மொபைல் சார்ஜ் செய்ய டபிள் ஸ்மார்ட் வழிகள்!

By Super
|

மொபைல் சார்ஜ் செய்ய டபிள் ஸ்மார்ட் வழிகள்!
மொபைல்போன்களில் சிறந்த தொழில் நுட்ப வசதிகள் கொடுக்கப்பட்டாலும் பேட்டரி என்பது மிக முக்கியம். ஆனால் மியூசிக், வீடியோ என்று அதிகம் பேட்டரி செலவாகும் தொழில் நுட்பங்களை பயன்படுத்துபவர்களுக்கு சில சிரமங்கள் ஏற்படுகின்றன. இதனால் எப்படியெல்லாம் உங்கள் மொபைலை முன் கூட்டியே சார்ஜ் செய்து கொள்வதென்பதை பார்க்கலாம்.

சார்ஜ் செய்வதற்குகென்று தனியாக நேரம் ஒதிக்க வைக்க முடியாது. பல வேலைகளில் சார்ஜ் செய்ய மறப்பதுண்டு. இதனால் அலுவலகம் வந்து சார்ஜ் செய்பவர்களை பார்த்திருப்போம். அலுவலகத்தில் முக்கிய போன்கால் வரும் என்கிற போது, இன்னும் சற்று முன்பாகவே சார்ஜ் செய்து கொள்ளவது அவசியம். காரில் இப்போதெல்லாம் சார்ஜ் செய்து கொள்ளும் போர்ட்கள் வழங்கப்படுகிறது. இதை பயன்படுத்தி கொள்ளலாம்.

எவ்வளவு சார்ஜ் செய்தாலும், பேட்டரி நிற்பதில்லை என்பவர்கள் யூஎஸ்பி கோர்டை பயன்படுத்தி கொள்ளவது ஒரு வகையில் நல்லது. இன்னும் கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசிக்க வேண்டும் என்றால் ஹேண்டு க்ரேன்ங்க் வசதியை பயன்படுத்தலாம். இதில் ஆன்ட்ராய்டு எலக்ட்ரானிக் சாதனம், இ-ரீடர்ஸ், டிஜிட்டல் கேமரா, ஜிபிஎஸ், ஐஓஎஸ் போன்று வெவ்வேறு விதமான எலக்ட்ரானிக் சாதனங்களையும் எளிதாக சார்ஜ் செய்ய இந்த பாக்கெட் சாக்கெட் பயன்படும்.

டபிள் ஸ்மார்ட்டான ஐடியா வேண்டும் என்றால் சோலார் சார்ஜிங் வசதி கொண்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் மிக சிறந்தது. இதனால் மிக சுலபமாக எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சார்ஜ் செய்து கொள்ளலாம்.

இது போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களை சார்ஜ் செய்ய சூரிய ஒளி போதுமானது. விலை கொஞ்சம் அதிகமாக இருப்பினும், இந்த சோலார் சார்ஜ் வசதி கொண்ட எலக்ட்ரானிக் சாதனத்தை வாங்கிவிட்டால் அடிக்கடி சார்ஜ் ப்ளக் தேடி ஓட வேண்டியதில்லை.

சார்ஜ் செய்ய நேரமில்லாதவர்கள் கைவசம் ஒரு பேட்டரி பேக்கப் வைத்து கொள்ளவது தான் நல்லது. இப்படி பேட்டரி பேக்கப் வைத்திருப்பது, இக்கட்டான சமயங்களில் கைகொடுக்கும். இந்த செய்தியினை ஹிந்தியில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X