ஐபோன் பாஸ்கோடு மறந்தால் கவலை வேண்டாம் இதை செய்யுங்கள் போதும்.!!

Written By: Aruna Saravanan

ஸ்மார்ட்போன்களின் வரிசையில் ஆப்பிள் ஐபோன் மிகவும் புதுமையானது. பல அம்சங்களை கொண்ட சமீபத்திய ஐபோன் 6எஸ் மற்றும் ஐபோன் 6எஸ் ப்ளஸ் மிகவும் சிறப்பானது. அப்படியாக ஐபோனினை பாதுகாக்க நான்கு இலக்கு பாஸ்கோடு கொண்டு லாக் செய்ய முடியும்.

ஒரு வேளை நீங்கள் பாஸ் கோடை மறந்தால் என்ன செய்ய வேண்டும். கவலை வேண்டாம் அதற்கான வழியை நாங்கள் கூறுகின்றோம். கீழே உள்ள வழிகளை படித்து பயன் அடையுங்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஆறு தோற்ற முயற்சிகள்

முயற்சி

நீங்கள் உங்கள் ஐபோனினை திறப்பதற்கு முயற்சி செய்து தோற்று போனீர்களா. அதாவது பாஸ்கோடினை செயல் படுத்தி போனை திறப்பதற்கு 6 முறை முயற்சி செய்து, பின் ஐபோன் டிசேபிள்டு "iPhone disabled" என்ற வாசகம் உங்களை எரிச்சல் அடைய செய்கின்றதா. அப்படியென்றால் சற்று நேரத்திற்கு உங்களால் போனை திறக்க முடியாது. சற்று நேரம் கழித்து உங்கள் போனை சரியான பாஸ் கோடை கொண்டு திறக்க முடியும்.

ஐபோன் செயலிழக்கம் செய்யப்பட்டுள்ளது

செயலிழக்கம்

சற்று நேரத்திற்கு பின் பல தோல்வியுற்ற முயற்சிகளுக்கு பிறகு ஐபோன் முழுவதுமாக செயல் இழந்து போகும். அப்பொழுது அது உங்களுக்கு அளிக்கும் மெசேஜ் என்னவென்றால் "connect to itunes". உங்களால் இதற்கு மேல் பாஸ்கோடு பொருத்தும் முயற்சியை செய்ய முடியாது என்று அர்த்தம். இதை சரி செய்ய உங்கள் போனை கணினியுடன் இணைத்து iTunesஐ நிறுவி சரி செய்ய வேண்டும்.

தரவுகளை நீக்கவும்

தரவு

பல தோல்வியுற்ற முயற்சிகளுக்கு பிறகு நீங்கள் பாஸ்கோடினை செட் அப் செய்தவுடன் இரேஸ் டேட்டா ( erase data ) என்ற ஆப்ஷன் கிடைக்கும். 10 முயற்சிகள் தோல்வி அடைந்த பின் உங்கள் ஐபோன் எல்லா தரவுகளை அழித்து விடும். நீங்கள் ஐக்ளவுடு கொண்டு எல்லா தரவுகளையும் பேக் அப் செய்து இருந்தால் அதன் மூலம் சமீபத்திய தரவுகளை திரும்பவும் பெற முடியும்.

ஐபோனினை ரீஸ்டோர் செய்ய

ரீஸ்டோர்

உங்கள் கணினியில் ஐபோனினை இணைத்து ஐட்யூன்ஸை திறந்து சைடு பாரில் ஐபோனில் வலது புறம் கிளிக் செய்யவும். பின் பேக்கப் ஆப்ஷனை தேர்வு செய்யவும். பேக்கப் முடிந்தவுடன் ரீஸ்டோர் ஆப்ஷனினை தேர்வு செய்யவும். இப்பொழுது உங்கள் ஐபோன் புதுபிக்கப்பட்டு இழந்த தரவுகளை மீண்டும் பெற்று விட முடியும்.

ரீசெட் கடினமா

ரீசெட்

உங்கள் ஐபோனை ரீஸ்டோர் செய்யும் பொழுது உங்களுக்கு எரர் மெசேஜ் கிடைத்தால் டிவைஸை ஸ்விட்ச் ஆஃப் செய்து மீண்டும் திறக்கவும். ஹோம் பொத்தானை அழுத்தி பிடித்து ஐபோனினை ரீஸ்டார்ட் செய்யவும். ஹோம் பொத்தானை பிடித்து திறம்பவும் ப்ளகு செய்யவும். இப்பொழுது உங்கள் டிவைஸில் கனெக்ட் டூ ஐட்யூன்ஸ் ( connect to itunes ) என்ற மெசேஜ் கிடைக்கும். அதன் பின் ரீஸ்டோர் என்ற பொத்தானை அழுத்தவும்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Read Here in Tamil How To Restore Your iPhone when you Enter Wrong Password?
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot