ஸ்மார்ட்போனில் வைரஸ் இருக்கா, தூக்கிடலாம் கவலை வேண்டாம்.!!

Written By: Aruna Saravanan

ஸ்மார்ட்போன் பல அம்சங்களை கொண்டது என்பதை நாம் அனைவரும் அறிவோம். சில சமயங்களில் அவற்றில் வரும் பல பிரச்சனைகளுக்கு காரணம் வைரஸ் தான். அப்படி ஆண்ட்ராய்ட் மொபைலை வைரஸ் தாக்கும் போது என்ன செய்ய வேண்டும் என்று இங்கு காண்போம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஸ்மார்ட்போனை ரீஸ்டார்ட் செய்யவும்

ரீஸ்டார்ட்

முதலில் உங்களது ஸ்மார்ட்போனை சேஃப் மொடில் வையுங்கள். இதனால் தேவையில்லாத ஆப்ஸ்கள் உங்கள் கருவிக்கு பாதிப்பு ஏற்படுத்துவதை தவிர்க்க முடியும். சேஃப் மோடில் வைக்க, பவர் ஆஃப் ஆப்ஷனை பெற பவர் பொத்தானை அழுத்தவும். பிறகு பவர் ஆஃப் பொத்தானை அழுத்தி பிடிக்கவும் இதன்பிறகு சேஃப் மோட் ஆப்ஷனில் ரீஸ்டார்ட் செய்யவும்.

டிவைஸ் செட்டிங்

செட்டிங்

டிவைஸ் செட்டிங் சென்று downloaded tab என்பதற்கு கிழ் உள்ள ஆப்ஸை தேர்வு செய்யவும். பட்டியலை கவனமாக படிக்கவும். அதில் நிறுவ கூடாத ஆப்ஸ் இருக்கின்றதா என்று பார்க்கவும்.

தொல்லை கொடுக்கும் ஆப்ஸை நீக்கவும்

ஆப்ஸ்

தேவையில்லாத செயலியின் மீது தட்டி uninstall என்பதை க்ளிக் செய்யவும். பல சமயங்களில் uninstall பொத்தான் மங்களாக இருக்கும். அப்பொழுது வைரஸ் டிவைஸ் adminstratorஆக செயல் புரிகின்றது என்று அர்த்தம்.

டிவைஸ் அட்மினிஸ்ட்ரேட்டர்

டிவைஸ்

இப்பொழுது device administrator செல்லவும். Admistrator status கொண்ட ஆப்ஸ்களின் பட்டியல் உங்களுக்கு கிடைக்கும். நீக்க வேண்டிய ஆப்ஸை செக் குறியில் இருந்து நீக்கவும். பிறகு அடுத்த திரையில் உள்ள deactivateஐ தட்டவும்.

இயல்பான மோடிற்கு ரீஸ்டார்ட் செய்யவும்

ரீஸ்டார்ட்

தேவையில்லாத தொந்தரவுக்கு காரணமான ஆப்ஸை நீக்கியவுடன் உங்கள் ஸ்மார்ட்போனை ரீஸ்டார்ட் செய்யவும். இப்பொழுது உங்கள் போனை வைரஸில் இருந்து காப்பாற்றி விட்டோம் என்று நிம்மதி கொள்ளலாம்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
How to remove Virus from smartphone for free Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot