இலவசமாக குருந்தகவல் அனுப்புவது எப்படி.??
இலவசமாக குருந்தகவல் அனுப்ப முடியும் என்ற ஒரே நோக்கத்திற்காகவே வாட்ஸ் ஆப் போன்ற குருந்தகவல் செயளிகள் பிரபலமாக இருக்கின்றன. இதன் ஒரே குறைபாடு குருந்தகவல் அனுப்புபவரும், பெறுபவரும் இந்த செயளியை இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும். மேலும் குருந்தகவல் அனுப்ப இருவரும் இன்டெர்நெட் வசதி பெற்றிருக்க வேண்டும்.

இலவசமாக குருந்தகவல் அனுப்ப பல வழிகள் இருக்கின்றன. ஆனால் அவைகளை பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும். இதன் மூலம் உங்களது தகவல்கள் திருடப்படும் வாய்ப்புகளும் அதிகம். இலவச குருந்தகவல் அனுப்ப இணையங்களை ஆராய்ந்த போது கண்டறியப்பட்ட செயளி பற்றி தான் இங்கு நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள்.
வே டூ எஸ்எம்எஸ் (Way2sms)

இலவசமாக குருந்தகவல் அனுப்ப வே டூ எஸ்எம்எஸ் சிறந்த தளமாக இருக்கின்றது. மொபைல் ப்ரவுசர், கணினி ப்ரவுசர் மற்றும் ஆன்டிராய்டு ஆப் மூலம் இந்த சேவையை நீங்கள் பயன்படுத்த முடியும்.
பயன்படுத்தும் போது எக்கச்சக்கமான விளம்பரங்கள் உங்களை குறுக்கிடும் இருந்தும் பயன்படுத்த கூடிய இலவச செயளியாகவே இது இருக்கின்றது. இந்த சேவையை பயன்படுத்த கணினி மற்றும் மொபைல் ப்ரவுசர் சிறந்ததாக இருக்கின்றது. இந்த சேவையை பயன்படுத்துவது எப்படி என்று பாருங்கள்:
1. முதலில் வே டூ எஸ்எம்எஸ் தளத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ளுங்கள், பதிவு செய்யும் போது உங்களது மொபைல் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு கடவு சொல் அனுப்பி வைக்கப்படும். இந்த சேவையில் பதிவு செய்ய இரு கடவு எண்களும் அவசியம் தேவை. வே டூ எஸ்எம்எஸ் தளத்திற்கு செல்ல இங்கு க்ளிக் செய்யவும்
2. பதிவு செய்து முடித்த பின் இணையத்தினுள் சென்று லாக் இன் செய்ய வேண்டும், லாக் இன் செய்ததும் இலவச எஸ்எம்எஸ் அனுப்பும் பட்டனை (Free SMS) க்ளிக் செய்ய வேண்டும், க்ளிக் செய்தவுடன் கான்டாக்ட்களை சேர்க்க சொல்லும் பக்கம் திறக்கும், கான்டாக்ட்களை சேர்க்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை, அதனால் நேரடியாக எஸ்எம்எஸ் அனுப்பும் பட்டனை (Send SMS) க்ளிக் செய்யலாம்
3. இங்கு நீங்கள் குருந்தகவல் அனுப்ப வேண்டிய மொபைல் நம்பரை டைப் செய்து, குருந்தகவலை டைப் செய்து எஸ்எம்எஸ் அனுப்பும் பட்டனை (Send SMS )க்ளிக் செய்ய வேண்டும்


Click it and Unblock the Notifications








