ஸ்மார்ட்போன் தகவல்களை தடையமே இல்லாமல் அழிப்பது எப்படி

By Meganathan
|

வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மூலம் எதுவும் சாத்தியம் என்பதை உணர்த்தும் பல செயல்கள் அரங்கேறும் நிலையில் சிறிய ஸ்மார்ட்போனில் அழிக்கப்பட்ட தகவல்களை மீட்பது ஒன்றும் பெரியா காரியமில்லை என்று கூறுலாம்.

புதிய ஸ்மார்ட்போன் வாங்கும் முன் பழைய ஸ்மார்ட்போனை விற்க வேண்டும், ஆனால் பழைய போனில் இருக்கும் தகவல்களை அழித்து அதன் பின் விற்றாலும் அவைகளை சுலபமாக மீட்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா.

  ஸ்மார்ட்போன் தகவல்களை தடையமே இல்லாமல் அழிப்பது எப்படி

அவாஸ்ட் நிறுவனம் வாடிக்கையாளர்கள் விற்ற 20 மொபைல்களில் இருந்து சுமார் 40,000 புகைப்படங்கள், 250 செல்பிக்கள், நூற்றுக்கும் மேற்பட்ட கூகுள் தேடல்கள், 750 மின்னஞ்சல் மற்றும் குருந்தகவல்களை மீட்டனர். கவலை வேண்டாம் இந்த பிரச்சனையில் சிக்கமால் இருப்பது எப்படி என்று பாருங்கள்.

ஸ்மார்ட்போன் விற்கும் போது கூடுதல் மெமரி கார்டை சேர்த்து கொடுக்காதீர்கள், சில விண்டோஸ் செயளிகளை கொண்டு மெமரி கார்டில் இிருக்கும் தகவல்களை எடுக்க முடியும். ஏன் இப்படி ஆகின்றது.

ஒவ்வொரு முறை பைல்களை அழிக்கும் போதும் அவை நன்ட் ப்ளாஷ் ஸ்டோரேஜில் வைக்கப்படுகின்றது. ஒவ்வொரு முறை நீங்கள் அழிக்கும் தகவல்களை நன்ட் ப்ளாஷில் தான் வைக்கப்படுகின்றது. இதனால் அவை மீண்டும் மீட்கபடும் சாத்தியக்கூருகள் அதிகம் இருக்கின்றது. இதற்கு போனை ரீசெட் செய்யலாம், அப்படி அது கடினமாக தெரிந்தால் இதையும் பின்பற்றலாம்.

ஸ்மார்ட்போனில் இருக்கும் என்க்ரிப்ட் ஆப்ஷன் மூலம் உங்கள் தகவல்களை நிரந்தரமாக அழிக்க முடியும். என்க்ரிப்ட் ஆப்ஷன் போனின் செக்யூரிட்டி ஆப்ஷனில் காணப்படும். போனை என்க்ரிப்ட் செய்தால் எந்த தகவல்களையும் மீண்டும் எடுக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். என்க்ரிப்ட் செய்வது எப்படி என்று பாருங்கள்

முதலில் செட்டிங்ஸ் சென்று அங்கு செக்யூரிட்டி ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்

  ஸ்மார்ட்போன் தகவல்களை தடையமே இல்லாமல் அழிப்பது எப்படி

செக்யூரிட்டி ஆப்ஷனில் என்க்ரிப்ட் போன் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்

  ஸ்மார்ட்போன் தகவல்களை தடையமே இல்லாமல் அழிப்பது எப்படி

என்க்ரிப்ட் ஆப்ஷன் தேர்வு செய்த பின் போனை சார்ஜரில் இணைத்து பின்பற்றுங்கள்

  ஸ்மார்ட்போன் தகவல்களை தடையமே இல்லாமல் அழிப்பது எப்படி

என்க்ரிப்ட் துவங்கும் முன் அதன் பின்விளைவுகளை நினைவில் கொள்ளுங்கள்

  ஸ்மார்ட்போன் தகவல்களை தடையமே இல்லாமல் அழிப்பது எப்படி
Best Mobiles in India

English summary
How to Permanently Delete Your Private Files. Check out the best way you can take care of all the personal data available on the device

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X