கூகுள் க்ரோம் வேகத்தை அதிகரிப்பது எப்படி

By Meganathan
|

இண்டர்நெட் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் இணைய சேவையாக இருப்பது கூகுள் க்ரோம். எளிமையான வடிவமைப்பின் மூலம் வேகமான இண்டர்நெட் சேவையை கூகுள் க்ரோம் வழங்கி வருகின்றது.

துவக்கத்தில் அதிக வேகம் கொண்டிருந்த கூகுள் க்ரோம் வேகம் திடீரென குறைந்து விட்டதா. கவலை வேண்டாம், கூகுள் க்ரோம் வேகத்தை அதிகரிப்பது எப்படி என்பதை தான் பார்க்க இருக்கின்றீர்கள்.

க்ரோம் எக்ஸ்டென்ஷன்

க்ரோம் எக்ஸ்டென்ஷன்

ப்ரவுஸர்களில் எக்ஸ்டென்ஷன்களை பயன்படுத்துவது இண்டர்நெட் வேகத்தை வெகுவாக குறைக்கும், முடிந்த வரை எக்ஸ்டென்ஷன்களை தவிர்ப்பது நல்லது.

ப்ளஃகு இன்

ப்ளஃகு இன்

க்ரோம் இன்ஸ்டால் செய்யும் போது சில ப்ளஃகு இன்கள் வழங்கப்படும், பெரும்பாலும் இவை பயனுள்ளதாக இருக்காது, முடிந்த வரை இவைகளை டிசேபிள் செய்யலாம்.

ப்ரவுசிங் டேட்டா

ப்ரவுசிங் டேட்டா

எப்பவும் ப்ரவுசிங் டேட்டாவினை அழித்தால் ப்ரவுசர் வேகம் சீராக இருக்கும்.

க்ரோம்

க்ரோம்

பொதுவாக கூகுள் க்ரோம் 128 எம்பி ரேம் பயன்படுத்தும். இதனாலும் ப்ரவுசர் வேகம் குறையலாம். இதை சரி செய்ய ப்ரவுசரில் chrome://flags/#max-tiles-for-interest-area டைப் செய்து Maximum tiles for interest area Mac, Windows, Linux, Chrome OS, Android ஆப்ஷனில் 512 என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து ரீ லான்ச் என்ற பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

அப்டேட்

அப்டேட்

ஆன்டிராய்டு கருவிகளிலும் கூகுள் க்ரோம் பயன்படுத்தினால் அவைகளை அப்டேட் செய்ய வேண்டும். சீரான இடைவெளியில் ப்ரவுசர்களை அப்டேட் செய்தால் அதன் வேகமும் சீராக இருக்கும்.

எக்ஸ்டென்ஷன்

எக்ஸ்டென்ஷன்

ப்ரவுஸர்களில் எக்ஸ்டென்ஷன்கள் வேகத்தை குறைக்கவும் செய்யும் அதிகரிக்கவும் செய்யும், இங்கு அதிகரிக்க கூடிய எக்ஸ்டென்ஷன்களை தான் குறிப்பிட்டிருக்கின்றோம், இவைகளை பயன்படுத்தியும் க்ரோம் ப்ரவுசரின் வேகத்தை அதிகரிக்க முடியும். ஆட்ப்ளாக் ப்ளஸ் (Adblock Plus) ப்ரவுசரின் வேகத்தை அதிகரிக்கும் எக்ஸ்டென்ஷன்.

டேப்

டேப்

க்ரோம் ப்ரவுசரில் அதிக டேப்களை பயன்படுத்தினால் முடிந்த வரை அவைகளை க்ளோஸ் செய்வதன் மூலம் ப்ரவுசரின் வேகத்தை அதிகரிக்கலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
check out here How to make Google chrome faster for better experience. This is interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X