மிருதுவான காதுகளுக்கு சிறந்த ஹெட்போனை தேர்வு செய்வது எப்படி?

Posted By:

மிருதுவான காதுகளுக்கு சிறந்த ஹெட்போனை தேர்வு செய்வது எப்படி?

சிறந்த ஹெட்போன்களை எப்படி தேர்வு செய்வது? அப்படி தேர்வு செய்யும் ஹெட்போன்களை எப்படி சரியான முறையில் பயன்படுத்துவது என்பது பற்றிய விவரத்தினை இங்கே பார்க்கலாம்.

இன்று எக்ட்ரானிக் சாதனத்தினை அதிகம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், மிக முக்கியமாக உபயோகிப்பது ஹெட்போன்.

ஏனெனில் கம்ப்யூட்டர் முன்பு எப்போதும் எந்திரம் போல் வேலை பார்ப்பவர்களுக்கு ஒரு பெரிய பொழுதுபோக்கு அம்சமே பாடல்கள் கேட்பது தான்.

இனிமையாக இசை கேட்பதாக இருந்தாலும், வீடியோவில் வரும் குரல் பதிவுகளை கேட்பதாக இருந்தாலும் அதற்கு சிறப்பான ஹெட்போன் தேவை தான். இந்த அத்தியாவசிய எலக்ட்ரானிக் சாதனத்தினை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

இயர்போன் அல்லது ஹெட்போன்களை தனியாக ஒரு பர்ஸில் போட்டு வைத்து கொள்வது நல்லது.

ஏனெனில் சாதாரணமாக பைகளில் போட்டு வைத்தால் தூசி படிவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. அதனால் சுத்தமான ஒரு பர்சில் போர்டு வைத்து கொள்ள வேண்டும்.

இயர்போன் மற்றும் ஹெட்போன்களுக்கு பஞ்சு போன்ற மிருதுவான இயர்பட்ஸ் கொடுக்கப்படுகிறது.

இதையும் அழுக்கு படாமல், சுத்தமாக பயன்படுத்த வேண்டும். இதில் தூசிகளை அப்படயே விட்டால், அது நேரடியாக காதுகளைத்தான் பாதிக்கும்.

நமது உடல் பகுதியிலேயே மிக மிருதுவானது காது பகுதி என்று சொல்லலாம். இதனால் காதுகளில் பொருத்தி கொள்ளும் எந்த பொருளையும் தரமானதாக வாங்குவது மிக அவசியம்.

மலிவு விலை என்பதற்காக மட்டமான பிலாஸ்டிக்கில் செய்த ஹெட்போன் மற்றும் இயர்போன்களை பயன்படுத்துவது காதுகளுகக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

இதனால் விலை கொஞ்சம் அதிகமானதாக இருப்பினும், சிறந்த இயர்போன்களை வாங்குவது நல்லது. அதோடு எல்லா வகையிலும் இயர்போனைவிடவும் ஹெட்போன் சிறந்தது என்று கூறலாம்.

இயர்போன்கள் காதிற்குள் நுழைப்பது போன்று இருக்கும். அதே ஹெட்போன் காது மடல் பகுதியில் வைத்து கொள்வது போல் இருக்கும். இதனால் காதிற்குள்ளே பொருத்துவது போன்று இருப்பது கொஞ்சம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறலாம்.

தொடர்ந்து ஹெட்போன்/இயர்போன்களை பயன்படுத்துவது, தலைவலி மற்றும் ஓய்வில்லாத்தன்மை போன்றவற்றை ஏற்படுத்தும் என்று கூறலாம். இதனால் 15 நிமிடத்திற்கொரு முறை இயர்போன் மற்றும் ஹெட்போன்களை கழற்றிவிட்டு, காதிற்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்து, பின்னர் பயன்படுத்துவது இன்னும் சிறந்ததாக இருக்கும்.

இந்த டிப்ஸ்கள் அனைவருக்கும் தெரிந்த சின்ன சின்ன விஷயம் தான். ஆனாலும் இதை அதிகம் யாரும் பயன்படுத்துவதில்லை.

இந்த குட்டி குட்டி தகவல்களை பின்பற்றுவதால், எலக்ட்ரானிக் சாதனத்தினை சிறப்பாக பயன்படுத்தும் முறையினையும் தெரிந்து கொள்ளமுடியும். அதே சமயம் காது போன்ற உடல் பகுதிகளை பாதுகாத்து கொள்ளவும் முடியும்.

 

 

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot