வாரண்டிக்கு நாங்க கியாரண்டி..!

By Meganathan

எந்த பொருளையும் புதுசா வாங்கும் போது நல்லா பாத்துக்குறதும், கொஞ்ச நாள் கழிச்சு அதை கண்டுக்காம விட்டு விடுவதும் அனைவரது வாழ்க்கையிலும் சகஜமான விஷயம் தான்.

'பாகுபலி'யை கரைத்து குடிக்கும் 'புலி'..!

அப்படி இருக்க இன்றைக்கு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வாங்கும் பலரும் நினைக்கும் விஷயம், என்ன ஆனாலும் போனினை ரூட் செய்யாமல் இருக்க வேண்டும் என்பது தான்.

ஆண்ட்ராய்டு போனினை ரூட் செய்வதும் சும்மா இருக்குற கல்ல தலையில் தூக்கி வச்சுக்குறதும் ஒன்னு தான், ரூட் செய்த பின் போனிற்கு வழங்கப்பட்ட வாரண்டி முடிந்து போகும் என்பது தான் இதற்கு முக்கிய காரணமாக இருந்து வந்தது.

கடுப்பேத்றார் யுவர் ஆனர், 'ஆண்ட்ராய்டு'..!?

இங்கு போனினை ரூட் செய்தாலும் வாரண்டி போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்...

ஐரூட்

ஐரூட்

முதலில் ஐரூட் மென்பொருளை உங்களது கணினியில் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

டிரைவர்

டிரைவர்

உங்களது போனில் இருக்கும் டிரைவர்களை கணினியில் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

ரூட்

ரூட்

அடுத்து ஸ்மார்ட்போன் செட்டிங்ஸ் -- செக்யூரிட்டி -- லாக் ரீ ஆக்டிவேஷனினை டிசேபிள் செய்ய வேண்டும்.

இன்ஸ்டால்
 

இன்ஸ்டால்

கணினியில் ஐரூட் மென்பொருளை இன்ஸ்டால் செய்து ஓபன் செய்ய வேண்டும்.

யுஎஸ்பி

யுஎஸ்பி

உங்களது கருவியில் யுஎஸ்பி டீபக்கிங் செய்ய முடியுமா என்பதை சரி பார்த்து கொள்ளுங்கள்.

இணைப்பு

இணைப்பு

அடுத்து உங்களது கருவியினை கணினியுடன் இணைக்க வேண்டும்.

ஐரூட்

ஐரூட்

ஐரூட் மென்பொருள் உங்களது கருவியினை டேட்டாபேசினில் தேடும், உங்களது கருவி கிடைத்தவுடன் ரூட் பட்டன் திரையில் தெரியும்.

ரூட்

ரூட்

அடுத்து ரூட் செய்யும் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும், க்ளிக் செய்தவுடன் சில நொடிகளில் உங்களது கருவி ரீஸ்டார்ட் ஆகும்.

ரூட் செக்கர்

ரூட் செக்கர்

இங்கு உங்களது கருவியில் ரூட் முழுமையாக முடிந்து விட்டதா என்பதை சரி பார்க்க ரூட் செக்கர் எனும் செயலியை பயன்படுத்தலாம்.

சூப்பர்சூ

சூப்பர்சூ

உங்களது கருவியை ரூட் செய்து முடித்த பின் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து சூப்பர்சூ செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

ஓபன்

ஓபன்

சூப்பர்சூ செயலியை ஓபன் செய்து ஓகே பட்டன் அல்லது 允许 பட்டனை க்ளிக் செய்யவும்.

ஓகே

ஓகே

சூப்பர்சூ ப்ராம்ப்ட் செய்து சூ பைனரியை இன்ஸ்டால் செய்ய ஓகே பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

டைட்டானியம் பேக்கப்

டைட்டானியம் பேக்கப்

அடுத்து டைட்டானியம் பேக்கப் செயலியை ப்ளே ஸ்டோரில் இருந்து இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

ஃப்ரீஸ்

ஃப்ரீஸ்

இங்கு டைட்டானியம் பேக்கப் செயலியை ஓபன் செய்து ஐரூட் செயலியால் இன்ஸ்டால் செய்யப்பட்ட சூப்பர்யூஸர் செயலியை ஃப்ரீஸ் செய்ய வேண்டும்.

ரீஓபன்

ரீஓபன்

அடுத்து சூப்பர்சூ செயலியை ஓபன் செய்து, பின் சூ பைனரியை ரீ இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

ஐரூட்

ஐரூட்

அனைத்தையும் சரியாக செய்து முடித்த பின் உங்களிடம் வாரண்டியுடன் கூடிய ரூட் செய்யப்பட்ட கருவி இருக்கும்.

கருவி

கருவி

இந்த வழி முறையினை ஆண்ட்ராய்டு 4.0 ஐஸ் க்ரீம் சான்ட்விட்ச் மற்றும் அதற்கும் அதிகமான இயங்குதளங்களை கொண்டிருக்கும் கருவிகளில் மட்டும் தான் மேற்கொள்ள முடியும்.

லாலிபாப்

லாலிபாப்

ஆண்ட்ராய்டு லாலிபாப் இயங்குதளத்தில் இதனை செயல்படுத்த முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 
Read more about:
English summary
Check out here How to root an Android device without voiding the warranty. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X