தொலைந்த ஐபோனினை கண்டுபிடிப்பது எப்படி.??

By Aruna Saravanan
|

உங்கள் ஐபோன் தொலைந்து விட்டதா. எங்கு இருக்கின்றது என்பது தெரியவில்லையா. கவலை வேண்டாம். அது எங்கு ஒலிந்திருந்தாலும் கண்டுபிடித்து விட முடியும். நாற்காலிக்கு அடியிலா அல்லது பஸ் சீட் அடியிலா எங்கு இருந்தாலும் கண்டு பிடிப்பது மிக மிக சுலபம் தான். இதற்கென்றே உங்களுக்கு உதவ வந்துள்ளது ஆப்பிளின் Find My iPhone. இதன் உதவியுடன் உங்கள் போன் எங்கு மறைந்திருந்தாலும் கண்டு பிடித்து விட முடியும்.

இதில் உங்கள் போன் இருக்கும் இடத்தை துல்லியமாக கண்டுபிடிக்க முடியும். கண்டுபிடித்தவுடன் அது நாற்காலியின் அடியில் இருக்கின்றது என்று தெரிந்தால் உடனே உங்கள் பிசி அல்லது ஐபேடில் இருந்து அதற்கு ரிங் கொடுக்க முடியும். அல்லது திருட்டு போய் இருக்கின்றது என்று தெரிந்தால் உடனே தூரத்தில் இருந்தே நீங்கள் அதை லாக் செய்யவும் முடியும். இதன் சிறப்பான விஷயம் என்னவென்றால் இந்த தடையத்தை கொண்டு காவல் நிலையத்தால் கண்டிப்பாக கண்டு பிடித்து விட முடியும்.

இதை செய்ய நீங்கள் முதலில் செய்ய வேண்டியது என் ஐபோனை தேடவும் அதாவது Find my iPhone என்பதை செட் அப் செய்வதுதான். அது எப்படி என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

ஐக்ளவுட்

ஐக்ளவுட்

முதலில் உங்கள் ஐபோனில் உள்ள ஹோம் திரைக்கு சென்று செட்டிங் ஆப் என்பதை அழுத்தவும். அது சாம்பல் நிற ஐகான். இதன் உள்ளே ஐக்ளவுடை அழுத்தவும்.

ஆப்பிள் ஐடி

ஆப்பிள் ஐடி

ஆப்பிள் ஐடியுடன் சை இன் செய்ய கூறும். ஏற்கனவே செய்யவில்லை என்றாலும் புதிதாக செய்ய இலவச சைன் இன் அம்சம் உள்ளது.

Find my iPhone

Find my iPhone

ஐக்ளவுட் ஆப்பிளின் உள்ளே Find my iPhone என்ற தேர்வு இருக்கும். அதை க்ளிக் செய்வதால் எந்த கணினியில் இருந்தும் உங்கள் ஐபோனை கண்காணிக்க முடியும்.

கணினி

கணினி

உங்கள் கணினியில் நெட் பயன்பாட்டுடன் இருக்கும் டிவைஸ் செல்லவும். இங்கு ஐக்ளவுட் கணக்கில் சைன் இன் செய்து நீங்கள் டிராக் செய்ய வேண்டிய டிவைஸை ஆப்ஷன்களில் இருந்து தேர்வு செய்யவும்.

கடவுச் சொல்

கடவுச் சொல்

ஏன் நீங்கள் உங்கள் போனுக்கு நீங்கள் கூடுதல் கடவுச் சொல் கொடுக்கக் கூடாது. இதனால் உங்கள் ஐபோனுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க முடியும்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
How To Set Up & Use Find My iPhone Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X