ஆப்பிள் நிறுவனத்தில் வேலை கிடைக்க என்ன செய்ய வேண்டும்.?

Written By:

நம்பிக்கை இருந்தால் எதுவும் சாத்தியமே, இதை நம்பினவர்கள் உலகில் தோற்றதாக சரித்திரமே கிடையாது.

உலகின் தலைசிறந்த தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிளில் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை, மற்றும் ஆசை கொண்டவர்களில் நீங்களும் ஒருவரா? அப்படியானால் இந்த தொகுப்பு உங்களுக்கானது தான்.

ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்ற நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக் எதிர்பார்க்கும் சில அம்சங்களை பார்ப்போமா?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
மாற்றம்

மாற்றம்

ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்ற வருவோர் உலகையே மாற்றும் எண்ணம் கொண்டவராக இருக்க வேண்டும்.

முடியாது

முடியாது

எதுவாக இருந்தாலும் முடியாது என சொல்பவர்களுக்கு ஆப்பிள் நிறுவனத்தில் பணி அளிக்கப்பட மாட்டாது. எந்த ஒரு பணியையும் விரும்பி ஏற்று அதில் வெற்றி பெற நினைப்போருக்கே ஆப்பிள் நிறுவனம் பணி வழங்கும்.

சமரசம்

சமரசம்

பணியில் ஈடுப்பட்டிருக்கும் போது எந்த ஒரு விஷயத்திற்கும் சமரசம் அடையவே கூடாது. ஆப்பிளில் வேலை செய்ய வருவோர் சமரசம் கொள்ளாமல் பணியை சிறப்பாக செய்து முடிக்க நினைக்க வேண்டும்.

தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை

ஆப்பிள் நிருவனத்தில் பணியாற்ற ஒருவருக்கு தன்னம்பிக்கை குறைந்தபட்சம் 200 சதவீதமாவது இருக்க வேண்டும். முடியாது என்பனவற்றையும் தன்னம்பிக்கையுடன் செய்து முடிக்க தயாராக இருக்க வேண்டும்.

நேர்காணல்

நேர்காணல்

ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்ற வருவோர் 10 முதல் 12 அதிகாரிகளிடம் நேர்காணல் செய்யப்படுவர். நேர்காணலின் போது வெவ்வேறு கோணங்களில் மதிப்பீடு செய்யப்படுவர்.

ஒற்று கொள்வது

ஒற்று கொள்வது

ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றுவோர் யார் கருத்தையும் ஏற்று கொள்ள கூடாது. பெரும்பாலான ஆப்பிள் ஊழியர்கள் யார் கருத்துக்கும் ஒற்று போக மாட்டார்கள்.

வாக்குவாதம்

வாக்குவாதம்

எந்தவொரு விஷயத்தையும் எடுத்தவுடன் ஒற்று கொள்ளாமல், தனக்கான வாதத்தை முன்வைக்க வேண்டும்.

டிம் குக்

டிம் குக்

இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து தகுதிகளும் சிபிஎஸ் 60 நொடிகள் எனும் நேர்காணலில் டிம் குக் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள்

ஆப்பிள்

முந்தைய ஸ்லைடர்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி கொண்டவர்களுக்கு ஆப்பிள் நிறுவனத்தில் பணி கிடைக்க தமிழ் கிஸ்பாட் தரப்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Read Here in Tamil How to Get a Job at Apple.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot