ஐபோனை மின்னல் வேகத்தில் இயக்க என்ன செய்ய வேண்டும்??

By Meganathan
|

இன்று எதை செய்ய வேண்டும் என்றாலும் அதற்கு கைபேசி எனப்படும் மொபைல் போன் கருவி கட்டாயம் தேவைப்படுகின்றது என்று தான் கூற வேண்டும். அப்படியான மொபைலில் ஏதேனும் சிறிய கோளாறு என்றாலும் யாராலும் அதை தாங்கி கொள்ள முடியாது.

அப்படியாக உங்களது ஐபோனின் வேகம் சற்று குறைவாக இருக்கின்றதா, கவலை வேண்டாம் இதை எளிதில் சரி செய்ய முடியும். தொடர்ச்சியான பயன்பாடு கருவியின் வேகத்தை குறைக்க அதிக வாய்ப்பு இருக்கின்றது.

பழைய புகைப்படம்

பழைய புகைப்படம்

பழைய புகைப்படங்களை கருவியில் இருந்து அழிப்பது கருவியின் வேகத்தை அதிகரிக்கலாம். முதலில் கருவியில் இருக்கும் பழைய புகைப்படங்களை உங்களது கணினி அல்லது ஐக்ளவுடில் சேமித்து அதன் பின் அவற்றை கருவியில் இருந்து அழித்து விடலாம்.

ஆப்ஸ்

ஆப்ஸ்

அதிக மெமரி கொண்ட ஆப்ஸ்களை அன்இன்ஸ்டால் செய்யலாம். அதிக மெமரியை எடுத்து கொள்ளும் செயலியை கண்டுபிடிக்க கருவியின் செட்டிங்ஸ் -- ஜெனரல் -- ஸ்டோரேஜ் & ஐக்ளவுட் யூசேஜ் -- மேனேஜ் ஸ்டோரேஜ் ஆப்ஷன் செல்ல வேண்டும்.

மெசேஜ் த்ரெட்

மெசேஜ் த்ரெட்

கருவியில் இருக்கும் குறுந்தகவலை அழிக்கவில்லை என்றாலும் கருவியின் வேகம் குறையலாம். இதனால் சீரான இடைவெளியில் குறுந்தகவல்களை அழிப்பது நல்லது.

சஃபாரி கேச்சி

சஃபாரி கேச்சி

ஐபோனின் வேகத்தை சீராக வைக்க சஃபாரியின் கேச்சிக்களை அவ்வப்போது அழிக்க வேண்டும், இதை செய்ய செட்டிங்ஸ் -- சஃபாரி -- க்ளியர் ஹிஸ்ட்ரி அன்டு வெப்சைட் டேட்டா என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

ஆட்டோ ஆப் அப்டேட்ஸ்

ஆட்டோ ஆப் அப்டேட்ஸ்

கருவியில் இருக்கும் செயலிகள் பின்னணியில் அப்டேட் செய்யப்படும் போதும் கருவியின் வேகம் குறையலாம், இதனால் கருவியில் இருக்கும் செயலிகளை தானாகவே அப்டேட் செய்வது நல்லது. இதை செய்ய செட்டிங்ஸ் -- ஐட்யூன்ஸ் & ஆப் ஸ்டோர் ஆப்ஷனில் ஆட்டோ அப்டேட் ஆப்ஷனை டிசேபிள் செய்தால் போதுமானது.

ஆட்டோமேடிக் டவுன்லோடு

ஆட்டோமேடிக் டவுன்லோடு

ஆட்டோமேடிக் அப்டேட் போன்றே ஆட்டோமேடிக் டவுன்லோடும் கருவியின் வேகத்தை குறைக்கும். இதனால் இந்த ஆப்ஷனை டிசேபிள் செய்வது கருவியின் வேகத்தை அதிகரிக்கும். இதை செய்ய செட்டிங்ஸ் -- ஐட்யூன்ஸ் & ஆப் ஸ்டோர் ஆப்ஷனில் ஆட்டோ டவுன்லோடு ஆப்ஷனை டிசேபிள் செய்தால் போதுமானது.

ஆட்டோமேடிக்

ஆட்டோமேடிக்

உங்களது ஐபோன் அருகாமையில் இருக்கும் வை-பை நெட்வர்க்களை தானாக கண்டறிந்து பரிந்துரை செய்யும் என்றால் அந்த ஆப்ஷனினையும் டிசேபிள் செய்வது நல்லது. இதை செயல்படுத்த செட்டிங்ஸ் -- வை-பை -- Ask to Join Networks சென்று ஆஃப் செய்ய வேண்டும்.

ரீஸ்டார்ட்

ரீஸ்டார்ட்

கணினியை போன்றே ஐபோனையும் அவ்வப்போது ரீஸ்டார்ட் செய்ய வேண்டும், இவ்வாறு செய்யும் போது கருவியின் வேகம் சீராக இருக்கும்.

அப்டேட்

அப்டேட்

ஐபோன் கருவியை சீரான இடைவெளியில் அப்டேட் செய்ய வேண்டும், முறையான அப்டேட் செய்யப்படவில்லை என்றாலும் கருவியின் வேகம் குறையலாம்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

புகைப்படம் : டைம்ஸ்ஆஃப்இந்தியா

Best Mobiles in India

English summary
Read here in Tamil some easy tricks to make your iPhone run faster.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X