Home
How to

கூகுள் உங்களை கண்காணிக்கின்றது, தப்பிக்க இதோ டிப்ஸ்..!

By Super

கூகுள் உங்களை கண்காணிக்கின்றது..! என்ன அதிர்ச்சியாக உள்ளதா..? நீங்கள் கூகுளில் உங்கள் தனிப்பட்ட கணக்கை அதாவது சைன் இன் (sign in) அல்லது சைன் அப் (sign up) செய்யக்கூட தேவையில்லை கூகுள் மற்றும் ஃபேஸ்புக் போன்ற மிகப்பெரிய நெட்வொர்க்குகள் உங்களை கண்காணிக்கும்.

கூகுள் உங்களை கண்காணிக்கின்றது, தப்பிக்க இதோ டிப்ஸ்..!

விளம்பரத்தை உங்களுக்கு வழங்குவதற்காகவே கூகுள் இவ்வாறு செய்கின்றது, பயப்படத் தேவையில்லை, நீங்கள் நினைத்தால் நெட்வொர்க்குகள் உங்களை பின்தொடராமல் செய்யலாம். இதை தவிர்க்க,

கண்காணிப்பை முடக்குவது (Disable Tracking)

கூகுள் உங்களை கண்காணிக்கின்றது, தப்பிக்க இதோ டிப்ஸ்..!

நீங்கள் பார்வையிடும் கூகுள் வலைத்தளத்தில் தொடர்ந்து ஒரே விளம்பரம் வருகின்றது என்றால் கூகுள் உங்களை கண்காணிக்கின்றது என்று புரிந்து கொள்ளுங்கள். இதை தவிர்க்க, முதலில் கூகுள் விளம்பர அமைப்பு (advertisement setting) சென்று சைன் இன் (sign in) செய்யவும். அங்கே இரண்டு பகுதிகளைக் காணலாம். ஒன்று நீங்கள் கூகுளில் பார்க்கும் விளம்பரம் மற்றொன்று வெப் உங்களுக்கு காட்டும் விளம்பரம். உங்கள் தரவின் அடிப்படையில் உங்கள் பாலினம், வயது, மொழிகள் மற்றும் விருப்பங்களைக் கண்டு பிடித்து கொடுத்திருப்பார்கள். இந்த பத்திகளின் கீழே உள்ள ஆப்ட் அவுட் செட்டிங் (opt out setting) சென்று இரண்டு பத்திகளிலும் கொடுக்கப்பட்டுள்ள (opt out setting) மேல் கிளிக் செய்யவும். பின் மேலே உள்ள தரவு N/A என்று மாற்றப் படும்.

இதன் பின்பும் கூகுள் விளம்பர குக்கியால் உங்களை தேட முடியும். இதை தவிர்க்க விளம்பரம் குக்கி விலகுதல் பக்கம் அதாவது Advertising cookie opt out page மீது கிளிக் செய்து அதை தரவிரக்கம் (download) செய்ய வேண்டும். அவ்வளவு தான்.

தேடல் வரலாற்றை முடக்கவும் (Disable Search History)

கூகுள் உங்களை கண்காணிக்கின்றது, தப்பிக்க இதோ டிப்ஸ்..!

நேரடி கண்காணிப்பு நிறுத்தப்பட்ட போதும், கூகுளால் உங்களைப் பற்றிய தகவல்களை சேகரிக்க முடியும். நீங்கள் ஜிமெயில், யூட்யூப் அல்லது கூகுள் என்று எதை பயன்படுத்தினாலும் உங்களுக்கே தெரியாமல் கண்காணிக்கபடுகின்றீர்கள். இதை தவிர்க்க, முதலில், கூகுள் கணக்கு வரலாறு (google Account History) சென்று சைன் இன் செய்யவும். அதில், நீங்கள் எதை தேடுகின்றீர்கள், நீங்கள் இதுவரை பார்த்த தளங்கள், யூட்யூப் தேடல்கள் என அனைத்தும் இருக்கும். இந்த பகுதியின் கீழ் வலது பக்கமாக பாஸ் பட்டன் இருக்கும். இடது பக்கத்தில் பார்க்கும் சைட்ளின் வரலாறு இருக்கும் ( manage history link). அனைத்து ஆப்ஷன்களுக்கும் உரிய பாஸ் பட்டனினை கிளிக் செய்யவும். இதனால் நீங்கள் இணையத்தில் தேடிய தரவுகளை பற்றிய விவரங்களை கண்காணிக்க முடியாது. பின் இதற்கு முன் பதிவு செய்த தரவுகளை நீக்க ஒவ்வொரு தலைப்பின் கீழ் உள்ள மேனேஜ் ஹிஸ்ட்ரி லின்க் ( manage history link ) ஆப்ஷனினை கிளிக் செய்து ரிமூவ் ஐடம்ஸ் ( Remove items ) என்ற தலைப்பின் மீது கிளிக் செய்யவும் இதனால் முழுமையாக உங்களைப் பற்றிய பதிவுகளை நீக்க முடியும்.

