மொபைலில் நெட்வர்க் பிரச்சனையை சரி செய்ய எளிய டிப்ஸ்..!!

Written By: Aruna Saravanan

இன்றைய காலக்கட்டத்தில் என்ன போன் வாங்க போகின்றீர்கள் என்று கேட்பதை விட ஸ்மார்ட்போன் வாங்கியாச்சா என்று தான் பலரும் கேட்கின்றனர். அத்தனை ஆசை ஸ்மார்ட் போனின் மீது. அதன் விலை மட்டும் என்ன கம்மியா. இருந்தாலும் மோகம் யாரை விட்டது. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்து இருப்பதை பெருமையாக நினைக்க ஆரம்பித்து விட்டனர் நம் மக்கள். கடன் வாங்கியாவது ஸ்மார்ட் போன் வாங்கி விடுகின்றனர்.

மற்ற போன்களை ஒப்பிடும்போது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மிகவும் பிடித்த ஒன்றாக உள்ளன. எங்கு பார்த்தாலும் எல்லோர் கைகளிலும் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்களை பார்க்க முடிகின்றது. இந்த போனின் ஸ்டைல் அனைவரையும் கவர்ந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

பலரின் கடின உழைப்பால் தயாரிக்கப்பட்ட ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தின் வர பிரசாதம் என்றால் மிகை ஆகாது. இருந்தும் யானைக்கும் அடி சறுக்கும் என்பதை போல் இந்த சிறப்பு பெற்ற போனுக்கும் சில குறைபாடுகள் உள்ளன. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் சார்ஜ் செய்வது மற்றும் நெட்வொர்க் பிரச்சனைகள் என சில பிரச்சனைகளை கொடுக்கின்றது.

போனை எடுத்தாலே நோ நெட்வொர்க் அதாவது நெட்வொர்க் இல்லை என்றும், நெட்வொர்க் பிஸி, நெட்வொர்க் பதிவு செய்யபடவில்லை, சிம் கார்டை நுழைக்கவும் என்ற வார்த்தைகளை காணும் போது யாருக்குதான் எரிச்சல் வராது. அவசர நேரத்தில் ஒருவரை தொடர்பு கொள்ள வேண்டும் என்று நினைத்து போனை எடுக்கும் போது இது போன்ற வாசகங்கள் வந்தால் போனை உடைக்க வேண்டும் என்றுதான் தோன்றும். பொருமையாக இருங்கள். இது தேவையில்லாத கவலை. நெட்வொர்க் பிரச்சனை வராமல் பார்த்து கொள்ள டிப்ஸ் உங்களுக்காக தருகின்றோம். படித்து பயன் பெறுங்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
சிம் கார்டை கழற்றி அதன் பின் மாற்றவும்

முறை 1 :

பேட்டரி மற்றும் சிம் கார்டை வெளியே எடுத்து பின் மீண்டும் இணைத்தால் நெட்வொர்க்கை சரி செய்ய முடியும். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.

சிம் கார்டை கழற்றி அதன் பின் மாற்றவும்

ஸ்டெப் 1:

உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை பவர் ஆஃப் செய்து பேட்டரி மற்றும் சிம் கார்டு இரண்டையும் வெளியே எடுங்கள்.

சிம் கார்டை கழற்றி அதன் பின் மாற்றவும்

ஸ்டெப் 2:

சிம் மற்றும் பேட்டரியை மீண்டும் நுழைக்க 5 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். பின்பு மீண்டும் இணைத்து விடுங்கள்.

சிம் கார்டை கழற்றி அதன் பின் மாற்றவும்

ஸ்டெப் 3:

போனை ஸ்விட்ச் ஆன செய்யுங்கள். இப்போது நெட்வொர்க் பிரச்சனை தீர்ந்தது. இப்படி செய்வதால் நெட்வொர்க் கிடைக்கும்.

முறை 2

முறை 2:

மேலே கூறிய முறையை செய்தாலே உங்கள் பிரச்சனை தீர்ந்து விடும். அதை செய்யதும் தீர வில்லை என்றால் இதோ இந்த முறையை தேர்ந்தெடுங்கள்.

நெட்வொர்க் செட்டிங்

ஸ்டெப் 1:

போனின் செட்டிங் இருக்கும் இடத்தில் வயர்லெஸ் மற்றும் நெட்வொர்க் செட்டிங் செல்லவும்.

மொபைல் நெட்வொர்க்ஸ்

ஸ்டெப் 2:

பின்பு மொபைல் நெட்வொர்க்ஸ் தேர்ந்தெடுக்கவும்.

நெட்வொர்க்

ஸ்டெப் 3:

இப்போது நெட்வொர்க் செயல்பாட்டை தட்டவும் பின்பு ஆட்டோமேட்டிக்கலி அதாவது தானாகவே என்பதை தேர்வு செய்யவும்.

அப்டேட்

முறை 3 :

ஸ்மார்ட்போனை புதுபிக்கவும் அதாவது அப்டேட் செய்யவும்.
ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்காக பிரச்சனைகளை சரி செய்ய fix bugs பொறுத்துகின்றனர். இதை பயன்படுத்தி நெட்வர்க் பிரச்சனையை சரி செய்து கொள்ள முடியும்.

ஃபேக்ட்ரி ரீசெட்

முறை 4:

ஃபேக்ட்ரி ரீசெட் நெட்வொர்க் பிரச்சனைக்கான சரியான முடிவு.
ஃபேக்ட்ரி ரீசெட் செய்வதால் நெட்வொர்க் பிரச்சனையை விரைவாக சரி செய்ய முடியும். இதை செய்ய கீழே உள்ள வழி முறைகளை பின் பற்றவும்.

பேக் அப் மற்றும் ரீசெட்

ஸ்டெப் 1:

டிவைஸ் செட்டிங் சென்று பேக் அப் மற்றும் ரீசெட் தேர்வை தேர்வு செய்யவும்.

 ஃபேக்ட்ரி டேட்டா ரீசெட்

ஸ்டெப் 2 :

பின் ஃபேக்ட்ரி டேட்டா ரீசெட் (Factory Data Reset) என்று தேர்வு செய்யவும் அவ்வளவுதான். இப்படி செய்வதால் நெட்வர்க் பிரச்சனை இருந்த இடம் தெரியாமல் சென்று விடும்.

ரேடியோ சிக்னல் டெஸ்ட்

முறை 5:

அடுத்த முறை ரேடியோ சிக்னல் டெஸ்ட்
நெட்வொர்க் பிரச்சனையை சரி செய்ய அடுத்த முறை ரேடியோ சிக்னல் டெஸ்ட். இதற்கான ஸ்டெப்ஸ் இதோ இங்கே.

டெஸ்டிங் மெனு

ஸ்டெப் 1:

* # * # 4636 # * # * என்ற ஸ்டெப்பை டயல் செய்யவும். இதை செய்தவுடன் டெஸ்ட் செய்வதற்கான டெஸ்டிங் மெனு (Testing Menu) கிடைக்கும்.

தகவல் பரிவர்தனை

ஸ்டெப் 2:

அதில் போனுக்கான தகவல் பரிவர்தனையை (phone information option) தேர்வு செய்து, பின் பிங் டெஸ்டை ரன் செய்யவும்

ரீ ஸ்டார்ட்

ஸ்டெப் 3:

இதன் பின் ஸ்மார்ட் போனை ரீ ஸ்டார்ட் செய்யவும்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
How to Fix 'Mobile Network Not Available' Error on your Android Phone. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot