப்ஸ்களை பார்க்கலாம்.

டிஎன்எஸ் சர்வர்:

வேகமாக இயங்கும் டிஎன்எஸ் சர்வரை பயன்படுத்தி கொள்வது நல்லது. பிஎஸ்என்எல் நிறுவனம் நிறைய வாடிக்கையாளர்களை கொண்டிருக்கிறது. ஆனாலும் அனால் ஒரே டிஎன்எஸ் சர்வரை தான் அனைவரும் பயன்படுத்துகின்றனர். அதனால் இரவு போன்ற நேரத்தில் அதகமானோர் ஒரே டிஎன்எஸ் சர்வரை பயன்படுத்தும் போது, இதன் வேகம் குறைய வாய்ப்பிருக்கிறது. இதனால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் டிஎன்எஸ் சர்வரை பயன்படுத்தி பார்ப்பது நல்லது.

208.67.222.222

208.67.220.220

ஏடுப்ளாக் ப்ளஸ் ஏடுஆன்:

பிராடுபேண்டின் வேகத்தினை அதிகரிக்க ஏடுப்ளாக் ப்ளஸ் என்ற ஏட்-ஆனை பயன்படுத்தலாம். பொதுவாக வெப் பேஜில் நிறைய விளம்பரங்கள் இருப்பதனாலும், இன்டர்நெட்டின் வேகம் குறைய வாய்ப்பிருக்கிறது. மேலே கூறப்பட்டுள்ள ஏடுப்ளாக் ப்ளஸ் என்ற ஏட்ஆனை பயன்படுத்துவதால், இது போன்ற தேவையில்லாத விளம்பங்களினால் பிராடுபேண்டு சேவையின் வேகம் குறைவதை தவிர்க்கலாம். இந்த ஏடுப்ளாக் ப்ளஸ் என்ற ஏடுஆனை ஃபையர்ஃபாக்ஸ் வெப் பிரவுசரில் எளிதாக டவுன்லோட் செய்யலாம்.

ஃபாஸ்டர்ஃபாக்ஸ் ஏடுஆன்:

பிரவுசரில் ஒவ்வொரு பக்கத்தினை திறக்கும் போதும், லோடாவதற்கு நிறைய நேரத்தினை எடுத்து கொள்கிறது. இப்படி லோடாக எடுத்த கொள்ளும் நேரத்தினை குறைக்க ஃபாஸ்டர்ஃபாக்ஸ் என்ற ஃபையர்ஃபாக்ஸ் ஏடுஆனை பயன்படுத்தலாம். வலைத்தளத்தினை திறக்க லோடாகும் நேரம் இந்த புதிய ஃபாஸ்டர்ஃபாக்ஸ் மூலம் குறைக்கப்படும்.

கேச்சி ஸ்பேஸ்:

தேவையில்லாத ஃபைல்களை உடனுக்குடன் அகற்றிவிட வேண்டும். டூல்ஸ்---> இன்டர்நெட் ஆப்ஷன்ஸ் ---> பிரவுஸிங் ஜிஸ்டரி ---> செட்டிங்ஸ் ---> டிஸ்க் ஸ்பேஸ் ஆகிய இந்த வழிமுறைகளை பயன்படுத்தி டிஸ்க் ஸ்பேஸில் 50 என்று செட் செய்து கொள்ள வேண்டும். இப்படி ஸ்பேஸின் அளவை 50தாக குறைத்து செட் செய்து கொண்டால், 50 என்ற அளவு வந்தவுடன் ஆட்டோமெட்டக்காக தேவையில்லாத ஃபைல்கள் அனைத்தும் அகற்றப்பட்டுவிடும். இதனாலும் இன்டர்நெட்டின் வேகத்தினை அதிகப்படுத்தலாம். இப்படி இன்டர்நெட்டின் வேகத்தினை அதிகப்படுத்துவதால் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் அதிக வேகத்துடன் கருத்துக்களை பரிமாறி கொள்ள முடியும். இந்த செய்தியினை ஹிந்தியில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X