பரிந்துரைப்புகளை முடக்க (Disable Shared Endorsements)

கூகுள் உங்களை கண்காணிக்கின்றது, தப்பிக்க இதோ டிப்ஸ்..!

கடந்த ஆண்டு , விளம்பரங்களின் மீது மக்களின் கவனத்தை மேலும் ஈர்க்க கூகுள் ஒரு புதிய வழியினைக் கண்டுபித்தது. அதாவது, உங்களின் கூகுள் ப்ளஸ் பக்கத்தில் உங்களின் நடவடிக்கைகள் பற்றி அதாவது உங்களின் கருத்து, விமர்சனங்கள் மற்றும் நீங்கள் ஷேர் செய்தது போன்ற விவரங்கள் கூகுள் பக்கத்தில் இடம் பெறும் விளம்பரங்களுக்கு அருகிலேயே உங்களின் புகைப்படத்துடன் உங்களின் நண்பர்கள் காணும் விதமாக காட்டப்படும். இதை தவிர்க்க, கூகுள் பரிந்துரைப்புகளில் செட்டிங் சென்று சைன் இன் செய்தால் கீழே "Based on my activity, Google may show my name and profile photo in shared endorsements that appear in ads." என்று இருக்கும். இதன் அர்த்தம் "என் செயல்பாட்டின் அடிப்படையில், கூகுள் என் பெயர் மற்றும் சுயவிவரப் புகைப்படத்தைக் விளம்பரங்களில் தோன்றும் பரிந்துரைப்புகளில் காட்டலாம்." என்று அர்த்தம். இதிலிருக்கும் டிக் குறியை நீக்கி பக்கத்தில் உள்ள நீல நிற சேவ் பட்டன் மீது க்ளிக் செய்யவும்.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்

கூகுள் உங்களை கண்காணிக்கின்றது, தப்பிக்க இதோ டிப்ஸ்..!


நீங்கள் வலைத்தளத்தை பயன்படுத்த ஸ்மார்ட்போன் அல்லது டேப்ளெட் பயன்படுத்தினால் செய்ய வேண்டியவை இது தான். நீங்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளம் பயன்படுத்தினால் உங்களை கண்காணிப்பதை தவிர்க்க முதலில் head to Settings > Accounts & Sync > Google > Ads சென்று opt- out of Interest based adds அதாவது விளம்பரங்கள் வேண்டாம் எனத் தேர்வு செய்து அதற்கு அடுத்துள்ள குறியில் டிக் செய்யவும். நீங்கள் ஐஓஎஸ் இயங்குதளம் பயன்படுத்தினால் Settings > Privacy > Advertising and turn on Limit Ad Tracking சென்று செட்டிங்கில் விளம்பரம் மூலம் கண்காணிப்பு தேவையில்லை என்ற ஆப்ஷனில் க்ளிக் செய்ய வேண்டும்.

இன்னும் உங்களுக்கு நீங்கள் கண்காகிக்க படுகின்றீர்கள் என்று சந்தேகம் இருந்தால் டக்டக்கோ DuckDuckGo தரவிரக்கம் செய்து கொள்ளலாம். பின் என்ன சுளபமாக தப்பித்தீர்கள் ஜமாய் தான்.

Best Mobiles in India

English summary
How to Stop Google From Tracking You on the Web. Read More in Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X