உங்க செல்போன் திருட்டுப்போகாமல் இருக்க...போனால்?

Posted By:

நம் தமிழர்களில் சுமார் 70 சதவிகிதத்திற்கும் மேலானோர் தற்பொழுது செல்போன் வைத்திருக்கிறார்கள் மற்றும் பயன்படுத்துகிறார்கள். செல்போன் சாதனங்கள் தயாரிப்பு நிறுவனங்களும் செல்போன் உற்பத்தி செய்யப்படும் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தவாறே உள்ளது.

செல்போன் திருட்டுக்களும், நாமாக தொலைத்துவிடுவதும் அதிகரித்துவருவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. கடினமான உழைப்பின் பயனாய் சில ஆயிரங்களில் வாங்கிய செல்போன் திருடப்பட்டாலோ, தொலைந்தாலோ எப்படியிருக்கும்? என்னோடது பழைய போன் தம்பி போனா போகட்டும் என்பவர்கள் வழிவிடுக!

உங்களுடைய செல்போன் தொலைந்துவிடாமல் இருப்பதற்கும் சேர்த்தே தகவல்கள் இங்கே வெளியிட்டுள்ளோம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
தகவல்கள்:

உங்க செல்போன் திருட்டுப்போகாமல் இருக்க...போனால்?

உங்களுடைய செல்போன் பழையதோ, புதியதோ வாங்கியவுடன் அதுசார்ந்த அனைத்து தகவல்களையும் தெளிவாக குறித்துக்கொள்க!

செல்போன் எண்,
செல்போன் மாடல்,
அதனுடைய கலர் மற்றும் அடையாளம்[உடைசல்,கீறல்] ஏதாவது,
உங்கள் செல்போனுடைய கடவுச்சொல்,
IMEI நம்பர்.

அடையாளம்:

உங்க செல்போன் திருட்டுப்போகாமல் இருக்க...போனால்?

முன்னர் சொல்லப்பட்ட அடையாளம் என்ற வார்த்தைக்கு தெளிவான பொருள் இங்கே!

உங்களுடைய செல்போனில் ஏதாவதொரு பகுதியலோ அல்லது பேட்டரியின் மேல்பகுதியிலோ மார்க்கர் பேனாவை பயன்படுத்தி அடையாளமிடுங்கள். சற்றே சிறுபிள்ளைத்தனம் தான் ஆனாலும் காணாமல் போனாலோ திருடப்பட்டாலோ இது பயன்படும்.

லாக் கோட்:

உங்க செல்போன் திருட்டுப்போகாமல் இருக்க...போனால்?

எந்த மாதிரியான செல்போனாக இருந்தாலும் அதற்கு பாதுகாப்பிற்காக லாக் கோட் என்ற 4 அல்லது 5 எண்கள் தரப்படும். அனைவரும் அவற்றை பயன்படுத்துவது நல்லது. சற்றே சிரமம்தான் இருந்தாலும் பயன்படுத்தினால் உங்களுடைய செல்போன் பாதுகாக்கப்படும்.

செல்போன் தொலைந்தால்?

உங்க செல்போன் திருட்டுப்போகாமல் இருக்க...போனால்?

உங்களுடைய செல்போன் தொலைந்தால் முதலில் உங்களுடைய நெட்வொர்க் ஆபரேட்டரிடம் தகவலை தெரிவியுங்கள். அவர்களால் உங்களுடைய மொபைல் எண்னை முடக்க முடியும். அதற்கு நீங்கள் சரியான விவரங்கள் தருவது அவசியம்.

புகார்:

உங்க செல்போன் திருட்டுப்போகாமல் இருக்க...போனால்?

செல்போன் தொலைந்தால் கண்டிப்பாக போலீசில் புகாரளிப்பது நல்லது. ஏனெனில், உங்களுடைய போன் திருடியவர் அதை தவறாக பயன்படுத்தினாலும் உங்களுக்கு சிக்கல் வராது என்பதை நினைவில்கொள்க!

சாப்ட்வேர்:

உங்க செல்போன் திருட்டுப்போகாமல் இருக்க...போனால்?

உங்களுடைய செல்போன், அதிநவீன வசதியுடைய ஸ்மார்ட்போனாக இருந்தால் அதற்கென சில பாதுகாப்பு அப்ளிகேசன்கள் இலவசமாகவே கிடைக்கின்றன. அவற்றை பயன்படுத்துங்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Gadgets Gallery

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot