உங்கள் ஸ்மார்ட்போனை பாதுகாக்க 5 வழிகள்!!!
ஒரு காலத்தில் மொபைல் போன் பெரும்பாலும் பேசுவதற்க்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. பின்பு மொபைல் மூலம் மேசேஜ் அனுப்புவது பிரபலமானது. அதன் பிறகு ஜிபிஆர்எஸ் வசதி கொண்ட மொபைல்களில் இன்டெர்நெட் பயன்பாடு தொடங்கியது.
இப்பொழுது உள்ள ஸ்மார்ட்போன்களில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று சொல்லும் அளவுக்கு அதில் நிறைய வசதிகள் உள்ளன. ஸ்மார்ட்போனின் மூலம் ஆன்லைன் ஷாப்பிங் செய்யலாம். உலக விஷியங்களை நிமிடத்தில் தெரிந்துகொள்ளலாம்.
இது போன்ற பல பயன்கள் ஸ்மார்ட்போன்களில் உள்ளன. இன்று பலர் ஸ்மார்ட்போன்களில் மொபைல் பேங்கிங் வசதியை பயன்படுத்துகின்றனர். கிரிடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு பயன்படுத்தி ஆன்லைன் ஷாப்பிங் செய்கின்றனர். இது போன்ற வசதிகளை பயன்படுத்தும் போது உங்கள் ஸ்மார்ட்போன்களில் பாதுகாப்பு மிகவும் முக்கியம்.
உங்கள் ஸ்மார்ட்போன்களில் உள்ள தகவல்களை பாதுகாக்க உதவும் சில எளிய வழிமுறைகளை கீழே உள்ள சிலைட்சோவில் பாருங்கள்.
Click Here For New Smartphones Gallery

ஸ்மார்ட்போன்
ஸ்மார்ட்போனின் ஸ்கிரீனை பாஸ்வோர்ட் கொண்டு ஆட்டோமேட்டிக்காக லாக் ஆகும் படி வைக்க வேண்டும். பாஸ்வோர்ட் குறிப்பிட்ட தடவைகளுக்கு மேல் தவறாக பதிவானால் போனில் உள்ள தகவல்கள் தானாக அழிந்து விடும்படி செட்டிங் செய்ய வேண்டும்.

ஸ்மார்ட்போன்
புளுடூத் மற்றும் Wi-fi போன்றவைகளை பயன்படுத்தாமல் இருக்கும் பொழுது ஆப் செய்து வைக்க வேண்டும்.

ஸ்மார்ட்போன்
கம்பெனியின் அப்ளிகேஷனை போன்களுக்கு டவுன்லோட் செய்வதே பாதுகாப்பானது. அப்ளிகேஷனை டவுன்லோட் செய்யும் பொழுது அதன் ரேட்டிங்கையும் பார்த்து டவுன்லோட் செய்யுங்கள்.

ஸ்மார்ட்போன்
ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்களில் அப்ளிகேஷன் டவுன்லோட் செய்யும் பொழுது வைரஸ் வருவதக்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு அதனால் போனில் ஆன்டி வைரஸ் அப்ளிகேஷனை பயன்படுத்துங்கள்.
வித்தியாசமான எம்எம்எஸ் மற்றும் மெயில்கள் வந்தால் தவிர்த்துவிடுங்கள்.

ஸ்மார்ட்போன்
உங்கள் ஸ்மார்ட்போனில், போன் எங்கு உள்ளது என்பதை சுட்டிக்காட்டும் அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்து வைய்யுங்கள். போன் திருடு போய்விட்டால் அல்லது தொலைந்து போய்விட்டால் கண்டுபிடிக்க இது உதவும்.
Click Here For List of New Smartphones And Tablets Price & Specs


Click it and Unblock the Notifications