புதிய கருவியில் வாட்ஸ்ஆப் குறுந்தகவல்களை மீட்பது எப்படி??

Posted By:

உலகளவில் மக்கள் தங்களுக்கு பிடித்தமானவர்களுடன் தொடர்பில் இருக்க மிகவும் பயனுள்ள செயலியாக வாட்ஸ்ஆப் இருக்கின்றது. குறைந்த அளவு இண்டர்நெட் பயன்படுத்தி உலகம் முழுக்க இலவசமாக குறுந்தகவல்களை அனுப்ப வாட்ஸ்ஆப் வழி செய்கின்றது. புதிய கருவிகளை வாங்குவோர் பழைய கருவியில் இருக்கும் வாட்ஸ்ஆப் குறுந்தகவல்களை பெறுவதில் அதிக சிரமத்தினை எதிர்கொள்கின்றனர்.

இனி கவலை வேண்டாம், பழைய கருவியில் இருக்கும் வாட்ஸ்ஆப் குறுந்தகவல்களை புதிய கருவியில் பெறுவது எப்படி என்பதை தான் இங்கு தெரிந்து கொள்ள இருக்கின்றீர்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஐபோன்

ஐபோன்

பழைய ஐபோனில் இருக்கும் குறுந்தகவல்களை ஐக்ளவுட் பேக்கப் எடுத்து பின் அதனினை புதிய கருவியில் பெற முடியும். இதற்கு பழைய ஐபோனின் வாட்ஸ்ஆப் செட்டிங்ஸ் சென்று சாட்ஸ் -- சாட் பேக்கப் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

ஐபோன்

ஐபோன்

அடுத்து புதிய ஐபோனில் வாட்ஸ்ஆப் செயலியை இன்ஸ்டால் செய்து உங்களது மொபைல் நம்பரை உறுதி செய்ய வேண்டும். இங்கு உங்களது பழைய குறுந்தகவல்களை மீட்கும் ஆப்ஷனை க்ளிக் செய்தால் உங்களது பழைய கருவியில் இருக்கும் குறுந்தகவல்கள் புதிய கருவியிலும் இருக்கும்.

ஆண்ட்ராய்டு

ஆண்ட்ராய்டு

ஆண்ட்ராய்டு கருவியில் எஸ்டி கார்டு மூலம் வாட்ஸ்ஆப் குறுந்தகவல்களை மீட்க முதலில் அவைகளை எஸ்டி கார்டில் பேக்கப் செய்ய வேண்டும். இதற்கு வாட்ஸ்ஆப் செட்டிங்ஸ் -- சாட் அன்டு கால்ஸ் -- பேக்கப் சாட்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தவுடன் உங்களது குறுந்தகவல்கள் எஸ்டி கார்டில் பேக்கப் செய்யப்பட்டு விடும்.

எஸ்டி கார்டு

எஸ்டி கார்டு

இனி பழைய கருவியில் இருக்கும் எஸ்டி கார்டினை எடுத்து புதிய கருவியில் பொறுத்தி புதிய கருவியில் வாட்ஸ்ஆப் செயலியை இன்ஸ்டால் செய்தால் போதுமானது. இவ்வாறு செய்ததும் புதிய கருவியிலும் பழைய கருவியில் இருந்த வாட்ஸ்ஆப் குறுந்தகவல்களை பார்க்க முடியும்.

கணினி

கணினி

எஸ்டி கார்டு ஆப்ஷன் இல்லாத ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் கருவியை கணினியுடன் இணைத்து பழை வாட்ஸ்ஆப் குறுந்தகவல்களை புதிய கருவியில் பெற முடியும். இதற்கு கருவியை கணினியில் இணைத்து வாட்ஸ்ஆப் குறுந்தகவல்களை கணினியில் பதிவு செய்து அதன் பின் புதிய கருவியை கணினியில் இணைத்து பழைய குறுந்தகவல்களை புதிய கருவியில் பெற முடியும்.

கூகுள் டிரைவ்

கூகுள் டிரைவ்

ஐபோனில் இருப்பதை போன்றே ஆண்ட்ராய்டு கருவியிலும் கூகுள் டிரைவ் மூலம் குறுந்தகவல்களை பேக்கப் செய்ய முடியும். இதற்கு ஆண்ட்ராய்டு கருவியின் வாட்ஸ்ஆப் செட்டிங்ஸ் -- சாட் அன்டு கால் -- பேக்கப் சாட் ஆப்ஷன் சென்று கூகுள் டிரைவ் தேர்வு செய்தால் போதுமானது.

 தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Read here in Tamil How to restore WhatsApp messages on a new phone.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot