ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனில் தொலைந்து போன குறுந்தகவல்களை மீட்பது எப்படி
ஆன்டிராய்டு போனில் தவறாக அழித்து விட்டீர்களா, கவலை கொள்ளாமல் இருந்தால் 90%அழிந்து போன குறுந்தகவல்களை மீட்டு விடலாம்.
ஆன்டிராய்டு போனில் அழிந்து போன குறுந்தகவல்களை மீண்டும் மீட்பது எப்படி என்று கீழே வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

ரீஸ்டோர்
எஸ்எம்எஸ் அழிந்ததை உறுதி படுத்திய பின் போனினை ரீஸ்டோர் செய்ய கூடாது, அவ்வாறு செய்தால் எஸ்எம்எஸ்களை மீட்க முடியாது.

டேட்டா ரிக்கவரி
கணினியில் ஆன்டிராய்டு டேட்டா ரிக்கவரி ப்ரோகிராமை இன்ஸ்டால் செய்த பின் அதனினை ரன் செய்ய வேண்டும்.

யுஎஸ்பி டீபக்கிங்
யுஎஸ்பி கேபிள் கொண்டு ஆன்டிராய்டு போனினை கணினியில் கனெக்ட் செய்யுங்கள்.

ஸ்கேன்
யுஎஸ்பி டீபக்கிங் வெற்றிகரமாக நிறைவடைந்த பின் ஆன்டிராய்டு எஸ்எம்எஸ் மென்பொருள் உங்களது ஆன்டிராய்டு கருவியை நேரடியாக டிடெக்ட் செய்யும்.

ஸ்டார்ட்
இனி ரிக்கவரி மென்பொருளில் இருக்கும் ஸ்டார்ட் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

ரீஸ்டோர்
போன் முழுமையாக ஸ்கேன் ஆன பின் போனில் இருக்கும் மெசேஜ், கான்டாக்ட், போட்டோ மற்றும் வீடியோ ஆகியவற்றில் உங்களுக்கு வேண்டியதை க்ளிக் செய்து ரிக்கவர் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

ஆன்டிராய்டு பேக்கப்
அழிந்து போன குறுந்தகவல்களை மீட்ட பின் அவைகளை பேக்கப் செய்து வைத்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications