Home
How to

கணினி அதிவேகமாக இயங்க இதை தான் செய்யனும்.!!

By Aruna Saravanan

அவசரப்பட்டு புத்தம் புதிய விண்டோஸ் இயங்குதளத்தை இன்ஸ்டால் செய்து விட்டு கணினி வேகம் குறைந்து விட்டது, அது வேலை செய்யவில்லை, அந்த பிரச்சனை, இந்த பிரச்சனை என புலம்புவோருக்கான தொகுப்பு தான் இது.

எந்த ஒரு விடயமும் புதியதில் சில பிரச்சனை கொடுத்தால் அந்த பொருள் மீது கடுப்பு தான் ஏற்படும். ஆனால் கடுப்பாகாமல் அதை எதிர்கொண்டால், பின்னாளில் அதே பொருளுடன் மகிழ்ச்சியாக இருக்கலாம். விண்டோஸ் 10 இன்ஸ்டால் செய்து அதிக பிரச்சனை ஏற்படுகின்றது என புலம்புவோர் தொடர்ந்து படித்து பிரச்சனைகளை எப்படி சரி செய்வது என தெரிந்து கொள்ளுங்கள்.

Start Up programs

Start Up programs

உங்கள் கணினியை ஆன் செய்தவுடனேயே அதன் மென்பொருள்கள் செயல் பட தொடங்கி விடும். இதனால் ஆரம்ப நிலை மெதுவாக நடைபெறும். ஆனால் நல்ல விஷயம் என்ன என்றால் விண்டோஸ் 10 இயங்குதளத்தின் டாஸ்க் மேனேஜரில் startup manager உள்ளது. நீங்கள் செய்ய வேண்டியது டாஸ்க்பாரை வலது கிலிக் செய்து task manager தேர்வு செய்து startup tab செல்லவும் அவ்வளவுதான்.

மார்லவேர் மற்றும் ஆட்வேர்

மார்லவேர் மற்றும் ஆட்வேர்

இவைதான் உங்கள் கணினி மெதுவாக செயல்பட முக்கிய காரணம். கணினியின் இயல்பு நிலையை இவை பெரும் அளவு பாதிக்கின்றது. இதனால் பின்இணைப்புகள் பாதிப்பு அடைகின்றன. ஆட்வேர் பிரவுஸிங் செயலை மெதுவாக செயல் பட வைக்கின்றது அதோடு தேவையில்லாத விளம்பரங்களின் தொல்லையும் வரும். ஆகவே ஆண்டி வைரஸ் மற்றும் மால்வேர்பைட்ஸ் உதவியுடன் கணினியை சீர் படுத்தவும்.

அனிமேஷன்

அனிமேஷன்

Animation மற்றும் visual effects உங்கள் கணினிக்கு அதிகமான பவர் சப்லையை இழுப்பதால் அவற்றை செயல் இழக்கம் செய்வது நல்லது. அவை உங்கள் RAMஐ பெரிய அளவில் பாதிப்பதால் கணினி மெதுவாக செயல் படும். ஆகவே அவற்றை செயல் இழக்கம் செய்தல் அவசியம். அதற்கு, start buttonல் வலது கிலிக் செய்து Settings > Advance System Setting > Performance > Settings > Adjust for better performance or Custom என்பதை பின்பற்ற வேண்டும்.

Performance Monitor

Performance Monitor

விண்டோஸ் 10 இயங்குதளத்தில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் அதன் உள்ளே Performance monitor வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த பிரச்சனை இருந்தாலும் அதை பற்றிய ஒரு விளக்கமான தகவல் அதில் கிடைக்கும். அதற்கு உங்கள் சர்ச் மெனுவிற்கு சென்று 'perfmon / report ' என்பதை எண்டர் செய்யவும். இது தாணியங்கியாக ரிப்போர்ட் சேவையை செய்யும். ரிப்போர்ட் முடிந்தவுடன் எச்சரிக்கை பகுதிக்கு அதாவது warning section செல்லவும். அங்கே என்ன பிரச்சனை என்று அறிந்து கொள்ளலாம்.

Troubleshoot

Troubleshoot

Troubleshoot டெக்னிக்கை பயன்படுத்தி கணினியில் எந்த மாதிரியான பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்பதை பார்க்கவும். கண்ட்ரோல் பேனலில் உள்ள troubleshooting ஐகானை கண்டுபிடித்து 'Run maintenance tasks' என்ற வாசகத்தில் கிலிக் செய்தால் பிரச்சனையை கண்டு பிடிக்கலாம்.

வன்பொருள்

வன்பொருள்

வன்பொருளில் தேவையில்லாமல் இருக்கும் கோப்புகளை நீக்கி அதில் தேவையான காலி இடத்தை வைத்தால் உங்கள் கணினி வேகமாக செயல்படும். வன்பொருளில் அதிகமான கோப்புகள் இருந்தாலும் கணினி மெதுவாக செயல்படும்.

அப்கிரேட்

அப்கிரேட்

எல்லா முயற்சிக்கு பின்பும் உங்கள் கணினி வேகமாக செயல்படவில்லை என்றால், உங்கள் வன்பொருளை அப்கிரேட் செய்ய வேண்டிய நேரம் இது என்று நினைத்து கொள்ளுங்கள். உயர் ரக RAM அல்லது பெரிய வன்பொருள் டிஸ்க் உங்கள் கவலையை நீக்கி விடும்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
How to speed up your PC Tamil
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X