ஃபேஸ்புக்கில் மொபைல் எண்ணை சேர்ப்பது எப்படி?

Posted By: Staff
ஃபேஸ்புக்கில் மொபைல் எண்ணை சேர்ப்பது எப்படி?
நண்பர்களுடன் சிறப்பாக தகவல்களையும், கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளவதில் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் சிறப்பாக பயன்பட்டு வருகிறது. அந்த வகையில் வேலை சம்மந்தமாக அதிகம் ஃபேஸ்புக்கில் தகவல்களை பகிர்ந்து கொள்பவர்கள் மொபைல்போன் எண்களை பகிர்ந்து கொள்வது சிறந்த ஒரு வழியாக இருக்கும். இதனால் வேலை

சம்மந்தமாக பல விஷயங்களை பகிர்ந்து கொள்ளபவர்கள், ஃபேஸ்புக்கில் மொபைல் எண்ணை பரிமாறி கொள்வது ஒரு வகையில் நல்லது என்று கூறலாம்.

உதாரணத்திற்கு மற்றவர்களுக்கு சிறப்பான ஆலோசனை வழங்கும் இடத்தில் நீங்கள் இருந்தால் நிச்சயம், ஃபேஸ்புக்கில் நம்முடன் இணைந்திருக்கும் நண்பர்களுக்கு சில வழிகளை நாம் வழங்க வேண்டி இருக்கும்.இதனால் ஃபேஸ்புக்கில் மொபைல் எண்ணை பகிர்ந்து கொள்வதால், நம்மை அனுகி ஆலோசனை கேட்க வேண்டும் என்று

நினைப்பவர்களுக்கு இது ஏதுவாக இருக்கும்.

  • இப்போது ஃபேஸ்புக் பக்கத்தில் எப்படி மொபைல் எண்ணை சேர்ப்பது என்று பார்க்கலாம். இதற்கு முதலில் ப்ரொஃபைல் பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

  • இதில் எடிட் ப்ரொஃபைல் என்ற ஆப்ஷனையும் பார்க்கலாம். அதில் கான்டேக்டு இன்ஃபர்மேஷன் என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். கான்டேக்டு இன்ஃபர்மேஷன் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்த பின், புதிய விண்டோ திறக்கப்படும்.

  • இதில் போன் என்று கொடுக்கப்பட்டிருக்கும் இடத்தில் மொபைல் எண்ணை கொடுக்க வேண்டும். அதன் பின் கன்ட்ரி என்ற இடத்தில் நமது நாட்டினை குறிப்பிட்டு மறக்காமல் சேவ் சேன்ஜஸ் என்ற பட்டனை க்ளிக் செய்துவிட வேண்டும்.

  • இல்லையென்றால் மாற்றப்பட்ட அல்லது சேர்க்கப்பட்ட தகவல்கள் சேவ் செய்யப்படாமல் போய்விடும். இப்படி எளிதாக மொபைல் எண்ணை ஃபேஸ்புக்கில் சேர்க்கலாம்.

  • இப்படி மொபைல் எண்ணை கொடுப்பதினால் வேலை சம்மந்தமான விஷயத்திற்கு உதவுவது மட்டும் அல்லாமல், நீண்ட நாள் பிரிந்த நண்பர்கள் நம்மை தொடர்பு கொள்ளவும் சிறப்பாக பயன்படும்.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot