ஸ்மார்ட்போனில் ஸ்பீக்கர் தொல்லை : சரி செய்வது எப்படி??

Written By: Aruna Saravanan

ஸ்மார்ட்போன் வளர்ந்து வரும் இக்காலத்தில் அவற்றால் வரும் பிரச்சனையும் இருக்க தான் செய்கின்றது. அதிக சூடு, நெட்வொர்க் எரர், சரியாக சார்ஜ் நிற்காதது, கேமரா பிரச்சனை, ஆப்ஸ் பிரச்சனை என பல பிரச்சனைகள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கு உள்ளது.

அதன்படி முக்கியமான பிரச்சனைளில் ஒன்று போனின் ஸ்பீக்கர்தான். ஒன்று ஸ்பீக்கர் சரியாக இல்லாவிட்டாலும் அல்லது வால்யூம் சரியாக செட் செய்யாமல் இருப்பதாலும் நிகழும். இங்கு இவ்வகை பிரச்சனைகளை எப்படி கையாள்வது என்பது பற்றி காண்போம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
வால்யூம் செட்டிங்

வால்யூம் செட்டிங்

வால்யூம் செட்டிங்கில் பிரச்சனை இருக்கலாம். முதலில் மொபைல் போன் சைலண்டில் உள்ளதா அல்லது வைப்ரேட்டர் மோடில் உள்ளதா என்பதை சரி பார்க்கவும். அப்படி இருந்தால் மோடை மாற்றவும்.

ஃபேஸ் கால்

ஃபேஸ் கால்

உங்கள் நண்பர்களூக்கோ அல்லது கஸ்டமர் கேர்க்கோ அதாவது இலவச காலாக இருக்கும் பட்சத்தில் ஏதாவது ஒன்றுக்கு கால் செய்து பார்க்கவும். அதில் வால்யூமை செக் செய்யவும். இன்-கால் வால்யூமை சரி பார்த்து தேவை என்றால் அட்ஜஸ்ட் செய்யவும்.

வன்பொருள் பிரச்சனை

வன்பொருள் பிரச்சனை

இவை அனைத்தையும் செய்தும் போனில் வால்யூம் பிரச்சனை என்றால் உங்கள் வன்பொருளை சரி பார்க்கவும். அதாவது ஸ்பீக்கர் அல்லது மைக்கை சரி பார்க்கவும். இதில் ஏதாவது ஒன்று பிரச்சனை இருந்தாலும் வால்யூம் பிரச்சனை தான். உடனே சரியான ரிப்பேர் கடை அல்லது சர்வீஸ் சென்டருக்கு எடுத்து சென்று சரி பார்க்கவும்.

மென்பொறுள் அப்டேட்

மென்பொறுள் அப்டேட்

சில நேரத்தில் மென்பொருள் பாதிப்பு இருந்தாலும் பிரச்சனை ஏற்படும். ஆகையால் அதில் சமீபத்தில் இருக்கும் மென்பொருளை பொருத்தி அப்டேட் செய்யவும்.

ஃபன்க்ஷனாலிட்டி ( Functionality ) சோதனை

ஃபன்க்ஷனாலிட்டி ( Functionality ) சோதனை

சில சமயம் மறைந்திருக்கும் குறியீடுகள் இருக்கலாம். அவை டையல் பேடில் டையலிங் குறியீட்டின் மூலம் ஃபன்க்ஷானிலிட்டி சோதனை செய்ய பயன்படும். *#0*# என்பதை டையல் செய்து வன்பொருள் பிரச்சனை உள்ளதா என்று பார்க்கவும்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Read here in Tamil How To Fix Smartphone Speaker Problems.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot