வாட்ஸ்ஆப்பில் 'மாயமாவது' எப்படி??

By Meganathan

செயலிகள் இல்லாத காலக்கட்டத்தில் மக்கள் நேரடியாக கருத்துக்களை பரிமாறி கொண்டனர். ஆனால் இன்று நிலைமை முற்றிலும் வேறாகவே இருக்கின்றது. எல்லோரும் கையில் ஒரு ஸ்மார்ட்போனினை வைத்து கொண்டு வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் என செயலிகளின் உதவியோடு தகவல் பரிமாற்றத்தில் ஈடுப்படுகின்றனர்.

அதிகப்படியான இண்டர்நெட் பயன்பாடு மக்களை ஸ்மார்ட்போன் அடிமைகளாக மாற்றுவதோடு ஓய்வின்றி ஸ்மார்ட்போன் பயன்படுத்தவும் வழி செய்கின்றது. சில நேரங்களில் ஓய்வின்றி வரும் வாட்ஸ்ஆப் நோட்டிபிகேஷன்களில் இருந்து தப்பிப்பது எப்படி என்பதை ஸ்லைடர்களில் பாருங்கள்.

லாஸ்ட் சீன்

லாஸ்ட் சீன்

வாட்ஸ்ஆப் தொந்தரவில் இருந்து மீள 'லாஸ்ட் சீன்' அம்சத்தை எனேபிள் செய்வது நல்ல பலன் தரும். இதை செய்தவுடன் குறுந்தகவல்களுக்கு உடனடியாக பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்து தப்பிக்கலாம். இந்த அம்சத்தினை எனேபிள் செய்ய வாட்ஸ்ஆப் -- செட்டிங்ஸ் -- அக்கவுன்டு -- ப்ரவைஸி ஆப்ஷனை க்ளிக் செய்து லாஸ்ட் சீன் பகுதியில் நோபடி ( Nobody ) என்பதை க்ளிக் செய்தால் போதுமானது.

ஸ்டேட்டஸ்

ஸ்டேட்டஸ்

இதே போன்று உங்களது ஸ்டேட்டஸையும் மறைக்க வாட்ஸ்ஆப் செட்டிங்ஸ் -- ப்ரைவஸி -- ஸ்டேட்டஸ் -- நோபடி என்பதை க்ளிக் செய்தால் போதும், யாரும் உங்களது ஸ்டேட்டஸை பார்க்க முடியாது.

ப்ரோஃபைல் போட்டோ

ப்ரோஃபைல் போட்டோ

பெண்களுக்கு இந்த அம்சம் சற்றே பாதுகாப்பானதாக இருக்க கூடும், வாட்ஸ்ஆப் ப்ரோஃபைல் போட்டோவினை மறைக்க செட்டிங்ஸ் -- ப்ரைவஸி -- ப்ரோஃபைல் போட்டோ -- நோபடி என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.

நீல நிறம்

நீல நிறம்

வாட்ஸ்ஆப் குறுந்தகவல்களை படித்ததை குறிக்கும் நீல நிற டிக் மார்க்களை மறைத்தல் நீங்கள் ஆன்லைனில் இருந்தாலும் மற்றவர்களுக்கு ஆஃப்லைனில் இருப்பதை போன்று வெளிப்படுத்தி கொள்ள முடியும். இதை செய்ய வாட்ஸ்ஆப் செட்டிங்ஸ் -- அக்கவுன்டு -- ப்ரைவஸி -- ரீடு ரெசிப்ட்ஸ் ( Read Receipts ) ஆப்ஷனை அன்டிக் செய்தால் போதும்.

பாஸ் வாட்ஸ்ஆப்

பாஸ் வாட்ஸ்ஆப்

இந்த அம்சம் தற்சமயம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. வாட்ஸ்ஆப்பில் உங்களுக்கு வரும் குறுந்தகவல்களை முடக்க ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ் -- ஆப்ஸ் -- வாட்ஸ்ஆப் -- ஃபோர்ஸ் ஸ்டாப் எனும் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

ஃபோர்ஸ் ஸ்டாப்

ஃபோர்ஸ் ஸ்டாப்

போனின் செட்டிங்ஸ் பகுதியில் வாட்ஸ்ஆப் ஃபோர்ஸ் ஸ்டாப் கொடுத்தால் உங்களிடம் இண்டர்நெட் இருந்தாலும் வாட்ஸ்ஆப் செயலியில் எந்த குறுந்தகவலும் வராது, மீண்டும் வாட்ஸ்ஆப் பயன்படுத்த விரும்பினால் போனில் இருக்கும் வாட்ஸ்ஆப் ஐகானை க்ளிக் செய்து செயலியை மீண்டும் பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

பேஸ்புக்கை எதிர்க்கும் 81% இந்தியர்கள்.!!பேஸ்புக்கை எதிர்க்கும் 81% இந்தியர்கள்.!!

நேதாஜி பற்றிய மர்மம் : காந்தி மீது பழிபோடும் வலைதளம்..!நேதாஜி பற்றிய மர்மம் : காந்தி மீது பழிபோடும் வலைதளம்..!

ஸ்மார்ட்போனில் மெமரி இல்லையெனில் இதை செய்யுங்கள்.!!ஸ்மார்ட்போனில் மெமரி இல்லையெனில் இதை செய்யுங்கள்.!!

நோக்கியா மாடலில் 800 ஆண்டுகளுக்கு முந்தைய மொபைல், ஏலியன் கருவியா ?!
நோக்கியா மாடலில் 800 ஆண்டுகளுக்கு முந்தைய மொபைல், ஏலியன் கருவியா ?!

தகவல்களை பாதுகாப்பாக அழிப்பது எப்படி.??தகவல்களை பாதுகாப்பாக அழிப்பது எப்படி.??

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Read here in Tamil How to go invisible on WhatsApp.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X