எவ்வித மொபைல் போன்களிலும் IMEI நம்பரை கண்டறிவது எப்படி

Posted By:

ஸ்மார்ட்போன்களை ரெஜஸ்டர் செய்யும் போதும் அல்லது ஆன்லைன் மூலம் மொபைலை விற்கும் போதும் உங்களது மொபைல் போனின் IMEI நம்பர் தேவைப்படும். IMEI நம்பர் என்பது சர்வதேச மொபைல் குறியீட்டு எண் ஆகும், இதன் மூலம் தொலைந்த போன மொபைல்களை கண்டுபிடிக்க அல்லது முடக்க முடியும். அவ்வாறு உங்களது மொபைல் போனின் IMEI நம்பரை தெரிந்து கொள்வது எப்படி என்று பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
கோடு

USSD code

எவ்வித போன் ஆனாலும் அதன் IMEI நம்பரை கண்டறிய இந்த கோடை பயன்படுத்தினால் எளிமையாக தெரிந்து கொள்ளலாம்.

அழைப்பு

அழைப்பு

உங்களது மொபைல் போனில் இருந்து *#06# என டைப் செய்து கால் பட்டனை அழுத்தினால் உங்களது போனின் IMEI நம்பர் ஸ்கிரீனில் தெரியும்.

ஐபோன்

ஐபோன்

ஐபோன் 5 அல்லது அதை விட புதிய ஐபோன் என்றால் பேக் பேனலில் IMEI நம்பர் அச்சிடப்பட்டிருக்கும், ஐபோன் 4 எஸ் அல்லது பழைய ஐபோன்களில் IMEI நம்பர் சிம் ட்ரேவில் இருக்கும்.

செட்டிங்ஸ்

செட்டிங்ஸ்

ஆன்டிராய்டில் செட்டிங்ஸ் - அபவுட் - IMEI சென்று IMEI நம்பரை பார்க்கலாம்.

ஐபோன்

ஐபோன்

ஐபோனில் செட்டிங்ஸ் - ஜெனரல் - அபவுட் சென்று IMEI ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

பில்

பில்

போன் வாங்கும் போது உடன் கொடுக்கப்படும் அட்டை பெட்டியில் IMEI நம்பர் எழுதப்பட்டிருக்கும், அல்லது மொபைல் வாங்கும் போது உங்களிடம் கொடுக்கப்படும் பில் சீட்டிலும் IMEI குறிப்பிடப்பட்டிருக்கும்.

ஆன்டிராய்டு

ஆன்டிராய்டு

ஆன்டிராய்டு போன் வைத்திருப்பவர்கள் போன் தொலைந்து போனாலும் IMEI நம்பரை தெரிந்து கொள்ள முடியும்.

கூகுள் அக்கவுன்ட்

கூகுள் அக்கவுன்ட்

ஆன்டிராய்டு போனில் பயன்படுத்தப்பட்ட கூகுள் அக்கவுன்ட் மூலம் கூகுள் டேஷ் போர்டில் லாக் இன் செய்ய வேண்டும்.

ஆன்டிராய்டு

ஆன்டிராய்டு

அங்கு பச்சை நிற ஆன்டிராய்டு லோகோவின் பக்கத்தில் இருக்கும் ஆன்டிராய்டு ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

சர்வதேச மொபைல் குறியீட்டு எண்

IMEI

இதில் கூகுள் அக்கவுன்டில் பதிவு செய்யப்பட்டிருக்கும் கருவிகளின் IMEI நம்பரை காண்பிக்கும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
How to Find IMEI Number of Any Phone. Check out here some easy and simple ways to Find IMEI Number of Any Phone.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot