Home
How to

புதிய ஐபோன் / ஐபேட் : செட் அப் செய்வது எப்படி??

By Meganathan

எப்படியோ ஒரு ஐபோன் / ஐபேட் வாங்கியாச்சி, இதை எப்படி பயன்படுத்துவது, முதலில் என்ன செய்ய வேண்டும். அதிக விலை கொடுத்து வாங்கியிருப்பதால் அதிக கவனமும், அக்கறையும் முதல் வாரம் வரை நிச்சயம் இருக்கும்.

கவலை வேண்டாம் புதிய ஐபோன் / ஐபேட் கருவியை செட் அப் செய்வது எப்படி என்பதை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம். தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் அதனினை தெரிந்து கொள்ளுங்கள்.

பவர் பட்டன்

பவர் பட்டன்

முதலில் கருவியின் பவர் பட்டனை சில நொடிகளுக்கு அழுத்தி பிடிக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது வெள்ளை நிற ஆப்பிள் லோகோ திரையில் வரும், அவ்வாறு லோகோ தெரிந்தவுடன் பவர் பட்டனை விடுவிக்கலாம். அதன் பின் ஆங்கிலத்தில் ஹலோ என்ற வார்த்தை தெரியும், இந்நேரத்தில் திரையை வலது புறமாக ஸ்வைப் செய்து உங்களுக்கு தேவையான மொழியை தேர்வு செய்ய வேண்டும்.

இடம்

இடம்

அடுத்து உங்களது இருப்பிடத்தை தேர்வு செய்ய வேண்டும், அதாவது நீங்கள் வசிக்கும் நாடு எதுவோ அதனினை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

நெட்வர்க்

நெட்வர்க்

இனி கருவியை வயர்லெஸ் நெட்வர்க் மூலம் இணைக்க வேண்டும். இங்கு உங்களது ஐபோன் / ஐபேட் கருவியை வை-பையுடன் இணைக்க வேண்டும்.

லொகேஷன்

லொகேஷன்

அடுத்து லொகேஷன் சர்வீசஸ் ஆப்ஷனை எனேபிள் அல்லது டிசேபிள் செய்ய வேண்டும், இங்கு எனேபிள் செய்வது கருவியில் செயலிகளை பயன்படுத்த ஏதுவாக இருக்கும். பெரும்பாலும் நீங்கள் பயன்படுத்தும் செயலிகள் உங்களது இருப்பிடத்தை பயன்படுத்தி கொள்ளும். பின்னர் உங்களது செட்டிங்ஸ் மூலம் எந்தெந்த செயலிகள் உங்களது இருப்பிடத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்பதை நீங்களே செட் செய்து கொள்ளலாம்.

ரீஸ்டோர்

ரீஸ்டோர்

புதிய கருவியை முதல் முறை வாங்கியிருந்தால் செட் அப் நியு ஐபோன் / ஐபேட் ஆப்ஷனை தேர்வு செய்யலாம். ஒரு வேலை ஏற்கனவே ஐபோன் / ஐபேட் கருவியை பயன்படுத்தி புதிய கருவியை வாங்கியிருப்போர் ரீஸ்டோர் எனும் ஆப்ஷனை க்ளிக் செய்யலாம், இவ்வாறு செய்யும் போது பழைய கருவியில் இருந்த தகவல்கள் புதிய கருவியில் பெற முடியும்.

ஆப்பிள் அக்கவுன்டு

ஆப்பிள் அக்கவுன்டு

அடுத்து ஐபோன் / ஐபேட் கருவியில் ஆப்பிள் அக்கவுன்டு உருவாக்க முதல் முறை ஆப்பிள் கருவியை பயன்படுத்துவோர், இந்த கணக்கு புதியாக உருவாக்க வேண்டும். ஏற்கனவே ஆப்பிள் அக்கவுன்டு வைத்திப்போர் அதை வைத்து சைன் இன் செய்தால் போதுமானது. இங்கு உங்களது க்ரெடிட் அல்லது டெபிட் கார்டு தகவல்களை பதிவு செய்ய வேண்டும். கட்டணம் கொண்ட செயலிகளை பதிவிறக்கம் செய்தால் உங்களது கணக்கில் இருந்து பணம் எடுக்கப்படும், இலவச செயலிகளை பதிவிறக்கம் செய்யும் போது எவ்வித கட்டணமும் எடுக்கப்பட மாட்டாது.

விதிமுறைகள்

விதிமுறைகள்

அடுத்து ஆப்பிள் நிறுவனத்தின் விதிமுறைகளை நன்கு படித்து அதன் பின் அதனினை ஏற்க வேண்டும். அதன் பின் உங்களது சிம் கார்டினை கருவியில் பொருத்தலாம்.

ஐக்ளவுட்

ஐக்ளவுட்

அடுத்து யூஸ் ஐக்ளவுட் ( Use iCloud ) எனும் அம்சத்தினை க்ளிக் செய்ய வேண்டும், இதன் மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் பல்வேறு அம்சங்களை பயன்படுத்த முடியும். ஐக்ளவுட் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள அபவுட் ஐக்ளவுட் ( About iCloud ) ஆப்ஷனை க்ளிக் செய்யலாம். ஐக்ளவுடின் முக்கிய அம்சம் ஐபோன் / ஐபேட் கருவி தொலைந்தால் கண்டுபிடிக்க உதவும், ஐக்ளவுட் அம்சத்தினை எனேபிள் செய்தவுடன் இந்த அம்சம் உங்களது கருவியில் ஆக்டிவேட் செய்யப்பட்டு விடும்.

ஐமெசேஜ்

ஐமெசேஜ்

ஐக்ளவுட் பயன்படுத்தினால் ஐமெசேஜ் பயன்படுத்த மின்னஞ்சல் மற்றும் மொபைல் போன் நம்பர்களை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு பதிவு செய்யும் போது ஐமெசேஜ் பயனாளிகளுடன் குறுந்தகவல்களை அனுப்ப முடியும்.

ஐக்ளவுட் டிரைவ்

ஐக்ளவுட் டிரைவ்

அடுத்து ஐக்ளவுட் டிரைவ் ஆப்ஷன், உங்களுக்கு வேண்டுமானால் இந்த ஆப்ஷனினை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த ஆப்ஷன் உங்களை ஆன்லைனில் தரவுகளை சேமித்து கொள்ள வழி செய்யும்.

பாஸ்கோடு

பாஸ்கோடு

அடுத்து பாஸ்கோடு ஒன்றை உருவாக்க வேண்டும், இந்த தவிர்க்க கூடாது. பாஸ்கோடு என்டர் செய்வதன் மூலம் உங்களது கருவியை மற்றவர்கள் பயன்படுத்தாமல் தடுக்க முடியும். இங்கு நான்கு இலக்கு கடவு சொல் ஒன்றை பதிவு செய்ய வேணஅடும், புதிய ஐபோன் / ஐபேட் கருவிகளில் ஆறு இலக்கு பாஸ்கோடு பதிவு செய்ய வேண்டும்.

சிரி

சிரி

அடுத்து சிரி பயன்படுத்த விரும்பினால் தேர்வு செய்யலாம். சிரி என்பது குரல் மூலம் ஐபோன் கருவியில் சில அம்சங்களை பயன்படுத்த வழி செய்வதாகும்.

ரிப்போர்ட்

ரிப்போர்ட்

ஆப்பிளுக்கு எரர் ரிப்போர்ட் அனுப்ப வேண்டும் அல்லது வேண்டாம் என ஒரு ஆப்ஷனினை தேர்வு செய்யலாம்.

ஜிமெயில்

ஜிமெயில்

அடுத்து ஐபோன் / ஐபேட் கருவியில் பயன்படுத்த வேண்டுமா அதை எப்படி செய்வது என்று தொகுப்பினை விரைவில் பதிவு செய்வோம், அதுவரை இணைந்திருங்கள்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Read here in Tamil How to set up a new iPhone.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X