கணினியில் இலவசமாக ஆண்ட்ராய்டு இன்ஸ்டால் செய்வது எப்படி.?

By Meganathan
|

உலகம் முழுவதிலும் பிரபலமாக இருக்கும் ஆன்டிராய்டு இயங்குதளத்தை பயன்படுத்த யாருக்கு தான் விருப்பம் இருக்காது. எந்நேரமும் ஸ்மார்ட்போனில் ஆன்டிராய்டு பயன்படுத்திய பின்பு கணினியில் வேறு ஒரு இயங்குதளத்தை பயன்படுத்தி வருகின்றீர்களா, அப்படியானால் உங்களது கணினியிலும் ஆன்டிராய்டு இயங்குதளத்தை இன்ஸ்டால் செய்யுங்கள்...

[மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ் ஆப் பயன்படுத்துவது எப்படி]

கணினியில் இலவசமாக ஆண்ட்ராய்டு இன்ஸ்டால் செய்வது எப்படி.?

உங்களது கணினியில் இலவசமாக ஆன்டிராய்டு இயங்குதளத்தை இன்ஸ்டால் செய்வது எப்படி என்று பாருங்கள்...

கணினியில் ஆன்டிராய்டு இயங்குதளத்தை இன்ஸ்டால் செய்ய முதலில் விர்சுவல் பாக்ஸ் என்ற மென்பொருளை பதிவிறக்கம் செய்ய வேண்டும். மென்பொருளை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும், அடுத்து ஆன்டிராய்டு எக்ஸ்86 ஃபைலை பதிவிறக்கம் செய்ய வேண்டும், இதை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

1. முதலில் பதிவிறக்கம் செய்த விர்சுவல் பாக்ஸ் VirtualBox மென்பொருளை கணினியில் இன்ஸ்டால் செய்ய வேண்டும்

2. அடுத்து விர்சுவல் பாக்ஸ் ஓபன் செய்து புதிது என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும், டயலாக் பாக்ஸில்
i) Type : Linux
ii) Version : Other Linux
iii) select Next என டைப் செய்ய வேண்டும்

3. உங்களுக்கு தேவையான மெமரி அளவை பதிவு செய்யுங்கள்.
குறிப்பு ஆன்டிராய்டு கிட்காட் இன்ஸ்டால் செய்ய குறைந்த பட்சம் 1ஜிபி வரை மெமரி தேவைப்படும். மெமரி அளவை டைப் செய்தவுடன் அடுத்த கட்டத்திற்கு முன்னேறலாம்

4. அடுத்த டயலாக் பாக்ஸில் விர்சுவல் ஹார்டு டிரைவ் ஒன்றை உருவாக்க வேண்டும். VDI அல்லது VHD தேர்வு செய்து விர்சுவல் ஹார்டி டிரைவை உருவாக்கலாம்.

5. இப்பொழுது Virtual device விர்சுவல் டிவைசை தேர்வு செய்து settings செட்டிங்ஸ் செல்ல வேண்டும், இந்த டயலாக் பாக்ஸில் தேர்வு செய்ய வேண்டும்
Storage > Storage Tree > Empty.
இங்கு நீங்கள் பதிவிறக்கம் செய்த ஆன்டிராய்டு 4.4 கிட்காட் ஐஎஸ்ஓ ஃபைலை தேர்வு செய்யுங்கள்.

6. விர்சுவல் டிவைசை ஸ்டார்ட் செய்து ஆன்டிராய்டு எக்ஸ்86 தேர்வு செய்து ஹார்டு டிஸ்க்கில் இன்ஸ்டால் செய்யுங்கள்.

7. அடுத்து Create/Modify க்ரியேட் / மாடிஃபை பார்டிஷனை தேர்வு செய்யுங்கள்.

8. இங்கு புதிய பூட்டபிள் பார்டிஷன் ஒன்றை உருவாக்கி, ரைட் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள், ரைட் செய்து முடித்த பின் வெளியேறிவிடலாம்.

9. sda1 இல் ஆன்டிராய்டை இன்ஸ்டால் செய்து, ext3 டைப் செய்யுங்கள். அடுத்து இன்ஸ்டால் செய்ய அனுமதியுங்கள்.

10. இன்ஸ்டால் செய்தவுடன் விர்சுவல் பாக்ஸின் லைவ் ஐஎஸ்ஓவை எடுத்துவிட்டு அதன் பின் ரீபூட் செய்யுங்கள், இப்பொழுது ஆன்டிராய்டு 4.4 கிட்காட்டிற்கு பூட் செய்ய முடியும்.

Best Mobiles in India

English summary
How to install Android in Computer. Here you will find some easy and simple steps to install Android os in Computer.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X