டச் ஸ்கிரீன் பிரச்சனைகளை சரி செய்வது எப்படி
இன்று அனைவரும் டச் ஸ்க்ரீன் போன்களை பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றனர். ஸ்மார்ட்போன் முதல் டேப்ளெட் மற்றும் கணினி திரை என எல்லாமே டச் ஸ்கிரீன் எனும் தொடுதிரை மயமாகி இருக்கும் காலத்தில் பல கருவிகளில் டச் ஸ்கிரீன் திடீரென வேலை செய்யாமல் போகின்றது.
இது போன்று டச் ஸ்கிரீன் திடீரென ஹேங் ஆகும் பிரச்சனை ஏற்பட்டால் அதனினை எப்படி சரி செய்ய வேண்டும் என்று அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

ஸ்விட்ச் ஆஃப்
கருவியை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு சிறிது நேரம் கழித்து மீண்டும் முயற்சி செய்யலாம். இவ்வாறு செய்யும் போது கருவியில் ஏற்பட்டிருக்கும் மென்பொருள் சார்ந்த பிரச்சனைகள் சரியாக நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

சிம் கார்டு
சிம் கார்டு, மெமரி கார்டு ஆகியவற்றை கழற்றி ஸ்விட்ச் ஆப் செய்து மீண்டும் ஆன் செய்து பாருங்கள், சில சமயங்களில் சிம் மற்றும் மெமரி கார்டுகளில் ஏதும் பிரச்சனை நேர்ந்திருக்கலாம்.

டாக்குமென்டேஷன்
இந்த பிரச்சனை ஏற்படும் போது அவற்றை சரி செய்ய சிலபட்டன்களை அழுத்தி சரி செய்ய முடியுமா என்பதை பாருங்கள்.

அப்டேட்
கருவியின் மென்பொருளை அப்டேட் செய்வதன் மூலம் இந்த பிரபச்சனையை சரி செய்ய முடியும்.

சுத்தம்
கருவியை ஸ்விட்ச் ஆஃப் செய்து நன்கு சுத்தம் செய்யுங்கள்.

ரீசெட்
கடைசியாக ரீசெட் தான் செய்ய வேண்டும், இதை மேற்கொள்ளும் போது கருவியில் பதிவு செய்யப்பட்டிருக்கும் தகவல்கள் அழிந்து விடும்.

போன் தயாரிப்பாளர்
இவை எதுவும் செய்தும் சரி ஆகவில்லை என்றால் போன் தயாரிப்பாளரிடம் தான் கொண்டு செல்ல வேண்டும்.

டூல்ஸ்
உங்களிடம் சரியான டூல்ஸ் இருந்து தைரியமாக சரி செய்ய முடியும் என்றால் போனினை திறந்து கன்ட்ரோல் போர்டை சுத்தம் செய்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications