பழைய போனினை அதிக விலைக்கு விற்பனை செய்வது எப்படி.??

By Meganathan
|

உங்களது பழைய கருவிகளை விற்பனை செய்ய வேண்டுமா, அதுவும் ஸ்மார்ட்போன் மற்றும் டேப்ளெட்கருவிகள் என்றால் உங்களுக்கு சரியான இடம் ஆன்லைன் தான். ஸ்மார்ட்போன் மற்றும் இதர கேஜெட்களை ஆன்லைனில் விற்பனை செய்வதன் மூலம் அதிக பணம் பெற முடியும்.

இதற்கென ஈபே, குவிக்கர், ஓஎல்எக்ஸ் தளங்களோடு ஃபேஸ்புக் சேவையையும் பயன்படுத்தலாம். இதோடு ப்ளிப்கார்ட், அமேசான் போன்ற இணைய வர்த்தகர்களிடமும் விற்பனை செய்து கேஷ் பேக் உள்ளிட்ட சலுகைகளை பெற முடியும்.

அழகு

அழகு

முடிந்த வரை கருவியை ஸ்க்ராட்ச் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். ஸ்க்ராட்ச் இல்லாத கருவிகள் சற்றே அதிக விலைக்கு விற்பனை செய்யலாம்.

அக்சஸரி

அக்சஸரி

ஸ்மார்ட்போன் வாங்கும் போது வழங்கப்பட்ட பெட்டி மற்றும் அக்சஸரிகளை பத்திரமாக வைத்திருத்தல் நல்லது. ஒரிஜினல் அக்சஸரிகளுக்கு மக்கள் அதிக பணம் கொடுக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றது.

புகைப்படம்

புகைப்படம்

பழைய கருவியாக இருந்தாலும் அழகான புகைப்படங்களின் மூலம் அதிகம் பேர் விரும்ப வாய்ப்பிருக்கின்றது, இதனால் யார் அதிக பணம் தருகின்றார்களோ அவர்களுக்கு கருவியை விற்பனை செய்யலாம்.

சேவை

சேவை

கருவிகளை விற்பனை செய்ய ஒரே ஒரு சேவையை பயன்படுத்துவதை விட பல்வேறு சேவைகளை பயன்படுத்தலாம். இதனால் ஏதேனும் ஒரு சேவையில் அதிக பணம் பெறும் வாய்ப்புகள் இருக்கின்றது.

நேரம்

நேரம்

பழைய கருவிகளை நீண்ட நாட்கள் வைத்திருப்பது அதன் மதிப்பை குறைக்கலாம். நீங்கள் பயன்படுத்தும் கருவிக்கு அடுத்த மாடல் வரும் முன் அவைகளை விற்பனை செய்தால் கருவிக்கு அதிக பணம் பெற முடியும்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

Read more about:
English summary
How to get the best price for your old smartphone Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X