ஸ்மார்ட்போன் டேட்டா கட்டணத்தை குறைக்கும் வழிமுறைகள்...!!

By Meganathan

இன்றைய இணைய உலகில் பம்பரமாக இயங்கி வரும் மக்களுக்கு பல விதங்களில் ஸ்மார்ட்போன்கள் பக்க பலமாக இருக்கின்றது என்றே கூறலாம். அந்தளவு ஸ்மார்ட்போன்கள் இன்று மக்களிடத்தில் அத்தியாவசிய கருவியாக இருக்கின்றது. இந்த அத்தியாவசிய கருவிக்கு மிகவும் அத்தியாவசியமாக இருப்பது இன்டர்நெட் இணைப்புகள் தான்.

'ஸ்மார்ட்போன்'கள் - ஏமாறாமல் இருப்பது எப்படி..?

இன்டர்நெட் இல்லாமல் ஸ்மார்ட்போன்கள் இல்லை என்ற நிலையில் அவைகளுக்கான கட்டணம் கட்டுக்கடங்காமல் தான் இருக்கின்றது. நிலைமை இப்படி இருக்க ஸ்மார்ட்போனில் இன்டர்நெட் கட்டணங்களை குறைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

ட்ராக்கிங் டேட்டா

ட்ராக்கிங் டேட்டா

இன்டர்நெட் கட்டணத்தை குறைக்க முதலில் எந்தெந்த செயலிகள் அதிக டேட்டாவினை பயன்படுத்துகின்றது என்பதை கண்டறிய வேண்டும். இதன் மூலம் அதிக டேட்டா பயன்படுத்தும் செயிலிகளை தொடர்ந்து பயன்படுத்துவது குறித்து மறுபரிசீலனை செய்யலாம்.

டேட்டா மானிட்டர்

டேட்டா மானிட்டர்

பெரும்பாலான இயங்குதளங்களில் பில்ட் இன் டேட்டா யூசேஜ் ட்ராக்கர் கொண்டிருக்கின்றது, இதன் மூலம் எந்தெந்த செயலிகள் எத்தனை அளவு டேட்டாக்களை பயன்படுத்துகின்றது என்பதை ட்ராக் செய்ய முடியும்.

ஆனேவோ கவுன்ட்

ஆனேவோ கவுன்ட்

இந்த செயலியில் நீங்கள் பயன்படுத்தும் டேட்டா பேக் குறித்த தகவல்களை பதிவு செய்தால், தினசரி, வாரம், மாதமும் பல்வேறு செயலிகள் பயன்படுத்திய டேட்டா அளவுகளை துல்லியமாக காட்டும்.

மை டேட்டா மேனேஜர்

மை டேட்டா மேனேஜர்

இந்த செயலி உங்களது டேட்டா பயன்பாடுகளை ட்ராக் செய்யும். மேலும் 3ஜி அல்லது வை-பை என நீங்கள் பயன்படுத்திய டேட்டா குறித்த தகவல்களை துல்லியமாக வழங்கும்.

வை-பை
 

வை-பை

அதிகளவு டேட்டா பயன்படுத்தும் சேவைகளுக்கு வை-பை தான் சிறந்தது. குறிப்பாக வீடியோ சாட்டிங், செயலிகளை அப்டேட் செய்வது போன்றவைகளுக்கு வை-பை பயன்படுத்தலாம்.

2ஜி / எட்ஜ்

2ஜி / எட்ஜ்

அதிவேக இன்டர்நெட் தேவைப்படாத நேரங்களில் 2ஜி / எட்ஜ் சேவைகளை பயன்படுத்தலாம். வாட்ஸ்ஆப் போன்ற செயலிகளை இயக்க அதிக டேட்டா தேவைப்படாது.

நோட்டிபிகேஷன்

நோட்டிபிகேஷன்

தேவையற்ற செயலிகளின் புஷ் நோட்டிபிகேஷன்களை ஆஃப் செய்து வைக்கலாம், இதன் மூலம் டேட்டாவினை மிச்சப்படுத்தலாம்.

கேம்

கேம்

நீங்கள் விளையாடும் இலவச கேம்களில் இருக்கும் விளம்பரங்கள் டேட்டா கனெக்ஷன் மூலம் லோடு ஆகும், இதனால் இலவச கேம்களை விளையாடும் போது இன்டர்நெட் கனெக்ஷனினை ஆஃப் செய்து வைக்கலாம்.

Most Read Articles
 
Read more about:
English summary
Here you will find some easy and simple steps that will guide you How to save money on internet bills on smartphones. This is simple and you will like this.
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X