மொபைல் போன் ஹேங் ஆகாமல் இருக்க என்ன செய்யலாம்
இன்று மொபைல் போன் பயன்படுத்தாமல் யாரும் இல்லை எனலாம், சிறியவர்கள் துவங்கி பெரியவர்கள் வரை எல்லோர் கையிலும் எப்பவும் பயன்பாட்டில் இருக்கும் மிகவும் அத்தியாவசிய கருவியாக மொபைல் போன்கள் விளங்குகின்றன.
துவக்கத்தில் நாம் வைத்திருந்த மொபைல் போன்களை பயன்படுத்தும் போது இருந்த சுதந்திரம் இப்போ இல்லை என்றே கூறலாம். அந்தளவு இன்றைய ஸ்மார்ட்போன்கள் நாம் பயன்படுத்தும் முறைகளை மாற்றியமைத்து விட்டது. பயன்பாட்டிற்கு ஏற்ப அவை ஏற்படுத்தும் பரிச்சனைகளும் இருக்க தான் செய்கின்றது.
அந்த வகையில் இன்று நாம் பயன்படுத்தும் மொபைல் போன்களில் அதிகமாக ஏற்படும் பிரச்சனையை சரி செய்வது எப்படி என்பதை தான் இங்கு பார்க்க இருக்கின்றோம்.

மொபைல் ஹேங்
இன்று பயன்பாட்டில் இருக்கும் ஸ்மார்ட்போன்களில் அதிகமாக ஏற்படும் பிரச்சனையே அவை அடிக்கடி ஹேங் ஆவது தான். அவ்வாறு மொபைல் போன் ஹேங் ஆவதை எப்படி சரி செய்ய வேண்டும் என்பதை பாருங்கள்.

காரணம்
பொதுவாக உங்களது ஸ்மார்ட்போனில் குறைவான ரேம் இருந்து அளவுக்கு அதிகமான செயலிகளை பயன்படுத்தினால், ஸ்மார்ட்போன் ஹேங் ஆகும். இதோடு தேவையற்ற செயலிகளை பதிவிறக்கம் செய்வதும் ஹேங்கிங் பிரச்சனைக்கு முக்கிய காரணமாக அமைகின்றது.

தீர்வு
அதிகமாக ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் அதிகளவில் செயலிகளை பதிவிறக்கம் செய்வர், அவ்வாரு பதிவிறக்கம் செய்யப்படும் செயலிகள் பின்னணியில் இயங்கும் போது மொபைல் ஹேங் ஆகும். இதை சரி செய்ய முடிந்த வரை தரமான செயலிகளை பதிவிறக்கம் செய்யலாம்.

பேட்டரி
மொபைல் ஹேங் ஆகும் போது அதனினை ஸ்விட்ச் ஆஃப் செய்து பேட்டரியை கழற்றி சிறிது நேரம் கழித்து மீண்டும் ஆன் செய்யலாம். சில சமயங்களில் ஆஃப் செய்ய முடியாது அது போன்ற நேரத்தில் போனின் பேட்டரியை கழற்றி விடலாம்.

செயலி
ஒரு வேலை ஏதேனும் செயலியை பயன்படுத்தும் போது கருவி ஹேங் ஆனால், பெரும்பாலும் அந்த செயலி தான் காரணமாக இருக்கும். இது போன்ற சமயங்களில் அந்த செயலியை அன் இன்ஸ்டால் செய்யலாம்.

மெமரி
சில சமயங்களில் மொபைலில் மெமரி இல்லாததும் காரணமாக இருக்க முடியும். இதனால் முடிந்த வரை உங்களது தேவையில்லாத ஃபைல்களை அழித்து போனின் மெமரியை அதிகரிக்கலாம்.

ரீஸ்டோர்
மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் முறைகளை பின்பற்றியும் பிரச்சனை இருந்தால் போனினை பேக்ட்ரி ரீசெட் செய்து பார்க்கலாம். இவ்வாறு செய்யும் முன் போனில் இருக்கும் தகவல்களை பேக்கப் செய்து கொள்வது நல்லது.

அப்டேட்
அடிக்கடி இது போன்ற பிரச்சனை இருந்தால் போனின் மென்பொருளில் ஏதும் கோளாறு இருக்கலாம். இதனால் மொபைல் போனின் மென்பொருளினை அப்டேட் செய்து பார்க்கலாம்.

ஸ்மார்ட்போன்
ஸ்மார்ட்போன் ஹேங் ஆகாமல் இருக்க பயனற்ற செயலிகளை இன்ஸ்டால் செய்யாமல் இருக்க வேண்டும். 2 - 3 நாட்களுக்கு ஒரு முறை போனினை ரீஸ்டார்ட் செய்யலாம். அவ்வப்போது பின்னணியில் இயங்கும் செயலிகளை க்ளோஸ் செய்யலாம்.


Click it and Unblock the Notifications