விண்டோஸ் 10 ரீஸ்டார்ட் பிரச்சனை : சரி செய்வது எப்படி??

Written By: Aruna Saravanan

விண்டோஸ் 10 இயங்குதளம் பயன்படுத்துவோர் அதிகம் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் இந்த நீலநிற திரை வந்து அதன் பின் ரீஸ்டார்ட் ஆவது. முக்கியமாக ஏதேனும் செய்து கொண்டிருக்கும் போது கணினி திடீரென இப்படி நிகழ்வது யாரையும் கோபத்தில் ஆழ்த்தி விடும்.

அதுவும் அதிக ஆசையுடன் இன்ஸ்டால் செய்த புதிய இயங்குதளம் இத்தகைய பிரச்சனைகளை கொடுப்பது தலைவலியை கொடுக்கும். இங்கு விண்டோஸ் 10 இயங்குதளத்தில் பலரும் எதிர்கொள்ளும் நீலநிற திரை வந்து கணினி ரீஸ்டார்ட் ஆகும் பிரச்சனையை எப்படி சரி செய்ய வேண்டும் என்பதை பாருங்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
பேக்கப் தேவை

பேக்கப் தேவை

புகைப்படங்கள், வீடியோக்கள், முக்கியமான டாக்குமெண்டுகள் என பலவற்றை நம் கணினியில் சேமித்து வைத்திருப்போம். இதற்கான பேக்கப் உங்களிடம் இல்லையென்றால் ஒரே நாளில் எல்லாவற்றையும் நீங்கள் இழக்க நேரிடலாம். உங்கள் கணினி அடிக்கடி பிரச்சனை கொடுத்தால் நீங்கள் பேக்கப் எடுத்து கொள்ள வேண்டிய நேரம் என்று புரிந்து கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் இழப்பதை விட சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாண்டால் போதுமே.

பிரச்சனை

பிரச்சனை

கணினியில் நீலநிற திரையை காணும் போது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள், எந்த ப்ரோகிராம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது என்பதை யோசனை செய்யுங்கள் குறிப்பிட்ட ஏதேனும் ஒன்றை செய்யும் போது தான் பிரச்சனை ஏற்பட கூடும். ஆகையால் எதனால் இந்த பிரச்சனை நிக்ழ்கின்றது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

குறியீட்டை சரிபார்த்தல்

குறியீட்டை சரிபார்த்தல்

நீலநிற திரை வரும் போது BSODவுடன் மெஸேஜ்க்கு கீழ் எரர் கோடு தெரியும். அதை எழுதி கூகுளில் தேடவும். இந்த code எதை சுட்டி காட்டுகின்றது என்பது உங்களுக்கு அப்பொழுது தெரியும். உங்களுக்கு என்ன தேவை என்பதை அறியும் போது பிரச்சனையை சுளபமாக தீர்த்து விட முடியும்.

நீங்கள் எதை மாற்றினீர்கள்

நீங்கள் எதை மாற்றினீர்கள்

உங்களது கணினியில் எதையாவது மாற்றி இருக்கின்றீர்களா என்பதை சரி பார்க்க வேண்டும். பல சமயங்களில் நீங்கள் நிறுவிய மென்பொருளால் தான் பிரச்சனை அதிகமாக நிகழ்கின்றது. நீங்கள் ப்ரோகிராம் பயன்படுத்தும் போது BSOD வந்தால் முதலில் நிறுவிய மென்பொருளை நீக்கி திரும்பவும் நிறுவவும். கூகுளை பயன்படுத்தி வேறு வழி எதுவும் இருக்கின்றதா என்பதை பார்க்கவும். அதாவது இந்த மென்பொருளினால் எவ்வகை பிரச்சனை வரும் என்பதையும் அதை தீர்க்கும் வழியையும் அறிந்து கொள்வது நல்லது.

டிரைவர்ஸ் அப்டேட்

டிரைவர்ஸ் அப்டேட்

உங்கள் டிரைவரை நீங்கள் சமீபத்தில் பொருத்தி இருந்தால் பின் பிரச்சனை இதனால் தான். இதற்கு இதன் தயாரிப்பாளரின் கையேட்டின் உதவியை நாட வேண்டும். டிரைவர் அல்லது ப்ரோகிராமை நீக்க டாஸ்க் பாரில் உள்ள தேடுதல் இருக்கும் இடத்தில் க்ளிக் செய்து வியூ அன்இன்ஸ்டால்டு அப்டேட்ஸ் என்பதை பார்க்கவும். இப்பொழுது நீங்கள் கண்ட்ரோல் பேனலுக்கு எடுத்து செல்ல படுவீர்கள். அங்கே டிரைவர்ஸின் தேதியை சரிபார்த்து பிரச்சனை ஏற்படுத்தும் டிரைவரை நீக்க முடியும்.

விண்டோஸ் அப்டேட்

விண்டோஸ் அப்டேட்

விண்டோஸ் அப்டேட் செய்யப்பட்டுள்ளதா என்பதை சரி பார்ப்பது அடுத்த முக்கியமான விஷயம். இதற்கு டாஸ்க் பார் இடத்தின் தேடுதல் தளத்தை க்ளிக் செய்து விண்டோஸ் அப்டேட் என்று டைப் செய்யவும். பின்பு matching option தேர்வு செய்து அப்டேட் பேனல் வந்தவுடன் check for updates என்பதன் மீது க்ளிக் செய்ய வேண்டும்.

வன்பொருளை சரிபார்க்கவும்

வன்பொருளை சரிபார்க்கவும்

நீங்கள் டெஸ்க்டாப் மெஷினில் இருந்தால் முதலில் உங்கள் மெஷினை திறக்கவும். திறந்து வன்பொருள் சரியாக இருக்கின்றதா என்று பார்க்கவும். இதில் கார்ட் நன்றாக உள்ளே நுழைந்திருக்க வில்லையென்றால் BSOD நிகழ இதுவே காரணமாகும். இது மட்டுமில்லாமல் உங்கள் graphics கார்ட் மற்றும் RAMஐயும் நீங்கள் சரி பார்த்தல் அவசியமாகின்றது. ஆகையால் புதிய வன்பொருள் சரியாக பொருத்தபடாமல் போனாலும் பிரச்சனைதான் அதை கண்டுபிடித்து சரி செய்யவும்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Read here in Tamil How to fix Windows 10 blue screen of death.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்