ஆன்டிராய்டு கருவியை வேகமாக்கும் எளிய வழிமுறைகள்

By Meganathan
|

உலகமே ஆன்டிராய்டு கருவிகளை கொண்டு இயங்கி வருகின்றது என்று கூறும் அளவு அதன் பயன்பாடு அதிகரித்திருக்கின்றது. தொழில்நுட்ப பயன்பாடுகளில் ஆன்டிராய்டு மிக சிறந்த பங்காற்றும் நிலையில் அவைகளில் பிரச்சனைகள் ஏற்படுவதும் சாதாரணமாகி விட்டது எனலாம்.

அந்த வகையில் நீங்கள் பயன்படுத்தும் ஆன்டிராய்டு கருவி நீங்கள் எதிர்பார்த்த அளவு வேகமாக இயங்க மறுக்கின்றதா, ஆத்திரப்படமால் இந்த பிரச்சனைக்கு என்ன தீர்வு என்பதை பாருங்கள். வேகம் குறைவாக இருக்கும் ஆன்டிராய்டு கருவிகளின் வேகத்தை அதிகரிப்பது எப்படி என்று பாருங்கள்.. மேலும் ஆன்டிராய்டு குறித்து உங்களுக்கு எழும் சந்தேகங்களை எங்களது முகநூல் பக்கதில் தெரிவிக்கலாம்.

1. அப்டேட்
ஆன்டிராய்டு கருவிகளில் அப்டேட் செய்வது மிகவும் முக்கியமானதாகும். எந்தளவு புதிய அப்டேட் இருக்கின்றதோ அதற்கேற்ற வேகத்தை உங்களால் உணர முடியும். உங்கள் ஆன்டிராய்டு கருவியின் வேகம் குறைந்தால் முதலில் புதிய அப்டேட் இருக்கின்றதா என்பதை சரி பாருங்கள்.

2. ஹோம் ஸ்கிரீன்
லைவ் வால்பேப்பர் பயன்படுத்தினால், அதை அகற்றிவிட்டு வேறு புகைப்படங்களை பயன்படுத்துங்கள். மேலும் தேவையில்லாத ஐகான்களை ஹோம் ஸ்கிரீனில் இருந்து எடுத்துவிடுங்கள்.

3. பயனற்ற செயளிகள்
பயன்படுத்தாத செயளிகளை ஆன்டிராய்டு கருவியில் இருந்து அன்இன்ஸ்டால் செய்தால் தானாக ஆன்டிராய்டு கருவியின் வேகம் அதிகரிக்கும். பயன்படுத்தாத செயளிகளை அன்இன்ஸ்டால் செய்ய செட்டிங்ஸ் ஆப்ஷன் சென்று பயன்படுத்தாத செயளிகளை தேர்வு செய்து ‘Uninstall' ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்.

4. க்ளியர் கேச்சி CLEAR CACHE
ஆன்டிராய்டின் வேகத்தை அதிகரிக்க கேச்சி தகவல்களை அழிக்க வேண்டும். இதை மேற்கொண்ட பின் செயளிகள் ஓபன் ஆக அதிக நேரம் ஆகாது.

5. ஆட்டோ சின்க்
ஆன்டிராய்டு AUTO SYNC TURN OFF உங்கள் ஆன்டிராய்டு கருவியின் வேகத்தை அதிகரிக்கும். இந்த ஆப்ஷனே ஸ்விட்ச் ஆப் செய்ய செட்டிங்ஸ் ஆப்ஷன் சென்று Auto-Sync ஆப்ஷனை தேர்வு செய்து ஸ்விட்ச் ஆப் செய்யலாம்.

6. பேக்ட்ரி ரீசெட்
சீரான இடைவெளியில் உங்களது ஆன்டிராய்டு கருவியை பேக்ட்ரி ரீசெட் செய்தால் கருவியின் வேகம் குறையாது, மேலும் ஆன்டிராய்டு கருவியை சுத்தம் செய்யவும் இது உதவியாக இருக்கும்.

7. ஓவர்லாக்கிங்
செயளிகளை ஓவர்லாக்கிங் overclocking செய்தால் ஆன்டிராடின் வேகம் அதிகரிக்கும். இதை மேற்கொண்டால் ஆன்டிராய்டு கருவி சீக்கிரம் சூடாகாது, பிராசஸர் வேகமும் சரியான நிலையில் இருக்கும்.

Best Mobiles in India

English summary
How to make your Android faster. Here you will find some simple and easy tricks to make your android faster.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X